Friday, December 7, 2012

ஈசி பொட்டட்டோ வெட்ஜெஸ் / Easy Potato Wedges


உருளைக்கிழங்கு பிடிக்காதவர்களே இருக்க முடியாது. பொதுவாக இந்த வெட்ஜஸ் ஸ்டார்டராக ஃப்ரைட் சிக்கன்,பிட்ஸா,பர்கருடன் பரிமாறுவது வழக்கம்.இதனை வீட்டிலேயேயும் செய்து அசத்தலாம்.இதில் உள்ள சிறப்பு தோலோடு ஃப்ரை செய்து எடுப்பது தான்.தோலோடு சாப்பிட்டால் வாயு தொந்திரவு குறைவாக இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன்.இனி ரெசிப்பி.

 தேவையான பொருட்கள்;
மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு -2
மிளகாய்த்தூள்  - அரை டீஸ்பூன் 
கார்ன் ஃப்லோர்  - 3 டீஸ்பூன்
உப்பு ,எண்ணெய் தேவைக்கு.
மேலே தூவ சிறிது மிளகுத்தூள் ( விரும்பினால்)

2 நபர்களுக்கு.
உருளைக்கிழங்கை நன்கு அலசி இப்படி நீள்வாக்கில் கட் செய்து கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைக்கவும். கொதி வரவும் கட் செய்த உருளைக்கிழங்கு பாதி உப்பு சேர்த்து வேக விடவும்.முக்கால் வேக்காடு வேகட்டும்.தண்ணீர் வடித்து வைக்கவும்.
 சூட்டுடனே சிறிது உப்பு,மிளகாய்த்தூள் போட்டு மிக்ஸ் செய்யவும்.சிறிது ஊறிய பின்பு அத்துடன் கார்ன்ஃப்லோர் கலந்து பிரட்டி வைக்கவும்.அரைமணி நேரம் ஃப்ரிட்ஜிலோ அல்லது வெளியிலோ இருக்கட்டும்.

 தேவைக்கு ஒரு தவாவில் எண்ணெய் விட்டு பொரித்து எடுக்கவும்.நான் டீப் ஃப்ரை செய்யாமல் கொஞ்சம் எண்ணெய் தான் உபயோகித்து உள்ளேன்.

இதனை சும்மா தான் சாப்பிடனும்னு இல்லை, சாதத்திற்கு சைட் டிஷ்ஷாகவும் பரிமாறலாம்.ஆனால் சூடாக பரிமாறவேண்டும்.


இந்த இறுதிப்படம் எப்படி இருக்கு, நம்ம ராமலஷ்மி எனக்கு பிக்காஸாவில் எடிட்டிங் மெயில் வழியாக சொல்லி தந்தாங்க.சொல்லி தான் தர முடியும், கையை பிடித்து படமா எடுக்க முடியும்.:) ! மிக்க நன்றி தோழி.
ஆனால் பாருங்க, நான் ஒவ்வொரு முறை அவசரமாக தெளிவில்லாமல் எடுக்கும் படங்களைப் பகிரும் பொழுதும் பக்குன்னு இருக்கும்.அவங்களும் என்னை ரொம்ப நாளாக கைடு செய்றாங்க, எனக்கு தான் முடியலை, தெரியலை..சமையற்கட்டில் நிதானமாக படம் எடுத்துக் கொண்டிருப்பது என்னைப் பொறுத்தவரை முடியாத காரியம். இங்கே நான் மொபைலை தான் படம் எடுக்க அதிகம் உபயோகிக்கிறேன்.எங்க வீட்டில் என் மொபைலுக்கு பெயரே கிச்சன் கேமரா தான்.

18 comments:

Kalpana Sareesh said...

wow too good..

Vijayalakshmi Dharmaraj said...

yummy n crispy akka... love it all the time...
IDLI KHEER
VIRUNTHU UNNA VAANGA

ராதா ராணி said...

ரொம்ப ஈசியான குறிப்பா இருக்கே .. அவசர ஸ்னாக்ஸ் செய்யலாம், சைடு டிஷ் ஆகவும் பரிமாறலாம்... எங்க வீட்ல அடிக்கடி இனி இதை செய்வேன். பகிர்வுக்கு மிக்க நன்றி ஆசியா..:)

இமா said...

ஸ்டெப்ஸ் அழகாக எழுதியிருக்கிறீங்க ஆசியா.

உருளைக்கிழங்கு தோலுக்கு அடியில் வைட்டமின் B இருக்கிறதாகச் சொல்வார்கள்.

Vimitha Anand said...

Perfect finger foods for kids. Parties ku sariyana starter

Nandini said...

Easy snack loved by kids! Crispy wedges.

அமைதிச்சாரல் said...

ரொம்ப நல்ல குறிப்பு. உருளைக்கிழங்கின் ருசிக்குக் கேக்கவா வேணும்.

athira said...

சூப்பர் ஆசியா.. இம்முறை நானுமெல்லோ போட்டி போடுறன்.. ஆண்டவா எனக்கே பரிசு கிடைக்கப் பண்ணிப்போடப்பா:))

இளமதி said...

நல்ல சுலபமான குறிப்பா இருக்கே. பார்க்கவே செய்துவிடத் தூண்டுகிறது.

மிக்க நன்றி நல்ல குறிப்புப் பகிர்வுக்கு...

Mahi said...

ஈஸியான ரெசிப்பி ஆசியாக்கா!நல்லா இருக்கு!

//பிக்காஸாவில் எடிட்டிங்// வெரி குட்! அப்ப சீக்கிரம் கொலாஜ்-போட்டோஸும் எதிர்பார்க்கலாம்! கலக்குங்கோ! :)

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு ஆசியா. செய்து பார்த்திடலாம்.

சமையல் செய்தவாறே படங்கள் எடுப்பது சிரமமானதே. அப்படியும் படிப்படியாக படம் எடுத்துப் பகிருவது உங்கள் ஸ்பெஷாலிட்டி:)! இயல்பிலே ஆர்வமும் இருக்கிறது. பல போட்டிகளிலும் கலந்து கொள்வதால் பிகாஸா அடிப்படை இன்னும் அழகாய் ப்ரெசெண்ட் செய்ய உதவும்:)!

வாழ்த்துகள் ஆசியா.

சே. குமார் said...

படங்களுடன் விளக்கமாய் சுலபமான சமையல் குறிப்பு.

அருமை அக்கா.

Priya said...

Super crispy potato wedges akka,love it.

கோவை2தில்லி said...

சுலபமாக இருக்கே ...செய்து பார்த்துடலாம்.

ஸாதிகா said...

உருளைக்கிழங்கை தோலுடன் சேர்த்து பிரை பண்ணி இருப்பது வித்த்யாசமான முயற்சிதான்.பார்த்ததுமே செய்து சாப்பிடத்தூண்டுகின்றது.

எல் கே said...

முயற்சி செய்யலாம்

Asiya Omar said...

கருத்து தெரிவித்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

கோமதி அரசு said...

உருளைகறி நன்றாக இருக்கு ஆசியா.
படங்கள் ,செய்முறை விளக்கம் எல்லாம் அருமை.