Friday, October 5, 2012

உல்லித்தீயல் / Ullitheeyal



தேவையான பொருட்கள்:
உரித்த சின்ன வெங்காயம் - 20 எண்ணம்
சிறிய நாட்டு தக்காளி - 1 (விரும்பினால்)
புளி - எலுமிச்சை அளவு,  அரை கப் நீரில் ஊறவைக்கவும்
உப்பு - தேவையான அளவு


வறுத்து அரைக்க:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
சிவற  வறுத்து ஆற வைத்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
 தாளிக்க:
எண்ணெய் - 2  டேபிள்ஸ்பூன்
கடுகு - அரைடீஸ்பூன்
வெந்தயம் - கால்- அரைடீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1
மஞ்சள் தூள் , பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு.

பரிமாறும் அளவு - 3 நபருக்கு.



வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்து வரவும்,கடுகு,வெந்தயம்,வற்றல்,கருவேப்பிலை சேர்த்து வெடிக்க விடவும்.,சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.அத்துடன் நறுக்கிய தக்காளி,உப்பு  சேர்க்கவும். சிறிது வதங்கியதும் மஞ்ச்ள் , பெருங்காயம் தூள் சேர்த்து பிரட்டி விடவும்.


அரைத்த விழுதை சேர்க்கவும். நன்கு கலந்து விடவும். சிறிது நேரம் பிரட்டி விடவும்.

புளித்தண்ணீர் சேர்த்து தேவைக்கு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.
புளி வாடை தேங்காய் வாடை மடங்கி எண்ணெய்  சிறிது மேலே வரும்.இறக்கி பரிமாறவும்.


சுவையான உல்லித்தீயல் ரெடி. இதனை ப்லைன் ரைஸ் ஆப்பத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். காரம் அதிகம் விரும்புவோர் மிளகாய்த்தூள் சிறிது அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.


அபுதாபியில் நளாஸ் ஆப்பக் கடையில் இந்த உல்லித்தீயலும் ஆப்பமும் மிகவும் பிரசித்தம்,நான் அங்கு ருசித்து விட்டு செய்து பார்த்தது  தான் இது..

19 comments:

எல் கே said...

ஏற்கனவே யாரோ ஒருவர் சொல்லி , வீட்டில் செய்திருக்கிறோம். அருமையா இருக்கும்

திண்டுக்கல் தனபாலன் said...

பெயரே இப்பத் தான் கேள்விப்பட்றேன்...

செய்து பார்ப்போம்... நன்றி...

GEETHA ACHAL said...

வாவ்...ரொம்ப அருமையாக இருக்கின்றது...சூப்பர்ப்...உங்க அண்ணியும் ரொம்ப கொடுத்து வச்சவங்க...

Nithu Bala said...

arumai..looks inviting akka.

Vimitha Anand said...

My MIL makes this and I love it

Divya Pramil said...

Wow sounds so yummy and nice stepwise explanation akka :)
Mint Chutney For Chaat / Green Chutney / Pudhina Chutney
Inviting You To Join In The South Vs North Challenge - Learn Regional Indian Recipes

Jaleela Kamal said...

ரொம்ப் அருமை ஆசியா.
ஆப்பத்தோடு இன்னும் சூப்பராக இருக்கும்.

அமைதிச்சாரல் said...

உள்ளித்தீயல் அருமை. எங்க வீட்டில் வெறுமே உள்ளி மட்டும் போடாம பத்துப்பதினஞ்சு வெள்ளைப்பூண்டுகளையும் சேர்த்து வதக்கிச் செய்வேன். நம்மூரு உளுந்தஞ்சாதத்துக்கு அருமையான ஜோடி. வயித்துக்கும் நல்லது.

கோவை2தில்லி said...

அருமையான கேரள ரெசிப்பி. உங்க கைவண்ணத்தில் பிரமாதம்.

தமிழ் காமெடி உலகம் said...

ரொம்ப நல்லா இருக்கு...பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

angelin said...

தீயல் !! பார்க்கவே காரசாரமா இருக்கு ஆசியா ..எல்லா பொருளும் வீட்டில் இருக்கு செய்துவிடுவேன் இன்னிக்கே ..நன்றி உங்களுக்கும் உங்க அண்ணிக்கும்

Saraswathi Tharagaram said...

Love this simple theeyal.. Thanks for this authentic and traditional recipe...

S.Menaga said...

கேரள ரெசிபில கலக்குறீங்க,பார்க்கவே மிக அருமையாக இருக்கிறதுக்கா...

Vijayalakshmi Dharmaraj said...

wow very nice dear...
thanks for linking to my event...
VIRUNTHU UNNA VAANGA

athira said...

ஆஹா வித்தியசமா இருக்கே.. அதுவும் அவித்த கோழிமுட்டை:)) செய்து பர்க்கோணும். நீங்க உல்லி என்றதும், நாங்க பூண்டை உள்ளி என்போமெல்லோ.. அதில் தீயலாக்கும் என நினைச்சுட்டேன்.

Priya said...

Ulli theeyalum appalamum,yumm yum, saaptite irrukalam..superaa irruku.

Kavitha said...

ஆசியா,

கலரே செய்து பார்க்க தோன்றுது..

வாழ்த்துக்கள்

Tamilarasi Sasikumar said...

looks so good...love it...

மாதேவி said...

அருமையாக இருக்கின்றது.