Monday, September 3, 2012

நீலகிரி மட்டன் பிரியாணி/ Nilgiris Mutton Briyani

தேவையான பொருட்கள்;
பாசுமதி அரிசி - அரைக்கிலோ
மட்டன் - அரைக்கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
ஹோல்கரம் மசாலா பவுடர் - 1- ஒன்னரை டீஸ்பூன்
ஏலம், கிராம்பு, பட்டை சிறிய துண்டு - தலா இரண்டு
முழு மிளகு - கால்டீஸ்பூன்
பிரிஞ்சி இலை - 1
அன்னாசிப்பூ - 1
வெங்காயம் - 150 கிராம்
தயிர் - 100 மில்லி
எலுமிச்சை பழம் - சிறியது 1
நறுக்கிய மல்லி,புதினா - தலா அரைகப்
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் நெய் - கலவை - 150 மில்லி (தலா 75 மில்லி)
உப்பு - தேவைக்கு.

தேவையான பொருட்களை முதலில் ரெடியாக எடுத்து வைக்கவும்.அரிசியை ஊறவைக்கவும், மட்டனை கழுவி சுத்தம் செய்து தண்ணீர் வடிகட்டவும்.

அரைத்துக் கொள்ள:
முந்திரி - 25 கிராம் (ஊற வைத்து அரைக்கவும்)
150 கிராம் வெங்காயம் நறுக்கி சிறிது தண்ணீர் விட்டு வேக வைத்து,ஆற விட்டு அரைத்து எடுக்கவும்.
நறுக்கிய அரை கப் மல்லி, அரை கப் புதினா, பச்சை மிளகாய் -3,தயிர் 50 மில்லி விட்டு அரைத்து எடுக்கவும்.

மல்லி,புதினா,மிளகாய் தயிர் விட்டு அரைத்து எடுக்கவும். தயிர் சேர்ப்பதால் பச்சை நிறம் மாறாமல் இருக்கும். ஊசி மிள்காயாக இருந்தால் பார்த்து சேர்க்கவும்.காரம் அதிகம் இருக்கும்.

வெங்காயம் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்து, ஆற விட்டு அரைத்து எடுக்கவும்.


மட்டனுடன் முக்கால் டீஸ்பூன் கரம் மசாலா பவுடர் ,1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 50 மில்லி தயிர், உப்பு சேர்த்து மூன்று விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
பிரியாணி செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் நெய் விட்டு காய்ந்தவுடன்,ஏலம்,பட்டை,கிராம்பு,அன்னாசிப்பூ,மிளகு,பிரிஞ்சி இலை போட்டு வெடிக்கவும், மிதி ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு சிம்மில் வைத்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு வதங்கி மணம் வந்தவுடன், அரைத்த வெங்காயம் பேஸ்ட் போட்டு நன்கு வதக்கவும்.
பின்பு அரைத்த மல்லி,புதினா,மிளகாய்,தயிர் பேஸ்ட் சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
அரைத்த முந்திரி பேஸ்ட் சேர்க்கவும்.வதக்கவும்.

வேக வைத்த மட்டன் சேர்க்கவும்.வேக வைத்த தண்ணீர் இருந்தாலும் சேர்க்கவும்.
மட்டனுடன் மீதி கரம் மசாலா பவுடர்,மல்லித்தூள் சேர்க்கவும்.வதக்கி விடவும்.வதக்கிய கலவை மட்டனுடன் நன்கு சேர்ந்து வருமாறு பிரட்டி விடவும்.

மசாலா மட்டனுடன் சார்ந்து எண்ணெய் மேல் வர வேண்டும்.

தண்ணீர் அரிசியின் அளவிற்கு இரண்டு மடங்கு வைக்கவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.அரிசியின் தரம் பொறுத்து தண்ணீர் அளவு வேறுபடும்.

ஊறவைத்த அரிசியை சேர்க்கவும். நன்கு கலந்து விடவும்.அடுப்பை மீடியமாக வைக்கவும்.

அரிசி வெந்து நன்கு மேலெம்ழுபி வரும் பொழுது,எலுமிச்சை பழம் பிழிந்து பிரட்டி விட்டு அலுமினியம் ஃபாயில் போட்டோ அல்லது சாதாரணமாக மூடியை சிக்கென்று மூடி பிரியாணி அடி பிடிக்காமல் இருக்க கீழே பழைய தோசைக்கலம் வைத்து அடுப்பை சிம்மில் வைத்து கால் மணி நேரம் தம் போடவும். அடுப்பை அணைத்து மீண்டும் கால் மணி நேரம் கழித்து திறக்கவும்.
ஒரு போல் பக்குவமாக உதிரியாக வருமாறு பிரட்டி விட்டு எடுக்கவும்.

கமகமக்கும் நீலகிரி மட்டன் பிரியாணி ரெடி. இது பார்ப்பதற்கு ஆலிவ் கிரீன் கலரில் இருக்கும்.
பிரியாணியை நீங்கள் விரும்பும் சைட் டிஷ் உடன் பரிமாறவும்.

