Wednesday, November 21, 2012

சிக்கன் சாசேஜ் சாலட் /Chicken Sausage Salad

வாவ்  ! சாலட் என்று சொன்னாலே அதனை ருசிக்கனும் என்ற ஆர்வம் எல்லோருக்கும் ஏற்படுவது இயற்கை.பச்சை காய்கறிகளைக் கொண்டு செய்வது மிகவும்ஆரோக்கியம். அதனை நம் விருப்பம் போல் பலவிதமாக செய்து அசத்தலாம். பச்சைக்காய்கறிகளோடு வேக வைத்த சிக்கன், மீன்,மற்ற இறைச்சி வகைகள் சேர்த்து, மேலை நாடுகளில்  முழு நேர உணவாகவே சாப்பிடுவது வழக்கம். பொதுவாக என் வீட்டில் சாலட்,சாண்ட்விச் செய்வது என் பிள்ளைகள் வேலை.என் மகள் நேற்று செய்தது தான் இது.அவள் செய்யும் பொழுது நான் படமெடுத்தேன் அவ்வளவே. சாலட்டின் ருசி அதனை நறுக்குவதிலும் மிக்ஸ் செய்வதிலும் தான் இருக்கு. இனி உங்களுக்காக அந்த பகிர்வு.



தேவையான பொருட்கள்:
சிக்கன் சாசேஜ் - வேகவைத்து நறுக்கியது -4
லெட்டூஸ் இலைகள் நறுக்கியது - ஒரு கப்
கேரட் - துருவியது - 1
வெள்ளரி - மெலிதாக  நறுக்கியது - 1
வெங்காயம்  -மெலிதாக நறுக்கியது - 1
கருப்பு ஆலிவ் - உப்பில் ஊறியது - நறுக்கியது  - 2 மேஜைக்கரண்டி
எலுமிச்சை சாறு - மிளகுத்தூள் - உப்பு - ருசிக்கு தகுந்தபடி.

பரிமாறும் அளவு - 2 நபர்.

 செய்முறை:
சாசேஜை  கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடம் வேக வைத்து வடித்து எடுக்கவும்.ஆறியவுடன் மெலிதாக கட் செய்து வைக்கவும். மேற் சொன்ன அனைத்து காய்கறிகளையும் தயார் செய்து கொள்ளவும்.



ஒரு பவுலில் மேற் சொன்ன அனைத்து பொருட்களையும் கலந்து தேவைக்கு உப்பு,மிளகுத்தூள்,எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.

சுவையான சிக்கன் சாசேஜ் சாலட் ரெடி.
இதனை சும்மாவே ஸ்டார்டராக சாப்பிடலாம். பேச்சிலர்ஸ் ஈசியாக செய்து விடும் குறிப்பு இது.

டிப்ஸ்;
காய்கறிகளை நறுக்கி குளிர்ந்த நீரில் போட்டு எடுத்தால் கிரிஸ்பாக இருக்கும்.ஐஸ்பெர்க் லெட்டூஸ் கிடைத்தால் அதனையே உபயோகிக்கவும்.லெட்டூஸையும் குளிர்ந்த நீரில் அலசி எடுத்து பொடியாக நறுக்கினால் ஃப்ரெஷாக இருக்கும்.
சாசேஜ் விருப்பமில்லாதவர்கள் மேற் சொன்ன காய்கறிகள் மட்டும் சேர்த்து இந்த சிம்பிள் சாலட் செய்து சாப்பிடலாம்.



இதனை ஜலீலாவின் பேச்சிலர்ஸ் ஃபீஸ்ட் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.

15 comments:

Divya Pramil said...

Nice and interesting salad akka :) Paakavae romba nala colorfula irku :)
Vendakkai Sambar - My 6th guest post

சிநேகிதி said...

Wow.. Romba easy yaaga iruku..

Nandini said...

Very healthy salad! Simple and easy one!

revathi said...

Salad asathal..:)
Reva

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான சமையல் குறிப்பு...

நன்றி...

அமைதிச்சாரல் said...

ரொம்ப நல்ல குறிப்பு.

Jaleela Kamal said...

ரொம்ப நல்ல இருக்கு ஆசியா ருமானாவின் தயாரிப்பா வாழ்த்துக்கள்.

என் ஈவண்டுக்கு இணைத்தமைக்கு மிக்க நன்றீ

athira said...

சுலமான நல்ல சலாட்..

Priya said...

My daughter will definitely love this salad.

விச்சு said...

mmm..Super.

யுவராணி தமிழரசன் said...

வணக்கம்!
தங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்! தங்களுக்கு நேரம் கிடைக்கையில் வருகை தாரும்படி அன்போடு அழைக்கிறேன்!
http://blogintamil.blogspot.in/2012/11/4_22.html

சேக்கனா M. நிஜாம் said...

வீட்லே எங்க உம்மாக்கிட்டச் சொல்லி ட்ரைப் பண்ணி பார்க்க சொல்கிறேன்.

மிக்க நன்றி !

தொடர வாழ்த்துகள்...

மாதேவி said...

அருமையாக இருக்கின்றது. மகளுக்கு வாழ்த்துகள்.

Saraswathi Tharagaram said...

Healthy salad...

Saras
Dish In 30 minutes event with Giveaway

Asiya Omar said...

கருத்து தெரிவித்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி,மிக்க மகிழ்ச்சி.