Monday, November 19, 2012

கோழி மிளகு பிரட்டல் / Pepper Chicken


இது மனோ அக்காவின் கறி மிளகு பிரட்டல் குறிப்பு பார்த்து நான் சிக்கனில் செய்து பார்த்தேன் .மிக அருமை.வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்தது.

இனி தேவையான பொருட்கள் :
சிக்கன் - அரைக்கிலோ
பரபரவென அரைத்த இஞ்சி,பூண்டு விழுது - தலா ஒரு மேஜைக்கரண்டி
மஞ்சள்,மல்லி,மிளகாய்த்தூள் - தலா அரை தேக்கரண்டி
நறுக்கிய சின்ன வெங்காயம் - 200 கிராம் அல்லது பெரிய வெங்காயம் - 2
தக்காளி நறுக்கியது - அரை கப்
கருவேப்பிலை - இரண்டு இணுக்கு
தேங்காய்த் துருவல் - 2 மேஜைக்கரண்டி 
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
உப்பு- தேவைக்கு.

 வறுத்து பொடிக்க:
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 1 மேஜைக்கரண்டி
பட்டை - 1 இஞ்ச் துண்டு
கிராம்பு - 2

மேற் சொன்ன பொருட்களை அடுப்பை சிம்மில் வைத்து மணம் வருமாறு வறுத்து எடுக்கவும்.வறுத்தவற்றை மிக்ஸியில் பொடிக்கவும்.அத்துடன்  தேங்காய்த்துருவல் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.

செய்முறை:
சிக்கனை  நன்கு சுத்தம் செய்து அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
சிக்கனுடன் மேலே குறிப்பிட்ட தூள் வகைகள், இஞ்சி பூண்டு சேர்த்து கலந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து வெங்காயம் நன்கு வதக்கவும்,தக்காளி,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.சிறிது உப்பு சேர்க்கவும்.நன்கு மசிந்து வரும் வரை வதக்கி விடவும்.
அத்துடன் ரெடி செய்த மசாலா கலந்த சிக்கனை சேர்த்து சிறிது நேரம் நன்கு  பிரட்டி,தேவைக்கு உப்பு சேர்த்து  குக்கர் என்றால் இரண்டு விசில் வரவும் அடுப்பை அணைக்கவும்.அல்லது சிக்கன் வேகும் வரை சிறிது தண்ணீர் தெளித்து பிரட்டி மூடி வேக வைக்கவும்.(நாம் இஞ்சி பூண்டு விழுதை சிக்கனுடன் சேர்த்து விரவாமல் வெங்காயம் வதங்கிய பின்பும் சேர்க்கலாம்).



சிக்கன் வெந்து இப்படி காணப்படும்.

 அத்துடன் அரைத்த விழுதை சேர்க்கவும்.நன்கு பிரட்டி அடுப்பை குறைத்து வைக்கவும். கெட்டியாக பிரட்டியது போல் வரும்,எண்ணெய் மேலெழும்பி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.


 சுவையான கோழி மிளகு பிரட்டல் ரெடி.

மட்டனில் செய்ய மனோ அக்காவின் கறி மிளகு பிரட்டல் குறிப்பை பார்க்க கிளிக்கவும்.


இதனை ப்லைன் ரைஸ், புலாவ்,சாம்பார் சாதம்,சப்பாத்தி,பரோட்டவுடன் பரிமாறலாம்.

9 comments:

Nandini said...

Very tempting pepper fry! Love to have with hot white rice!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது... நாங்களும் செய்து பார்த்திடுவோம்... நன்றி சகோதரி...

Vimitha Anand said...

I make this a bit different.. will try urs soon... Romba nalla irukku

சிநேகிதி said...

Parkum poluthey sapidanum pol iruku

ராதா ராணி said...

அருமையா இருக்கு மிளகு பிரட்டல் கறி ..செய்து பார்க்க வேண்டும்

Priya said...

Inga irrukura kulir'ku yetha pepper chicken,superaa irruku.

Mano Saminathan said...

உடனே கறி மிளகு பிரட்டலை கோழியை வைத்து செய்து சுவை மிகவும் நன்றாயிருப்பதாகச் சொன்னதற்கு அன்பு நன்றி ஆசியா! ஊரில் கிடைக்கும் FRESH MUTTONல் இன்னும் சுவை மிக அதிகமாக இருக்கும்!!

Asiya Omar said...

மிக்க நன்றி நந்தினி.
மிக்க நன்றி தனபாலன் சார்.
மிக்க நன்றி விமிதா.
மிக்க நன்றி சிநேகிதி.

Asiya Omar said...

மிக்க நன்றி ராதா ராணி.
மிக்க நன்றி ப்ரியா.
மிக்க நன்றி மனோ அக்கா,நானும் மட்டனில் செய்து பார்க்க வேண்டும் என்றுள்ளேன்.வருகைக்கு மகிழ்ச்சி.