முக்கியக் குறிப்பு:
இது அண்ணன் செஃப் சல்மான் சம்சுதீன்(ஜித்தா,ஹில்டன்) அவர்கள் ஐடியா படி செய்தது.அண்ணன் என் சமையலை பார்த்து விட்டு இது அப்படி செய்யக் கூடாது,அது இப்படி செய்யக் கூடாதுன்னு ஒரு முறை கருத்து சொன்னாங்க, நமக்கா சமாளிக்க தெரியாது, அண்ணன் இது வீட்டு சமையல் அப்படி தான் இருக்கும் என்றேன். இந்த பிரியாணியில் சாமான் அளவு என் இஷ்டம் போல் சேர்த்து கொண்டேன். நீங்களும் உங்க டேஸ்ட்டிற்கு தகுந்த படி கூட்டி குறைத்து கொள்ளலாம். இதில் ஹோல் கரம் மசாலா பவுடர் சேர்ப்பது தனிச் சிறப்பு.


17 comments:

Sangeetha Nambi said...

My hubby's favy rice...
http://recipe-excavator.blogspot.com

சே. குமார் said...

அழகிய படத்துடன் அருமையா சொல்லியிருக்கீங்க அக்கா.

வாழ்த்துக்கள்.

சிநேகிதி said...

நீலகிரி மட்டன் பிரியாணி அசதலாக இருக்கு.. படங்களும் அருமை

அமைதிச்சாரல் said...

நல்லாருக்குது ஆசியா..

ஸாதிகா said...

பரங்கிப்பேட்டை பிரியாணி நெல்லை பிரியாணி வரிசையில் இப்ப நீலகிரி பிரியாணியா .பலே.பார்க்கவே அருமையாக உள்ளது தோழி

Chitra said...

will try the same with vegetables..looks yummy..

திண்டுக்கல் தனபாலன் said...

கலக்கலா இருக்கு... செய்து பார்ப்போம்... நன்றி...

Asiya Omar said...

சங்கீதா முதல் வருகைக்கு மிக்க நன்றி.

குமார் மிக்க நன்றி.

சிநேகிதி மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

ஸாதிகா மிக்க நன்றி.மகிழ்ச்சி.இதெல்லாம் சும்மா படம் காட்டுவது தான்செய்து பாருங்க தோழி.

சித்ரா காய்கறி வைத்து செய்தாலும் சூப்பராக இருக்கும்.மிக்க நன்றி,வருகைக்கு மகிழ்ச்சி.

திண்டுக்கல் தனபாலன் சார் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Jaleela Kamal said...

மிக அருமை ஹோல் கரம் மசாலா மற்ற சமையல்களில் லேசா தூவினாலே வீடு கம கமக்கும்.

இது பிரியாணியில் கேட்கவே வேண்டாம் மணம் கண்டிப்பாக அருமைஅயக இருக்கும்

தட்டில் பரிமாறியவிதம் மிக அருமை.

இதில் தக்காளி இல்லை, அவனுக்கு தான் இது போல் பிடிக்கும் , என் பெரிய பையன் வந்தால் இதை செய்து கொடுக்கனும்.

Priya said...

Virunthuku veetuku varalama?? Super flavourful briyani.

Asiya Omar said...

ஜலீலா கருத்திற்கு மிக்க நன்றி.ஒரு முறை செய்து பாருங்க,பிடிக்கும்.

ப்ரியா மிக்க மகிழ்ச்சி.
வாங்க,வாங்க,செய்து பாருங்க..

Shama Nagarajan said...

delicious..Join me in Fast Food event-Pasta and Know your Sweetness -Honey event in my blog

ஹேமா said...

வாசிக்கவே வாசனை வருதே...!

S.Menaga said...

இதையும் செய்து பாத்துட வேண்டியதுதான்,சூப்பரா இருக்கு...

Asiya Omar said...

ஷாமா மிக்க நன்றி.

ஹேமா மிக்க நன்றி.

மேனகா மிக்க நன்றி.செய்து பாருங்க..

Shiva Bhaskar said...

ஹோல் கரம் மசாலா என்றால் என்ன? அதை எப்படி தயார் செய்வது? Is there any branded whole Garam masala available in the market?

Asiya Omar said...

ஹோல் கரம் மசாலா பேக் யு.ஏ.இ.யில்
ஷாமா (shama brand) கிடைக்கிறது.அதனில் கிட்ட தட்ட 10 பொருட்கள் மிக்ஸ் ஆகி இருக்கும்,அதனை வறுத்து பொடி செய்து வைத்துள்ளேன்.ஏலம்,(கருப்பு,பச்சை)பட்டை,கிராம்பு,சீரகம்,
கருஞ்சீரகம்,சோம்பு,மல்லி,மிளகு,ஜாதிக்காய் அன்னாசிப்பூ,பிரியாணி இலை இப்படி கலந்து இருந்தது.ஹோல் கரம் மசாலா பவுடர் நிச்ச்யமாய் மார்க்கெட்டில் இருக்கும்.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.