Monday, November 5, 2012

கிரீமி சிக்கன் சாசேஜ் பாஸ்தா /Creamy Chicken Sausage Pasta

 தேவையான பொருட்கள் :
வேகவைத்து வடித்த மக்ரோனி/ பாஸ்தா - 2 கப்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய கொடைமிளகாய் - 1
நறுக்கிய பூண்டு பல் - 4
நறுக்கிய தக்காளி - 1
சிக்கன் சூப் கியூப் - 1
சில்லி ப்லேக்ஸ் - அரை டீஸ்பூன்
வேகவைத்த நறுக்கிய  சிக்கன் சாசேஜ் - 5
ஃப்ரெஷ் கிரீம் - 100 மில்லி
எண்ணெய் - 1 -2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

2 நபருக்கு பரிமாறலாம்.

மக்ரோனியை தேவைக்கு தண்ணீர்,உப்பு சேர்த்து பக்குவமாக வேகவைத்து வடித்து வைக்கவும்,நறுக்க வேண்டியவைகளை தயார் செய்து வைக்கவும்.

நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்து வரும் பொழுது நறுக்கிய பூண்டு,வெங்காயம்,கொடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
பொடித்த சூப் கியூப் ஒன்று சேர்க்கவும்.ரெடி செய்த நறுக்கிய சிக்கன் சாசேஜ் சேர்க்கவும்.நன்கு பிரட்டவும்.வேக வைத்த மக்ரோனி சேர்க்கவும்.சில்லி ப்ளேக்ஸ் தூவவும்.நன்கு கலந்து விடவும்.சூப் கியூபில் உப்பு இருக்கும்,வேகவைத்த மக்ரோனியிலும் உப்பு போட்டிருப்பதால் உப்பு பார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும்.
பின்பு ஃப்ரெஷ் கிரீம்  போட்டு நன்கு பிரட்டி விடவும்.அடுப்பை அணைக்கவும்.

சுவையான சூப்பர் கிரீமி சிக்கன் சாசேஜ் பாஸ்தா ரெடி.

இதனை ஜலீலாவின் பேச்சிலர்ஸ் ஃபீஸ்ட் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.

12 comments:

மஞ்சுபாஷிணி said...

பார்க்கவும் அழகு... வீட்ல பாஸ்தா இருக்கு எதுனா செய்யி செய்யின்னு அம்மா சொல்லிட்டே இருக்காங்க ஆசியா... செஞ்சுருவோம்பா... இபானுக்கும் ரொம்ப இஷ்டமான டிஷ் இது....

அப்டியே வெஜ் லயும் பாஸ்தா செய்முறை போடுங்கப்பா... நான் சாப்பிடனும்ல?

அன்புநன்றிகள் ஆசியா சுவையான பகிர்வுக்கு..

Asiya Omar said...

மஞ்சு சிக்கன் சாசேஜ் சேர்க்காமல் இதே முறையில் செய்யுங்க,ஃப்ரெஷ் கீரீம் தான் டேஸ்டே. சூப்பராக இருக்கும்.

தமிழ் காமெடி உலகம் said...

கண்டிப்பா செய்து பார்க்கிறேன்....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/

திண்டுக்கல் தனபாலன் said...

புதிய சமையல் குறிப்பு... நன்றி...

Vimitha Anand said...

Creamy n yummy pasta dear

ராதா ராணி said...

பார்க்க அழகா அருமையா இருக்கு ஆசியா.. சுவையும் ரொம்ப நல்லா இருக்கும் போல.. மக்ரோனி வாங்கி பாக்கெட் கட் பண்ணாம அப்பிடியே நாள் பட இருக்கு.. செய்து பார்த்திடறேன்.

Vijayalakshmi Dharmaraj said...

arumai arumai... will try without chicken sausage...
Today's Recipe - Baked Idli without Idli Pan
VIRUNTHU UNNA VAANGA

Jaleela Kamal said...

ஹனீபுடைய பேவரிட், அடிக்கடி இங்கு சாசேஜ் தான் நூடுல்ஸ்வுடன், ஸ்பெகதி யுடன் பாஸ்தா வுடன் இந்த படத்த பார்த்தா நாளைக்கே சாப்பிட்டாகனும் என்பான்

அமைதிச்சாரல் said...

ரொம்ப நல்லாருக்கு ஆசியா.

Priya said...

Super delicious pasta,yennoda chinna paiyan favourite.

Akila said...

Wow very creamy n delicious

Event: Dish name starts with P

Saraswathi Tharagaram said...

Very inviting pasta..Sure kids will love it..
saras
Dish in 30 minutes event with give away