Monday, December 3, 2012

பேச்சிலர்ஸ் டீ பாட் & சுலைமானி டீ / Bachelor's Teapot & Sulaimani Tea

பாத்திரங்கள் என் உபகரணங்களுக்காகவும் பேச்சிலர்ஸ்க்கு இந்த பாத்திரம் உபயோகமாகும் என்பதாலும்  இந்த பகிர்வு.
சமைப்பதற்கு ஒரு பாத்திரம், பரிமாறுவதற்கு ஒரு பாத்திரம் என்றால் சாமான்களை பராமரிப்பது சிரமம்.இப்படி ஒரு கெட்டில் மாதிரியான பாத்திரம் வாங்கி வைத்துக் கொண்டால் அவசரத்திற்கு டீ, காபி போட்டு அப்படியே கப்பில் விட்டு சாப்பிட வசதியாக இருக்கும்.
இப்பவெல்லாம், ஸ்டவ் டூ டேபிள், ஓவன் டு டேபிள் தான் நமக்கு கூட ஈசி. பாத்திரம் கழுவும் வேலை கொஞ்சம் குறையும்.
சரி இப்ப என் டீ பாட்டை பார்க்கலாமா ?


புதிதாக  உபயோகிப்பதற்கு முன் நன்றாக சுத்தமாக லிக்விட் வாஷ் கொண்டு கழுவி எடுத்து ஒரு முறை வெந்நீர் போட்டு அதனை கொட்டி விட்டு பின்பு புழங்க ஆரம்பிக்கவும்.


இப்படி கெட்டிலில் மூன்று பகுதிகள் இருக்கும்.


இந்த கெட்டில் ஹீட் ரெசிஸ்ட்டண்ட் போரானால் ஆனது. அதனால் கேஸ் அடுப்பில் நேரே வைக்கலாம்.சுகாதாரமாக வடிவமைக்கப்பட்டது, ஆரோக்கியமானதும் கூட.
முதலில் கெட்டிலில் முக்கால் அளவு கிட்ட தட்ட 1 லிட்டர்  தண்ணீர் வைத்துக் கொள்ளவும் அடுப்பை பற்றவும்.கொதிக்கட்டும்.
.சீனி ஐந்து டேபிள்ஸ்பூன்  சேர்க்கவும்.
ஸ்டைனரில் புதினா  இலைகள்,தட்டிய ஏலக்காய் 1 ,ஒரு  இஞ்ச் அளவு தட்டிய இஞ்சி துண்டு, டீ பேக் 1 அல்லது 1 டீஸ்பூன் டீத்தூள்  போட்டு கெட்டிலை மூடவும்.கொதிவரவும் அடுப்பை அணைக்கவும்.அடுப்பை அணைக்காவிடில் வாய் வழியாக கொத்தித்து வழியும்.
இஞ்சி அளவு உங்கள் ருசிக்கு தக்க படி. தட்டிய இஞ்சி,லூஸ் டீத்தூள் என்றால் போட இப்படி சிறிய பனியன் துண்டு உபயோகிக்கலாம்.டீதிடமாக இருக்க கூட ஒரு டீ பேக் விருப்பப்பட்டால் சேர்த்து கொள்ளலாம்.
இந்த கெட்டிலில் தண்ணீர் சூடு வர சிறிது நேரம் ஆகும்.விரைவாக செய்ய நினைப்பவர்கள் இந்த கெட்டிலில், எலெக்ட்ரிக் கெட்டிலில் தண்ணீர் சூடு செய்து ஊற்றி எல்லாம் சேர்த்து மூடி வைத்து திறந்தாலும் ப்ளாக் டீ ரெடியாகிவிடும்.காப்பி போடவும் பயன்படுத்தலாம்.
சுலைமானி தயாரிப்பதில் ஒரு தனி ப்ரியம் இருக்க வேண்டும்.சுலைமானியை கரெக்ட் டேஸ்டில் பரிமாறுவதே ஒரு கலை
 விருந்து முடிந்து இப்படி அருமையான ஒரு சுலைமானியை பரிமாறி உங்க அன்பை வெளிப்படுத்திப் பாருங்க.இதன் ருசி அவர்கள்  நாவிலேயே நிற்கும். மனதிற்கும் தொண்டைக்கும் இதமாக இருக்கும்.

 இப்படி தேன் நிறத்தில் சுலைமானி இருக்க வேண்டும். டீ கடுப்பாக இருக்கக் கூடாது. சர்க்கரை அளவு அவரவர் இஷ்டம்.


சுறுசுறுப்பை தரும்  சுலைமானி ரெடி. 
ஆறு நபருக்கு பரிமாறலாம்.


கெட்டில் சூடு தணிந்த பின்பு சாதாரண நீரில் கழுவி வைக்கலாம்.சூட்டோடு குளிர் நீரில் கழுவினால் பாத்திரம்  பாதிப்படைய வாய்ப்பு அதிகம்.


இதனை ஜலீலாவின் பேச்சிலர்ஸ் ஃபீஸ்ட் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.

17 comments:

கோவை2தில்லி said...

