Saturday, November 3, 2012

ஆலு கோபி ஃப்ரை / Aloo Gobi Fry


தேவையான பொருட்கள்;
நறுக்கிய உருளைக்கிழங்கு - 1 கப்
நறுக்கிய காளிப்ளவர் - 1 கப்
சாம்பார் பொடி -1- 2 டீஸ்பூன்
எண்ணெய் -1-  2 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
பூண்டு - 6 பல் அல்லது 2 பின்ச் பெருங்காயத்தூள்
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு.

நறுக்கிய உருளைக்கிழங்கு, காளிப்ளவரை சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து பாதி வேக்காடு வெந்து தண்ணீர் வடித்து எடுக்கவும்.வேக வைத்து ஃப்ரை செய்யும் பொழுது வேலை சுலபமாகவும் முடிந்து விடும்.பக்குவமாகவும் வரும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்து வரும் பொழுது கடுகு கருவேப்பிலை,தட்டிய பூண்டு சேர்த்து வதக்கவும்.வேகவைத்த உருளைக்கிழங்கு,காளிப்ளவரை சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.வெந்து முறுகலாக வரும் பொழுது தேவைக்கு சாம்பார் பொடி,உப்பு சேர்த்து சிம்மில் வைத்து பிரட்டவும்.நன்கு வதங்கிய பின்பு அடுப்பை அணைக்கவும்.


சுவையான ஆலுகோபி ஃப்ரை ரெடி.
இது சப்பாத்தி மற்றும் பருப்பு,சாம்பார்,தயிர் சாதத்துடன் பரிமாறலாம்.

என்னுடைய காளிப்ளவர் உருளை சப்ஜியை செய்து பார்க்க இங்கு கிளிக்கவும்.

16 comments:

Saraswathi Tharagaram said...

I love these both veggie..Yummy comboo..

Saras
Dish in 30 minutes event with Giveaway ~ sweets

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர்... செய்முறை குறிப்பிற்கு நன்றி...

ராதா ராணி said...

நல்லா இருக்கு ஆசியா.. செய்து பார்க்கனும்..

இமா said...

காம்பினேஷன் நல்லா இருக்கு ஆசியா. சும்மாவே சாப்பிடலாம் போல இருக்கே.

சிநேகிதி said...

அருமையாக வந்திருக்கிறது...

வெங்கட் நாகராஜ் said...

இங்கே மிகவும் பிரபலம்....

பகிர்வுக்கு நன்றி சகோ.

Vimitha Anand said...

I love this with chapathis. Awesome combo

கோவை2தில்லி said...

நானும் ஆலு கோபி செய்வேன் சப்பாத்திக்கு.. ஆனா பூண்டு சேர்த்ததில்லை.

செய்து பார்க்கிறேன்.

மஞ்சுபாஷிணி said...

இப்ப தான் ஆசியா காலிஃப்ளவரை நறுக்கி வெச்சுட்டு வந்தேன்பா...

நீங்க சொன்ன முறை ஹை ஈசியா இருக்கேப்பா...

அப்படியே செஞ்சுடறேன்... ஹப்பா....

அன்புநன்றிகள் ஆசியா சமையத்தில் உதவியதற்கு... அதாம்பா ஈசியா சமைத்து அதே சமயம் ருசியாகவும் இருக்கும் பதார்த்தம் பகிர்வு போட்டதுக்கு....

சப்பாத்திக்கு கண்டிப்பா நல்ல டிஷ்பா இது....

S.Menaga said...

சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன்!!

சுவனப் பிரியன் said...

இங்கும் இந்த டிஷ் பிரபலம். சுவையாகவும் இருக்கும்.

athira said...

சூப்பர், மிக அருமை.

Priya said...

Curd riceoda inth fry superaa irrukume.

Asiya Omar said...

கருத்து தெரிவித்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

Jay said...

wow...lovely...my all time fav..
Tasty Appetite

மாதேவி said...

நன்றாக இருக்கின்றது.