Wednesday, November 28, 2012

கத்திரிக்காய் உருளைக்கிழங்கு சால்னா / Brinjal Potato Salna

கத்திரிக்காயும் உருளைக்கிழங்கும் பொதுவாக வீட்டில் எப்பொழுதும் இருக்கும் காய்கறிகள் தான்.இந்த இரண்டு காய்கறியும் எதனோடு சேர்த்து சமைத்தாலும் ருசியினைத் தரும்.தனியாக சமைத்தால் கேட்கவும் வேண்டுமா?

தேவையான பொருட்கள்;
உருளைக்கிழங்கு மீடியம் சைஸ் - 2
வெள்ளைக் கத்திரிக்காய்  மீடியம் சைஸ்- 3
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100கிராம்
பச்சை மிளகாய் - 2
நறுக்கிய மல்லி புதினா - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - கால்- அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 3 மேஜைக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 5  
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மஜ்சள்தூள் - அரைடீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

நறுக்க வேண்டியவைகளை தயார் செய்து வைக்கவும்.தேங்காய் முந்திரி சேர்த்து அரைத்து வைக்கவும்.


 கடாயில் எண்ணெய் விட்டு காய விடவும்,நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.சிவந்து வரும் பொழுது இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
 நறுக்கிய தக்காளி,மல்லி,புதினா,பச்சை மிளகாய் சேர்க்கவும்.நன்கு வதங்க விடவும்.
 நறுக்கிய கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்க்கவும். அல்லது கத்திரிக்காய் சேர்த்து வதக்கி விட்டு உருளைக்கிழங்கை வேக வைத்தும் சேர்க்கலாம்.மசாலா தூள் வகைகளைச் சேர்க்கவும்.

 பிரட்டி விடவும்.
 இரண்டு கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு கால் மணி நேரம் வேக விடவும். வெந்து இப்படி காணப்படும்.பின்பு தேவைக்கு உப்பு சேர்க்கவும்.கலந்து விடவும்.

 தேங்காய் முந்திரி பேஸ்ட் சேர்க்கவும்.சால்னா கெட்டித்தனமைக்கு ஏற்ப தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்.

 நன்கு கொதித்து தேங்காய் வாடை அடங்கட்டும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.லேசாக எண்ணெய் மேல் வரும்.அடுப்பை அணைக்கவும்.
சுவையான கத்திரிக்காய் உருளைக்கிழங்கு சால்னா ரெடி.
ப்லைன் ரைஸ், சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

இது கிட்ட தட்ட போட்டி சால்னா போல் மணமாக இருக்கும்.பேச்சிலர்ஸ் ஈசியாக செய்து விடலாம்.

இதனை ஜலீலாவின் பேச்சிலர்ஸ் ஃபீஸ்ட் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.

23 comments:

faiza kader said...

Simply super akka

Priya said...

Poorikuda intha salna superaa irrukume, delicious.

ராதா ராணி said...

எளிதாக செய்ய கூடிய சுவையான சால்னா..எல்லா வகை உணவிற்கும் மிக பொருத்தமானது . செய்து பார்க்கிறேன் ஆசியா.

Mahi said...

நல்லா இருக்கு ஆசியாக்கா! தேங்கா-முந்திரி அரைச்சு விட்டா ருசியோ ருசிதான்! :)

vanathy said...

Super recipe.

GEETHA ACHAL said...

வாவ்...ரொம்ப சூப்பராக இருக்கின்றது...

தளிகா said...

அருமை ஆசியா அக்கா.எனக்கு உருளை கத்தரிக்காய் காம்பினேஷன் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.இப்பொவே வேணும் போல இருக்கு

Sangeetha Nambi said...

Appadiye sapdalam pola iruke...
http://recipe-excavator.blogspot.com

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பரோ சூப்பர்... நன்றி...

Easy (EZ) Editorial Calendar said...

ரொம்ப நல்லா இருக்கு......உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Vimitha Anand said...

Veg poulaos ku super a irukkum. Nice one

கோவை2தில்லி said...

அருமையான ரெசிபி. பகிர்வுக்கு நன்றிங்க.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிக்வும் ருசியான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

அமைதிச்சாரல் said...

அருமையான குறிப்பு.

S.Menaga said...

சூப்பர் சால்னா,பரோட்டாக்கு இப்பவே சாப்பிடனும் போல இருக்கு!!

ராமலக்ஷ்மி said...

படங்களுடன் அருமையான குறிப்பு. நன்றி ஆசியா.

athira said...

அச்சச்சோ என்ன இது வெள்ளைக் கத்தரிக்காய் சூப்பர்.. குட்டி உருண்டை கண்டிருக்கிறேன், இப்படிக் கண்டதில்லை. சால்னா நன்றாக இருக்கு.

கோமதி அரசு said...

செய்யதூண்டும் படங்களும், செய்முறை விளக்கமும் அருமை.
உங்கள் தீபாவளி வாழ்த்து ஊரிலிருந்து வந்தபின் தான் பார்த்தேன் நன்றி ஆசியா.

மனோ சாமிநாதன் said...

கத்தரி உருளை சால்னா குறிப்பு நன்றாக இருக்கிறது ஆசியா! தோசைக்குத் தொட்டுக்கொள்ள‌ நல்லதொரு சைட் டிஷ்!

Aruna Manikandan said...

perfect with parotta :)

Kanchana Radhakrishnan said...

.பகிர்வுக்கு நன்றி.

இளமதி said...

வணக்கம் ஆசியா அக்கா..
நான் உங்க தளத்திற்கு முன்பும் வந்திருக்கிறேன் ஆனால் பதிவிடுவது இதுவே முதல்முறை.

உங்கள் பதிவுகள் அனைத்துமே சிறப்பு.

இதுகூட அருமையான செயல்முறை விளக்கத்துடனும் படங்களுடனும் பகிர்ந்துள்ளீர்கள்..:)

மிக்க நன்றி! பாராட்டுக்கள்!!

Asiya Omar said...

கருத்து தெரிவித்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.