Thursday, December 13, 2012

பாகற்காய் பொடி வறுவல் / Bittergourd Fry


இலகுவாக செய்யக்கூடிய இந்த பாகற்காய் வறுவல் மிக அருமையாக இருக்கும்.வாரம் ஒரு முறையாவது பாகற்காய் செய்து சாப்பிடுவது  உடல் நலத்திற்கு நல்லது.

தேவையான பொருட்கள்;
பாகற்காய் - கால் கிலோ
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் 
கருவேப்பிலை - 2 இணுக்கு
இட்லி பொடி  - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

நான்கு நபர்களுக்கு.

செய்முறை:
பாகற்காயை விதை நீக்கி மெலிதாக அரைவட்டமாக நறுக்கி அலசி சிறிது மஞ்சள் தூள் உப்பு போட்டு முக்கால் வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து வைக்கவும்.


 கடாயில் எண்ணெய் சூடு செய்து கடுகு உ.பருப்பு தாளித்து கருவேப்பிலை போட்டு வெடித்தவுடன் வேகவைத்த பாகற்காயை சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும். சிறிது பொரியட்டும்.

 பொரிந்த பாகற்காயில் இட்லி பொடி சேர்க்கவும்.சிம்மில் வைத்து நன்கு பிரட்டி விடவும்.சிறிது வறுபடட்டும்.
சுவையான பாகற்காய் பொடிவறுவல் ரெடி.

சாம்பார்,தயிர் சாதத்திற்கு சூப்பராக இருக்கும்.

இட்லி பொடிக்கு பதிலாக ரெடிமேடாக கிடைக்கும் பொரியல் பொடியும் சேர்க்கலாம்.
எல்லாவகையான காய்கறி பொரியலுக்கும் சேர்க்கலாம்.முக்கியமாக வாழைக்காய்,உருளைக்கிழங்கு,கீரை,கத்திரிக்காய்,வெண்டைக்காய் வகைகளுக்கு பொருத்தமாய் இருக்கும்.
ஜலீலாவின் பேச்சிலர்ஸ் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.

22 comments:

Sangeetha Nambi said...

Love this anytime...
http://recipe-excavator.blogspot.com

Jaleela Kamal said...

சுலபமான குறிப்பு இணைப்பு கொடுத்த மைக்கு மிக்க நன்றி.
பொரியல் பொடி எங்கு கிடைக்கிறது.

Easy (EZ) Editorial Calendar said...

பாகற்காய் பொடி ரொம்ப நல்லா இருக்கு....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Asiya Omar said...

நன்றி சங்கீதா.மகிழ்ச்சி.

ஜலீலா இந்த பொரியல் பொடி சென்னையில் Grand sweets & snacks manufactured product.Kariyamuthu என்ற பெயரில் கிடைக்குது.தோழி ஒருத்தங்க அனுப்பி தந்தாங்க.
எல்லாவகை பொரியலுக்கும் போடலாம்.
நாமே வீட்டில் இந்த பொரியல் பொடி செய்யலாம்,கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு,தனியா,மிளகாய் வற்றல்,பெருங்காயம் சேர்த்து வறுத்து அரைத்து ரெடி செய்து வைத்துக் கொள்ளலாம்.நம்ம கிட்ட இருக்கும் இட்லி பொடி கூட எல்லாப் பொரியலுக்கும் போடலாம்.

Asiya Omar said...

Easy Editorial Calender வருகைக்கு நன்றி.உங்க பக்கம் வர ஒன்றுமே புரியலை.

ஸாதிகா said...

அட பொரியலுக்கே பொடி அதிலுல் கிடராண்ட் ஸ்வீட்டில்....தகவலுக்கு நன்றி தோழி.

இளமதி said...

ஆசியா அக்கா...சூப்பர் ரெஸிப்பி..:)
எனக்கு பாகற்காய்ன்னா ரொம்ம்பவே விருப்பமான ஒன்று.;)

ஏன் அதை கொதிக்கவைத்து நீரை வீணாக ஊற்றவேண்டும்..அதன் முக்கிய சத்தே அதில்தானே...:)

இலவச இணைப்பாய் பொரியல்பொடி குறிப்பும் தந்துள்ளீங்களே...:)

பகிர்வுக்கு மிக்க நன்றி அக்கா..

ராமலக்ஷ்மி said...

புதுமையான குறிப்பாக இருக்கிறது. நன்றி ஆசியா.

பொரியல் பொடி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

Vimitha Anand said...

Hubby ku romba pudikkum... Will try soon

Aruna Manikandan said...

healthy and delicious fry...
adding podi sounds new to me :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதொரு ருசியான பகிர்வு.
பாராட்டுக்கள். நன்றிகள்.

Vijayalakshmi Dharmaraj said...

nice...
Rasgulla
VIRUNTHU UNNA VAANGA

angelin said...

எப்பவும் எண்ணையில் பொரித்து சாப்பிடுவதை விட இது கொஞ்சம் வித்யாசமா இருக்கு ..என் மகளிக்கு ரொம்ப பிடிக்கும் .தேங்க்ஸ் ஆசியா .


பொரியல் பொடி ..... ரொம்ப நல்லா இருக்கும் போலிருக்கே ..இங்கே இன்னும் வரவில்லை

revathi said...

Varuval arumaiyaa irukku..:)
Reva

Priya said...

Excellent fry, love here the addition of spice powder.

Vijiskitchencreations said...

நல்ல குறிப்பு. இன்றைக்கு பார்த்தது எனக்கு உடனே செய்து பார்க்கனும் போல் இருக்கு, ஏன் என்றால் என்னிடம் ப்`ரிட்ஜின் பாவைக்காய் இருக்கு,செய்ய போகிறேன். நன்றி.

S.Menaga said...

மிக அருமையான வறுவல்...

Asiya Omar said...

ஸாதிகா மிக்க நன்றி.

இளமதி,கொஞ்சம் கசப்பு தெரியாமல் இருக்கத்தான் வேகவைத்து தண்ணீர் வடித்து செய்வது.என்ன செய்தாலும் பாகற்காய் கசப்பு தான்.

ராமலஷ்மி மிக்க நன்றி.
விமிதா மிக்க நன்றி.
அருணா மிக்க நன்றி.
வை.கோ சார் மிக்க நன்றி.
விஜி மிக்க நனறி.
ஏஞ்சலின் மிக்க நன்றி.
ரேவா மிக்க நன்றி.
ப்ரியா மிக்க நன்றி.
விஜிஸ்கிச்சன் மிக்க நன்றி.
மேன்
கா மிக்க நன்றி.

Shama Nagarajan said...

super tempting and inviting . Join me in Fast Food - Poha event in my blog.

athira said...

ஆஹா.. வித்தியாசம்.. நல்லாயிருக்கு வறுவல்.

Jaleela Kamal said...

நன்றி
நான் ஓவ்வொரு முறை ஓவ்வொரு மசாலாக்கள் சேர்ப்பது பொரியலுக்கு, இது என்ன புது பொடியோன்னு பார்த்தேன்,
என்னிடம் நிறைய பருப்பு பொடி மற்றும் இட்லி பொடிக்கள் இருக்கின்றன,

அடுத்த முறை செய்து பார்க்கிறேன்

Mahi said...

Quick n easy recipe...poriyal podi kooda vanthacha? :)