Wednesday, October 10, 2012

மட்டன் கப்ஸா - அரபு ஸ்டைல் பிரியாணி / Mutton Kapsa

 தேவையான பொருட்கள்;
மட்டன் - கால்கிலோ
பாசுமதி அரிசி - கால்கிலோ
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் - அரைடீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
முழுமிளகு - கால் டீஸ்பூன்
காய்ந்த எலுமிச்சை - 1
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பட்டை - சிறிய துண்டு
பிரியாணி இலை-1
சாஃப்ரான் - 1 பின்ச்
நெய் - அல்லது பட்டர் - 50 கிராம்
உலர் திராட்சை - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

2 நபர்களுக்கு
மட்டனை முதலில் சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீர் வடிகட்டி,  மட்டன் துண்டுகளுடன் சில்லி பவுடர்,தயிர்,உப்பு ஊற வைக்கவும்.அரிசியையும் 10 நிமிடம் ஊறவைக்கவும்.வெங்காயம் நறுக்கியும்,தக்காளியை பேஸ்ட் செய்தும் வைக்கவும்.
குக்கரில் ஊறவைத்த மட்டன், இரண்டரை கப் தண்ணீர்,காய்ந்த லெமன்,மிளகு,ஏலம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை, தேவைக்கு உப்பு சேர்த்து நான்கு விசில் வைத்து இறக்கவும்.

கப்ஸா செய்யும் பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி,திராட்சை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
 நறுக்கிய வெங்காய்ம் வதக்கவும்,இஞ்சி பூண்டு பேஸ்ட், விரும்பினால் கால்ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.ஏற்கனவே ஏல்ம்,பட்டை,கிராம்பு சேத்து கறியை வேகவைத்து இருக்கிறோம்.

அரைத்த தக்காளி விழுது சேர்க்கவும். பிரட்டிவிட்டு நன்கு வதக்கவும்.


ஊறிய அரிசி சேர்க்கவும்.பக்குவமாக  மசாலா அரிசியில் சேரும் படி பிரட்டி விடவும்.
 வேக வைத்த மட்டனை சூட்டுடனே மட்டனில் இருக்கும் தண்ணீருடன் ஊற்றவும்.வேகவைக்கவும்.அரிசி வெந்து மேல் வரும் பொழுது அடுப்பை சிம்மில் வைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.பின்ச் சாஃப்ரான் சேர்க்கவும்.
மூடி  போட்டு சிம்மில் 10 நிமிடம் வைக்கவும். மீண்டும் பத்து நிமிடம் கழித்து திறக்கவும் ,சோறு உடையாதவாறு பிரட்டி பரிமாறவும்.பரிமாறும் முன்பு காய்ந்த  எலுமிச்சையை எடுத்து விடவும்.
வறுத்த முந்திரி,திராட்சை தூவி அலங்கரித்து  பரிமாறவும்.

மிளகாய்த்தூள் விரும்பினால் சேர்க்கலாம், கப்ஸா காரம் இல்லாமல் இருக்கும்.இது அரபு ஸ்டைல் பிரியாணி.இது ஏற்கனவே என் ஆங்கில ப்ளாக்கில் கொடுத்த குறிப்பு தான்..

நாங்கள் வெளியே வாங்கிய மந்தி ரைஸ் பகிர்வு உங்களுக்காக அரபிய உணவுகள் லிங்க்கில் முன்பு பகிர்ந்தது.உங்கள் பார்வைக்காக...இங்கே கிளிக்கவும்..

15 comments:

ஸாதிகா said...

கப்சா பிரியாணியில் மங்உஸ்தான் பழக்கொட்டைப்போன்ற ஒரு நறுமணப்பொருள் பயன்படுத்துவார்களே அதுதான் //காய்ந்த எலுமிச்சை - 1// யா?இதனை கடையில் எப்படி கேட்கவேண்டும்?அமீரகம் வந்திருந்த பொழுது சாப்பிட்ட அக்ப்ஸாவின் ருசி இன்னும் நாவை விட்டும் மறையவில்லை.உறவினர்கள் வரும் பொழுது எனக்காக மந்தி கப்சா பார்சல் வாங்கி வரத்தவறுவதில்லை.

Asiya Omar said...

ஸாதிகா நம்க்கு தான் அங்கு எலுமிச்சை கிடைக்கிறதே அதையே காயவைத்து பயன்படுத்தலாம்.ஒரு வாரம் எலுமிச்சையையை ஃப்ரிட்ஜில் கவர் செய்யாமல் சும்மா வைத்தாலே காய்ந்து விடும்.இங்கே நான் காய்ந்த எலுமிச்சை தான் வாங்கினேன்.மந்தி ரைஸ் நாங்களும் அடிக்கடி வாங்கி சாப்பிடுவதுண்டு..ஒரிஜினல் ஒரிஜினல் தான் இது நம்ம டேஸ்டிற்கு முயற்சி செய்தது.
நன்றி ஸாதிகா கருத்திற்கு மகிழ்ச்சி.

Divya Pramil said...

Sounds so yummy akka :) Wish I was there with you enjoy this :)
Arachuvitta Chicken Curry / South Indian Village Style Chicken Gravy
Inviting You To Join In The South Vs North Challenge - Learn Regional Indian Recipes

Sangeetha Nambi said...

Love the name....
http://recipe-excavator.blogspot.com

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து பார்ப்போம்... குறிப்பிற்கு நன்றி...

Vimitha Anand said...

Love this flavorful biryani.. delish

மஞ்சுபாஷிணி said...

மட்டன் கப்ஸா அரபி ஸ்டைல் பிரியாணி பார்க்க அருமையாக இருக்கிறதுப்பா.... கலர் கூட மாறாம இப்படி செய்ய வருவது மிக அழகுப்பா..

அன்பு வாழ்த்துகள் ஆசியாஉமர்.

அமைதிச்சாரல் said...

நல்லாருக்குங்க..

S.Menaga said...

பிரியாணி ரொம்ப நல்லாருக்கா....பார்சல் ப்ளீஸ்...

சிநேகிதி said...

அரபி ஸ்டைல் பிரியாணி பார்க்க அருமையாக இருக்கிறது

athira said...

ஆஹா சூப்பர் பிரியாணி ஆசியா. நான் நேற்று வந்து கள்ளமாக:) உங்கட அனைத்து பிரியாணிக் குறிப்பையும் படிச்சேன்ன்ன் ஏது செய்யலாம் என நினைச்சு...:) பின்பு எல்லாம் கலந்ததுபோல ஒரு ஐடியா எடுத்து சிக்கின் பிறியாணி செய்தேன்.

Priya said...

Attagasama irruku kapsa, mouthwatering here.

Jaleela Kamal said...

மிக அருமையானஅரபிகளின் கப்ஸா என் பெரிய பையக்னுகு ரொம்ப பிடிக்கும் , அவன் வந்தால் மட்டும் தான் செய்வது. அதுவும் ஒன்லி சிக்கன் கப்ஸா

Anonymous said...

ஆசியா கப்சா பிரியாணி பார்த்தாலே அருமையா இருக்கும் போல இருக்கு. நான் சைவம் ஆனா எங்க வீட்டுகாரருக்கு பிரியாணின்னா உயிர். உங்க சிக்கென் தால்ச்சா செஞ்சு பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாங்க

Asiya Omar said...

கருத்து தெரிவித்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.