Sunday, September 23, 2012

பச்சைப் பயறு கறி /கோதுமை மாவு புட்டு/ Green Gram Curry


தேவையான பொருட்கள்;
பச்சைப்பயறு - 100 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் நறுக்கியது - 1
இஞ்சி நறுக்கியது - 1 டீஸ்பூன்
பூண்டு நறுக்கியது - 1 டீஸ்பூன் 
மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு,சீரகம் - தலா அரை டீஸ்பூன்
கருவேப்பிலை,மல்லி இலை - சிறிது
அரைத்த தேங்காய் விழுது - 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
உப்பு -தேவைக்கு 
பச்சைப்யறை நான்கு மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து வேக வைத்து வைக்கவும்.

 கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,சீரகம்,கருவேப்பிலை தாளித்து ,பொடியாக நறுக்கிய இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் சேர்க்கவும்,உப்பு சேர்த்து வதக்கவும்.விரும்பினால் தேங்காய் விழுது சேர்க்கவும்.
 தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்க்கவும்.கொதிவரவும் வேகவைத்த பாசிப்பயறை சேர்த்து திரும்பவும் கொத்திக்க விட்டு,நறுக்கிய மல்லி இலை சேர்த்து பிரட்டி இறக்கவும்.
 சுவையான பச்சைப் பயறு கறி ரெடி.


கோதுமைமாவு புட்டு ரெசிப்பி பார்க்க  இங்கே கிளிக்கவும்.

இதனை பூரி,சப்பாத்தி,வெறும் சோறு,புட்டு ஆகியவற்றுடன் பரிமாறலாம்.
ஆல் இந்தியா டூர் போன சமயம் ஹரித்துவாரில் சப்பாத்தி,பூரிக்கு இந்த கறி தான், பெரிய இரும்பு வாணலியில் ரோட்டுக்கடைகளில் ரெடியாக இருக்கும்.அங்கு சாப்பிட்டதில் கரம் மசாலா சுவையும்,கொஞ்சம் இனிப்பு சுவையும் தெரிந்தது,விரும்பினால் கால் டீஸ்பூன் கரம் மசாலா சேர்க்கலாம்.தேங்காய் சேர்க்காமலும் செய்யலாம்.

13 comments:

ஸாதிகா said...

புட்டுக்கு எப்பவுமே தேங்காய்ப்பூ சர்ரகரை நெய்தான்.நீங்களோ வித்த்யாசமாக கோதுமைமாவில் புட்டு செய்து வித்தியாசமான சைட் டிஷையும் அறிமுகப்படுத்திவிட்டீர்கள்.டிரை பண்ணிவிடுகிறேன்.

Asiya Omar said...

ஒவ்வொரு முறையும் ஒரு மாதிரி செய்வேன்,உங்க டேஸ்டிற்கு தகுந்தபடி மசாலா சேர்த்தும் செய்யலாம் ஸாதிகா.பிஸியான நேரத்தில் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி.

athira said...

வாவ்வ்வ் புடுக்கு சூப்பர்தான்.. நல்ல கறி, உடம்புக்கும் குளிர்மை.

Vimitha Anand said...

Nice combo... love gothumai puttu

VijiParthiban said...

மிக அருமை.....

angelin said...

பச்சை பயறு கூட்டு அருமையா இருக்கே ..நான் இதை சப்பாத்திக்கு செய்து பார்க்கிறேன் இன்று .பகிர்வுக்கு நன்றி ஆசியா

சே. குமார் said...

பச்சைப் பயறு கூட்டு அருமையா இருக்கே அக்கா...
படங்களுடன் விளக்கம் அருமை.

Sangeetha Nambi said...

Real healthy and tasty combo...
http://recipe-excavator.blogspot.com

அமைதிச்சாரல் said...

இந்தக் கறியை இங்கே உசல்ன்னு சொல்லுவோம். கரம் மசாலா சேர்த்தா ரொம்பவே வித்தியாசமா இருக்கும்.

பகிர்விற்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களுடன் விளக்கம் அருமை...

வீட்டில் குறித்துக் கொண்டார்கள்...

மிக்க நன்றி...

Jaleela Kamal said...

பச்சைபயிறு கறி நல்ல இருக்கு ,நான் ஆப்பத்துக்கு செய்வேன். கோதுமை புட்டு செய்ததில்லை

Poorani Bala said...

Hi Asia

Good work ma, I have seen ur vathal kulumbu recipe going to try .

Poorani Bala said...

Hi Asia

Good work ,I am going to try ur vathal kulumbu recipe this week,let u know how it turned out?