கெட்டில் வெகு அழகு. சுத்திப் போட்டுடுங்க....:)

சுலைமானி தயாரிக்கும் முறையை தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.

Jaleela Kamal said...

டீ பார்ட் ரொம்ப அருமையாக இருக்கு.
சுலைமானி டீ தினம் இரவில் டிபனுக்கு பிற்கு எங்க வீட்டில் சுலைமானி தான்.
என் ஈவண்டுக்கு இணைப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி

ஸாதிகா said...

சலாம் தோழி,அழகிய டீப்பாட்டை அசத்தலான விளக்கத்துடன் பகிர்ந்துள்ளீர்கள்.இப்பொழுது எனக்கு நினைவுக்கு வருகின்றது.நான் உங்கள் வீட்டிற்கு வந்த பொழுது அழகிய வேலைப்பாடு அமைந்த தங்க வர்ண டீ கெட்டிலில் சுடசுட சுலைமானி டீயை பறிமாறியதருணம்.இப்பொழுது மதினாவில் மிகுந்த வேலை பாடுடன் கூடிய கற்கள் எல்லாம் பதித்த அழகான டீ கெட்டில் பார்த்தேன்.விலையோ மிக அதிகம்,நான்கு கப் பிடிக்கக்கூடிய அந்ததங்க வர்ண வேலைப்பாட்டுடன் கூடிய கெட்டில் 60 ரியாலில் இருந்து கொஞ்சம் கூட குறைக்க வில்லை.கூட வந்தவர் இத்தனை காசு கொடுத்து வாங்கி கருத்துப்போய் விட்டால் வருத்தப்படுவாய் என்றதால் வாங்கு எண்ணத்தை விட்டு விட்டேன்.

Asiya Omar said...

கோவை2தில்லி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ஜலீலா கருத்திற்கு மகிழ்ச்சி.நன்றி.

ஸாதிகா,வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி. அது நானும் உம்ரா செய்த சமயம் மதினாவில் 15 ரியாலுக்கு (2005) வாங்கினேன்.இந்த கெட்டில் 20 திர்ஹம் தான்.

Aruna Manikandan said...

wonderful post :)

இளமதி said...

அக்கா..கெட்டிலை பார்க்கவே அழகா இருக்கு. அதைவிட சுலைமானி ரீ செய்முறை இன்னும் அழகாவே இருக்கு...:)

உங்க முறையிலும் செய்து பார்க்கணும். பகிர்வுக்கு மிக்க நன்றி அக்கா...

faiza kader said...

Wow.. Intha tea kuripai thaan ethir parthu kondu irunthen.. Naaga plain tea ginger poothu kodipoom. Mint poothu inni try pannuren...

vanathy said...

Super tea and kettle.

Priya said...

Kettle romba azhaga irruku, sulaimani tea kudika romba aasaiya irruku.

ராமலக்ஷ்மி said...

அழகான டீ பாட். அருமையான பகிர்வு.

வெற்றி பெற வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லா இருக்குங்க... வாழ்த்துக்கள்...

S.Menaga said...

அழகான டீ பாட்,சுலைமானி டீ குடிக்கனும் போல இருக்கு....

ராதா ராணி said...

கெட்டில் அழகா இருக்கு..டீயும் டீ கலரும் குடிக்க தூண்டுது ஆசியா..

nasreen fathima said...

kettle enga purchase panninga?
nanraga irukiradhu.

Asiya Omar said...

கருத்து தெரிவித்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

நஸ்ரின் இது அல் ஐனில் கிஃப்ட் செண்டரில் வாங்கினேன்.வருகைக்கு மகிழ்ச்சி.

Mahi said...

டீ பாட் க்யூட்டா இருக்கு ஆசியாக்கா! சுலைமானி சூப்பர்!

//சுலைமானி தயாரிப்பதில் ஒரு தனி ப்ரியம் இருக்க வேண்டும்.சுலைமானியை கரெக்ட் டேஸ்டில் பரிமாறுவதே ஒரு கலை// நமக்கெல்லாம் சும்மா சாதா டீ-யே ததிங்கிணத்தோம்! இதில கலை-ப்ரியம்னெல்லாம் சொல்லி பயமுறுத்துறீகளே!அவ்வ்வ்.... அதனாலதான் நான் இந்த ரிஸ்கெல்லாம் எடுக்கறதே இல்ல, யு ஸீ! ;) யாராச்சும் செய்து குடுத்தா என்ஸாய்:) பண்ணிக்கிறது! ஹிஹி!

Asiya Omar said...

மகி, சும்மா டீ பாட் இல்லாமல் கூட இந்த சுலைமானி டீயை செய்யலாம்.தண்ணீரை கொதிக்க வைத்து, எல்லாத்தையும் போட்டு கடைசியில் டீ பேக் டிப் செய்து அடுப்பை அணைக்கவும்.வடிகட்டி பரிமாறவும்.
சும்மா பீலா விட்டால் நான் நம்பி விடமாட்டேன்.நீ சமைப்பதை பார்த்து நான் விட்ட புகையில் உன் அடுப்படி கூட கலர் மாறியிருக்கும்.ஹா..ஹா..