Wednesday, October 17, 2012

கேரட் போண்டா / Carrot Fritters


தேவையான பொருட்கள்;
கேரட் - 2 -3 மீடியம் சைஸ்
வெங்காயம் - 1
ஸ்பிரிங் ஆனியன்  அல்லது கொத்தமல்லி நறுக்கியது  - 2 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
மைதா - ஒரு கப்
முட்டை - 1 (விரும்பினால்)
எண்ணெய் - 1 கப்
உப்பு - தேவைக்கு.

Serves - 4


கேரட்டை தோல் சீவி துருவி எடுத்துக் கொள்ளவும்.வெங்காயம் ,பச்சை மிளகாய், ஸ்பிரிங் ஆனியன் பொடியாக நறுக்கி அத்துடன் சேர்க்கவும்.

அத்துடன் ஒரு கப் மைதா சேர்க்கவும்.மிளகுத்தூள் சேர்க்கவும்.

தேவைக்கு உப்பும் சேர்த்து கலந்து கொள்ளவும், முட்டை சேர்க்க விரும்பாதவர்கள் இப்படியே வடை போல் தட்டி எண்ணெயில் இருபக்கமும் பொன் முறுகலாக பொரித்து எடுக்கலாம்.முட்டை சேர்த்தும் கலந்து கொள்ளலாம்.
கடாயில் எண்ணெய் காயவிட்டு வடை  போல் தட்டி போடவும்.மீடியம் நெருப்பில் பக்குவமாக இருபக்கமும் பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.

எண்ணெய் வடியவிட்டு டிஷ்யூ பேப்பரில் வைத்து எடுத்து பரிமாறவும்.

சுவையான கேரட் போண்டா ( ஃப்ரிட்டர்ஸ் )ரெடி.

 இதனை சும்மா சாப்பிட்டாலே சூப்பராக இருக்கும்.விரும்பினால் தேங்காய் சட்னி அல்லது டொமட்டோ சாஸுடன் பரிமாறவும்.


10 comments:

Priya said...

Inga mazhai adikuthu,suda rendu bonda yeduthukalama??

அமைதிச்சாரல் said...

ஹை.. ரொம்ப வித்தியாசமா இருக்கே.

ராதா ராணி said...

ஹையோ...அதெப்பிடி கிட்டத்தட்ட ஒரே மாதிரி ஆனா கொஞ்சம் வித்தியாசமா செய்திருக்கோம் ஆசியா..நம்பவே முடியேல்லை.. இந்த குறிப்பும் நல்லா இருக்கு...

திண்டுக்கல் தனபாலன் said...

வாவ்... இது போல் செய்ததில்லை...

நன்றி...

தமிழ் காமெடி உலகம் said...

ரொம்ப ஈசியா இருக்கு.....கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லறேன்.....பகிர்வுக்கு ரொம்ப நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

athira said...

ஆவ்வ்வ் சூப்பர். நான் ரீவியில் பார்த்தேன் கபேஜ்ஜில் செய்தார்கள் இதே போல ஆனா முட்டை சேர்க்கவில்லை, நாளைக்கு இதை கபேஜ் உடன் சேர்த்து ட்ரை பண்ணப்போறேன், காரணம் கபேஜ் ஆல ஃபிரிஜ் முட்டி வழியுது:).. கபேஜக் கண்டால் வாங்காமல் வரமாட்டேன் நான்:)

இமா said...

சுலபமான சுவையான குறிப்பு கொடுத்திருக்கிறீங்க ஆசியா. ஊர் ஞாபகம் வருகிறது எனக்கு. மழை தொடங்கினால் சின்னவருக்கு இப்படி ஏதாவது வேண்டும். கையில் கிடைக்கும் எல்லாக் காயும் கீரையும் போட்டுப் பொரித்துவிடுவோம். உங்கள் குறிப்பைப் பார்க்க சாப்பிடும் ஆசை வந்துவிட்டது.

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

மைதா கேரட் போண்டாவா அப்படியே பார்சல தள்ளுங்க

Akila said...

Wow very interesting n new recipe to me

Event: Dish name starts with P

மாதேவி said...

போண்டா நன்றாக இருக்கின்றது.

முட்டைகோஸ் கலந்தும் செய்வோம். சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.