Sunday, October 21, 2012

இறால் உருளைக்கிழங்கு கிரேவி & இறால் தக்காளி ஃப்ரை- Prawn Potato Gravy / Prawn Tomato Fry


இறால் உருளைக்கிழங்கு கிரேவி & இறால் தக்காளி ஃப்ரை



தேவையான பொருட்கள்;
இறால் - 1 கிலோ
உருளைக்கிழங்கு - 200 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
கரம் மசாலா - அரைடீஸ்பூன்
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
சில்லி பவுடர் - 2 + 1  டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
சீரக சோம்புத்தூள் - 1 டீஸ்பூன் (அல்லது தலா அரைடீஸ்பூன்)
மல்லி புதினா நறுக்கியது - கொஞ்சம்
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 2 +1 மீடியம் சைஸ்
வெங்காயம் - 2 மீடியம் சைஸ்
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன் +3 முந்திரி -பேஸ்ட்
எண்ணெய் - 3+1 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு

இறாலை தோல் நீக்கி சுத்தம் செய்து மேற்பக்கம் லேசாக கீறி கருப்பு அழுக்கு போன்ற பகுதியை எடுத்து,அரைடீஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு பிரட்டி  நன்கு அலசி தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி துண்டுகளாக்கி வைக்கவும்.

சுத்தம் செய்து தயார் செய்த இறாலுடன் 2 டீஸ்பூன் சில்லி பவுடர் ,இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 டீஸ்பூன்,தயிர் ,சிறிது உப்பு சேர்த்து விரவி வைக்கவும்.
இதில் பாதி ஃப்ரைக்கும் ,மீதி பாதியை கிரேவிக்கும் உபயோகிக்கலாம்.




கடாயில் எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன் விட்டு கருவேப்பிலை  வெங்காயம் சேர்த்து வதக்கவும், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு கரம் மசாலா சேர்க்கவும்.வதக்கவும்.நறுக்கிய தக்காளி இரண்டு ,மல்லி புதினா,பச்சை மிளகாய், சிறிது தேவைக்கு உப்பு சேர்த்து வதக்கவும்.நன்கு தக்காளி வெங்காயம் மசிந்து வரும் பொழுது மசாலா தூள் வகைகள் சேர்க்கவும்.நன்கு பிரட்டவும்.ரெடி இறாலில் பாதியை சேர்த்து வதக்கவும்.


இறால் வெந்து வரும் பொழுது வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.பிரட்டவும்

அரைத்த தேங்காய் முந்திரி பேஸ்ட்  கெட்டித்தனமைக்கு தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு சிம்மில் வைத்து எண்ணெய் மேல் வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.
சுவையான இறால் உருளைக்கிழங்கு கிரேவி ரெடி.

இறால் தக்காளி ஃப்ரை:
முதலில் இஞ்சிபூண்டு,தயிர்,சில்லி பவுடர் கலந்து ரெடி செய்த இறாலில் எடுத்து வைத்த பாதியை ஃப்ரைக்கு உபயோகிக்கவும்.
 ஒரு ஃப்ரை பேனில் எண்ணெய் விட்டு காயவும் கருவேப்பிலை போட்டு வெடிக்கவும் ஊறிய இறாலை சேர்க்கவும்.சிறிது தண்ணீர் ஊறி வற்றி வரும்.

பொடியாக நறுக்கிய  தக்காளி ஒன்றை சேர்க்கவும்.நன்கு பிரட்டி தக்காளி மசிந்து இறாலுடன் சேருமாறு வதக்கவும்.
சுவையான இறால் தக்காளி ஃப்ரை ரெடி.காரம் அவரவர் விருப்பத்திற்கு தேவைப்பட்டால் சில்லி பவுடர் சேர்க்கவும்.

இறால் நாடி ஃப்ரை:
விரும்புபவர்கள் ஒரு முறை முயற்சித்து பார்க்கவும்.
இறால் தலையில் இருக்கும் ஓடு கழிவை சுத்தம் செய்து சதைப்பற்றுடன் இருக்கும் நாடியை எடுத்து நன்கு சுத்தமாக பலதடவை அலசி தண்ணீர் வடிகட்டவும்.
அதனுடன் சிறிது உப்பு,இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைடீஸ்பூன் சேர்த்து விரவி வைக்கவும்.

 கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விடவும்.நான் ஸ்டிக் கடாய் கூட உபயோகிக்கலாம்.ரெடி செய்த இறால் நாடி போன்ற பகுதியை சேர்க்கவும்.
நன்கு தண்ணீர் வற்றி வறுபட்டு வரும்.

 தேவைக்கு சில்லி பவுடர் அல்லது சிக்கன் 65 மசாலா சிறிது சேர்த்து சிம்மில் வைத்து பிரட்டவும்.

 எண்ணெய் வடித்து எடுக்கவும்.பேப்பர் டவலில் வைத்து எடுத்து பரிமாறவும்.

சுவையான இறால் நாடி ஃப்ரை ரெடி.

இறால் விற்கிற விலைக்கு அதன் தலையே பாதி கழிந்து விடும்,அப்படி கழிக்காமல் தலைப்பகுதியில் உள்ள சதைப்பகுதியை  எடுத்து நன்கு சுத்தம் செய்து இப்படி வறுத்து சாப்பிட்டால் கூனி இறால் போல் ருசியாக இருக்கும்.இறால் சமையலில் உப்பு சிறிது அதிகமானால் கூட கடுக்கும்,  உப்பு பார்த்து சேர்க்கவும்..

ஆக இறால் வாங்கினால் இப்படி மூன்று விதமாக சமைத்து அசத்தலாம்.

8 comments:

இமா said...

மூன்றுமே யமி.

திண்டுக்கல் தனபாலன் said...

யப்பா... சூப்பர்ப்...

நன்றி...

சிநேகிதி said...

3 mey arumai...prawn my fav...

Priya said...

Yumm, inviting foods..

Divya Pramil said...

Drool-worthy recipes...Yum!!! :)
Simple Chilli Paneer - No Garlic No Ginger Recipe
You Too Can Cook Indian Food

சே. குமார் said...

மூன்று விதமான குறிப்புக்கள்...
அருமையா சொல்லியிருக்கீங்க அக்கா....
வரும் விடுமுறையில் செய்து பார்க்கலாம்...

athira said...

அவ்வ்வ்வ்வ்வ்:) எங்கட விரத காலத்தில இப்படி ஒரு ரெசிப்பியைப் போட்டது நியாயமோ? கர்ர்ர்ர்?:)))) என்னா சூப்பர்.... பார்க்கவே ஆசையா இருக்கு.

மாதேவி said...

இறால் சமையல்கள் அருமை.

இறால் நாடி எங்கள் அம்மா ப்ரை செய்வார்கள். பிள்ளைகளுக்கு பிடிப்பதில்லை என்பதால் நான் செய்வதில்லை.