Friday, September 28, 2012

வறுத்தரைத்த சாளை மீன் குழம்பு & ஃப்ரை/ Sardines fish curry & Fry




தேவையான பொருட்கள்;
சாளை மீன் - 12
புளி - எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் -1
பூண்டு - 4 பல்

வறுத்து அரைக்க :
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
மிளகு - 10
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் -2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
தாளிக்க :
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
கடுகு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது.

மீனை செதில் நீக்கி தலை வயிறு பகுதி கழிவு நீக்கி நன்கு கழுவி தண்ணீர் வடிகட்டவும்.புளியை கரைத்து வைக்கவும்.


கடாயில்  மேல் குறிப்பிட்டவற்றை சிவற வறுக்கவும்.

வறுத்து அரைத்த விழுதுடன் தேவைக்கு தண்ணீர், உப்பு  சேர்த்து மண் பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும்.கீறிய பச்சை மிளகாய் பூண்டு பல் சேர்க்கவும். நன்கு கொதிவரவும் புளித்தண்ணீர் சேர்க்கவும்.பச்சை வாடை மடங்கும் வரை கொதிக்க விடவும்.

மீன் சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.  
ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் காயவிட்டு கடுகு,கருவேப்பிலை  போட்டு வெடிக்கவும்,வெங்காயம் பொன்னிறமாக வதக்கி தயாரான மீன் குழம்பில் சேர்த்து கலந்து விடவும்.சிம்மில் 5 நிமிடம்  வைத்து உப்பு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும்.
சுவையான வறுத்தரைத்த சாளை மீன் குழம்பு ரெடி.
இந்த மீன் குழம்பு மூன்று நாள் வைத்திருந்தாலும் கெடாது.கைபடாமல் சூடு படுத்தி வைக்க வேண்டும்.பழைய மீன் குழம்பு சூப்பராக இருக்கும்.தக்காளி சேர்க்காமல் செய்த மீன் குழம்பு பக்குவமாக செய்தால் அருமையாக இருக்கும்.

மீன் பொரிக்க :
சாளை மீன் - 12
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள், மிளகு, சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன்
வினிகர் அல்லது எலுமிச்சை சாறு -1- 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கு.
குறிப்பிட்டவற்றை சிறிது தண்ணீர் சேர்ந்து கலந்து  மீன் மீது பூசி ஒரு மணி நேரம் வைக்கவும்.


ஒரு டப்பாவில் 2 டேபிள்ஸ்பூன் கோதுமை மாவு, ப்ரெட் கிரம்ஸ் 1 டேபிள்ஸ்பூன், சிறிது உப்பு கலந்து வைக்கவும். 
கலந்த மாவில் ஊறிய மீனை பிரட்டி சிறிது நேரம் வைக்கவும்.
கடாயில் தேவைக்கு எண்ணெய் சேர்த்து நன்கு சூடு வரவும் ரெடி செய்த மீனை போட்டு இரு பக்கமும் சிவற பொரித்து எடுக்கவும்.

சுவையான சாளை மீன் ஃப்ரை ரெடி. இதனை சும்மாவே நெத்திலி ஃப்ரை மாதிரி ஸ்டார்டராகவும் பரிமாறலாம்.

ஈசி சாளை மீன் குழம்பு & ரோஸ்ட் பார்க்க இங்கு கிளிக்கவும்



12 comments:

angelin said...

சாளை மீன் என்கிறது மத்தி என்று சொல்வாங்களே sardines
அதுதானே ஆசியா ..மிகவும் நல்லதின்னு சொல்வாங்க ..

என் கணவருக்கு பிடிக்கும் ஃபிரஷா கிடைச்சதும் இந்த முறையில் செய்துவிட்டு சொல்கிறேன்

Asiya Omar said...

ஆமாம் ஏஞ்சலின், சீப் & பெஸ்ட் மீன்..முள் பார்த்து சாப்பிடனும்.உடன் கருத்திற்கு மகிழ்ச்சி.

Divya Pramil said...

Wow that fish gravy and fry are just awesome!! Loved it :) The cheapest and best Indian fish variety...Gravy sounds so yum akka :)
Simple Chicken Biryani - Using Normal Rice
Inviting You To Join In The South Vs North Challenge - Learn Regional Indian Recipes

ராதா ராணி said...

மீன் குழம்பும், ஃப்ரையும் சூப்பர்..

விச்சு said...

பார்க்கும்போதே அழகா இருக்கு.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா... புரட்டாசி மாதம் அதுவுமா... இப்படி (பல தளங்களில்) பதிவிட்டு அசத்துறீங்களே... நன்றி சகோதரி...

Sangeetha Nambi said...

OMG ! its tempting me to taste it right away Asiya...
http://recipe-excavator.blogspot.com

ஸாதிகா said...

வாவ்..தோழி,சாளை மீனை வெகு வித்தியாசமாக சமைத்து இருக்கீங்க.மீன் பிடிக்காத எனக்கு கூட இந்த சாளை மீனை விரும்பி சாப்பிடுவேன்,அதிலும் மாங்காய் துண்டுகள் சேர்த்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.ஒரு முறை மீன் குழம்பில் உள்ள மீனை குழம்பை நன்கு வடித்து விட்டு நான்ஸ்டிக் தவாவில் எண்னெய் விட்டு வறுத்து சாப்பிட்டு பாருங்களேன்...அதுசரி சட்டி புதுசா?:‍‍)

Vijayalakshmi Dharmaraj said...

sorry dear no comments... why? am veg he he he...

Join in my first event - FEAST FOR YOUR GURU
VIRUNTHU UNNA VAANGA

Easy (EZ) Editorial Calendar said...

படத்தில் பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்கிற ஆசையை தூண்டுகிறது...கண்ணடிப்பா இதை சமைத்து பார்த்து விட்டு சொல்லறேன்..பகிர்வுக்கு மிக நன்றி...

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

S.Menaga said...

படத்தினை பார்க்கும் போதே சுவை தெரிகிறது..இந்த மீன் குழம்பிற்கு மாங்காய் சேர்த்து செய்தால் அபாரா ருசிதான்....

Priya said...

Slurp, suda suda sadhamoda intha kuzhambu fry ippo saapita yeppadi irrukum, mouthwatering here.