Sunday, October 14, 2012

வெண்டைக்காய் மாசிச் சம்பல்

தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - கால் கிலோ
வெங்காயம் - 100 கிராம்
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
மாசித்தூள் - 2 -3 டீஸ்பூன்
(ஒரு சிறிய துண்டு மாசி + மிளகாய் வற்றல் சுட்டது+ சிறிது உப்பு - சேர்த்து இடித்து கொள்ளவும்)
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு.

வெண்டைக்காயை நன்கு கழுவி துடைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயமும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காயவும் கடுகு,உ.பருப்பு,வற்றல் கிள்ளி போட்டு கருவேப்பிலை போட்டு வெடிக்கவும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிறிது வதக்கவும்,பின்பு நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து நன்கு வதக்கி சிறிது உப்பு சேர்த்து பிரட்டவும். மாசித்தூளில் உப்பு இருக்கும் பார்த்து சேர்க்கவும்.பின்பு ரெடி செய்த மாசித்தூள் சேர்த்து வதக்கி அடுப்பை சிம்மில் வைத்து மூடவும்.

அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும்.
சுவையான வெண்டைக்காய் மாசிச் சம்பல் ரெடி.
இது ப்லைன் ரைஸ் உடன் பக்க உணவாகப் பரிமாறலாம்.

மாசிச்துவையல் குறிப்பு பார்க்க கிளிக்கவும்.
மாசிச் சம்பல் குறிப்பு பார்க்க  கிளிக்கவும்.

8 comments:

சே. குமார் said...

இது எங்க அறையில் அடிக்கடி செய்வோம்.. வெண்டக்காய் மாசி என்று சொல்வதில்லை... பொரியல் என்று சொல்லுவோம்.... அருமையாக இருக்கும் அக்கா.

Sangeetha Nambi said...

Different post...
http://recipe-excavator.blogspot.com

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர்...

எனக்கு ரொம்ப பிடிக்கும்... நன்றி....

athira said...

முன்ப்ய் முட்டைபோட்டு, இம்முறை மாசி போட்டோ.. சூப்பர்...

Priya said...

Super sambal..

Asiya Omar said...

கருத்து தெரிவித்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

Asiya Omar said...

இது ஜலீலாவின் கமெண்ட்...

வெண்டைக்காய் மாசி பொரியல்,
ஆசியா என்ன பிராப்ள்முன்னு தெரியல நிறைய பிலாக்குக்கு கமெண்டே செண்ட் ஆக மாட்டுங்கிறது.

கீழே உள்ளது என் கமெண்ட்/
மாசி சூடு + வெண்டைக்காய் குளுமை
காம்பினேஷன் சூபப்ர். அப்படியே எனக்கே அரை க்கிலோ அளவுக்கு வேண்டுமே ஆசியா... //

Jaleela Kamal said...

இப்ப கமெண்ட் போகுதான்னு முயற்சி செய்து பார்க்கலாம் என்று வந்தேன்.
ஓ அதற்குள் போட்டு விட்டீர்களா.