Tuesday, December 18, 2012

சுரைக்காய் மசாலா கூட்டு / Bottle Gourd Masala


தேவையான பொருட்கள்;
சொம்பு சுரைக்காய் - கால் கிலோ
துவரம் பருப்பு அல்லது கடலை பருப்பு  - 100 கிராம்
தக்காளி பெரியது - 1
பூண்டு - 4 பல்
மஞ்சள் தூள் - அரை டீ ஸ்பூன்
வெந்தயம் - கால் டீ ஸ்பூன்
சீரகம் அல்லது கடுகு- அ ரைடீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3
ஏலம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை - தலா ஒன்று
துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை - சிறிது
கருவேப்பிலை - 1 இணுக்கு அல்லது பிரியாணி இலை 1
எண்ணெய்/ நெய் கலவை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு. இது தான் சொம்பு சுரைக்காய் கிடைக்கவில்லை என்றால் சாதாரண சுரைக்காய் உபயோகிக்கலாம்.பருப்பை ஊறவைக்கவும்.
 தோல் நீக்கி இப்படி வட்டமாக நறுக்கி,  பின்பு சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.ஊறிய பருப்பை கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் ,தேவைக்கு தண்ணீர் சேர்த்து  முக்கால் வேக்காடாக வெந்து வைக்கவும்.

 குக்கரில் எண்ணெய்/நெய் கலவை விடவும்.காய்ந்து வரும் பொழுது,ஏலம்,பட்டை,கிராம்பு,வெந்தயம்,சீரகம் கருவேப்பிலை சேர்க்கவும்.பிரியாணி இலை கூட சேர்க்கலாம்.மிளகாய் வற்றல் கிள்ளி சேர்க்கவும்.தட்டிய பூண்டு ,நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.வதக்கவும்.

 நறுக்கிய சுரைக்காய் சேர்த்து,மீதி கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து  பிரட்டி விடவும்.பின்பு முக்கால் வேக்காடு வெந்து வைத்த பருப்பை சேர்க்கவும்.கலந்து விடவும்.தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சிறிது சேர்க்கவும்.

 குக்கரை மூடி ஒரு விசில் வரவும் அடுப்பை அணைக்கவும்.

 ஆவியடங்கியவுடன் திறந்து தேங்காய் துருவல் சேர்க்கவும்.கிளறி விடவும்.உப்பு சரிபார்க்கவும்.

ரெடியான மசாலா கூட்டை ஒரு பவுலில் மாற்றி மல்லி இலை தூவி பரிமாறவும்.

சுவையான சுரைக்காய் மசாலா கூட்டு ரெடி.

சாதம்,சப்பாத்தி,பூரியுடன் பரிமாறலாம்.

எங்க அண்ணி இந்த சுரைக்காயை ஷார்ஜாவில் இருந்து ஒரு முறை வரும் பொழுது எடுத்து வந்தாங்க,இது இப்படி உருண்டையாக இருக்கேன்னு கேட்ட பொழுது இதற்கு பெயர் சொம்பு சுரைக்காய் இதற்கு  மணம் கொடுத்து சமைத்தால் ருசியாக இருக்கும்னு சொல்ல நான் செய்து பார்த்தேன் .அருமையாக வந்தது.
 சுரைக்காய் என்னோட விருப்பமான காய்கறிகளுள் ஒன்று.
மற்ற சுரைக்காய் குறிப்புக்கள்..

சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு
சுரைக்காய் பால் கறி
சுரைக்காய் கடலைபருப்பு கூட்டு
 பொதுவாக எங்க ஊர் பக்கம் சுரைக்காய் பருப்பு ரொம்ப பிரபலம்.எனவே இந்தக் குறிப்பை

Sending this recipe to Gayathri's Walk through Memory Lane hosted by Nithu's Kitchen.

13 comments:

அமைதிச்சாரல் said...

பார்க்கவே ரொம்ப நல்லாருக்குது ஆசியா.

Easy (EZ) Editorial Calendar said...

உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Saraswathi Tharagaram said...

I made it for todays lunch and it tasted great. Useful post for beginners.

Saras
Dish In 30 minutes ~ Breakfast Recipes with Giveaway

Vimitha Anand said...

Healthy kootu Asiya. Dosa kooda enakku romba pudikum

இளமதி said...

நல்ல குறிப்பு. கிட்டத்தட்ட இது போலவே செய்வதுண்டு. ஆனால் நீங்கள் தேங்காயை துருவலாகச் சேர்த்திருப்பது வித்தியாசமாக இருக்கு....:)

செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி!

Vijayalakshmi Dharmaraj said...

my favorite kootu... my mom too make like this...
Melting Cookies - Low fat version
VIRUNTHU UNNA VAANGA

ஸாதிகா said...

எனக்கு பிடிக்காத சுரைக்காயை வெகு அருமையாக சமைத்துக்காட்டி இருக்கீங்க ஆசியா.பருப்பெல்லாம் போட்டு.பார்க்கவே உடனே சமைக்க வேண்டும் போல் உள்ளது.அவசியம் செய்து பார்க்க வேண்டும்.

Priya said...

Innaiku naan ithey madhri than cabbage vachi kootu pannen, will try with bottlegourd soon.

Mahi said...

Seeing this "sembu suraikkai" for the 1st time! Looks cute! :)

Nice recipe Asiya Akka!

சே. குமார் said...

படங்களுடன் விளக்கம் அருமை அக்கா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

செய்முறை குறிப்புகளும் படங்களும் அருமை.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

[ஆனால் சுரைக்காய் எனக்குப் பிடிக்காது]

கோமதி அரசு said...

என்னிடம் இன்று செம்பு சுரைக்காய் இல்லை ஆனால் நீட்டமாய் ஒல்லியாக உள்ள சுரைக்காய் இருக்கு சமைத்து விடுகிறேன் ஆசியா.

athira said...

வித்தியாசமான சுரக்கயாக இருக்கே.. குறிப்பும் புது முறையா இருக்கு. எனக்கு சுரக்காய் பிடிக்காது, உடலுக்கு நல்லமென்பதால்.. விழுங்கிடுவேன்:))