Thursday, December 20, 2012

கிட்ஸ் ஸ்பிரிங் பொட்டட்டோ / Kids Spring Potato

இந்த ஸ்பிரிங் பொட்டட்டோ செய்வதற்கு ஸ்பைரல் கட்டர் இருந்தால் ஈசியாக செய்து விடலாம்.சூப்பர் ஸ்லைசர் என்ற செட் ஒரு ஐந்து வருடத்திற்கு முன்பு வாங்கியது.அதனை கொஞ்சம் நாள் உபயோகித்து விட்டு கிச்சன் அலமாரியில்  ஓரம் கட்டி வைத்து நாளாகி அதனைப் பற்றியே மறந்து விட்டேன். நேற்று இங்கு ஒரு மாலில் ஒரு ஸ்டாலில் இந்த ஸ்பிரிங் பொட்டட்டோ விற்பனை அமோகமாக நடந்து கொண்டிருந்தது, அப்ப தான் இந்த ஸ்பைரல் கட்டர் நினைவு வந்து தேடிப்பார்த்தேன்,கிடைத்தது.உடனே செய்து பார்த்தாச்சு. 

தேவையான பொருட்கள் :
உருளக்கிழங்கு சிறியது ஒன்று 
உப்பு, மிளகுத்தூள்,எண்ணெய் - தேவைக்கு.சிறிய அளவு உருளைக்கிழங்கை நன்கு கழுவி துடைத்து இந்த ஸ்பைரல் கட்டரில் உள்ள ஸ்க்ரூ போன்ற பகுதியை முழுவதும் உருளைக்கிழங்கில் ஒரு பக்க விளிம்பில் நுழைத்து அப்படியே வட்டமாக சுற்றிக்கொண்டுவந்தால் அப்படியே கட் ஆகி வரும்.


எடுத்து விரித்துப் பார்த்தால் இப்படி ஸ்பிரிங் போல் அழகாக விரிந்து வரும்.அதனை ஒரு மரக்குச்சியில் (கபாப் / டிக்கா ஸ்டிக்) நுழைத்து விரித்து வைக்கவும்.
ஒரு கடாயில் தேவைக்கு எண்ணெய் நன்கு சூடேற்றவும்.
ஸ்டிக்கில் உள்ள உருளைக்கிழங்கு ஸ்பிரிங்கை சூடான  எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சூட்டுடனேயே உப்பு ,மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.


விருப்பப்பட்டால் சாஸ் தடவியும் ருசிக்கலாம்.
 சுவையான கிட்ஸ் ஸ்பிரிங் பொட்டட்டோ ரெடி.


19 comments:

ராதா ராணி said...

நல்லா இருக்கு ஆசியா.. கண்டிப்பா குட்டீஷ்களுக்கு பிடிக்கும்.

ஸாதிகா said...

வாவ் ..அருமையாக உள்ளது தோழி.சின்னக்குழந்தைகளுக்கு பிரை பண்ணிக்கொடுத்தால் சந்தோஷமாக சாப்பிடுவார்கள்.இந்த ஸ்பைரல் கட்டரால இன்னும் காய்களை என்னென்ன முறையில் வெட்ட முடியுமோ அப்படியெல்லாம் வெட்டி சமைத்து அசத்துங்க.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அதன் செய்முறையையும் அழகையும் பார்த்தால் சாப்பிடவே மனது வராது போலிருக்கே. ;)

பாராட்டுக்கள். வாழ்த்துக்ள். பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் VGK

Asiya Omar said...

கீதா லட்சுமி has left a new comment on your post "கிட்ஸ் ஸ்பிரிங் பொட்டட்டோ / Kids Spring Potato":

Wowwww Mouth watering..

Asiya Omar said...

ராதா உடன் கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

ஸாதிகா மிக்க நன்றி.மகிழ்ச்சி.

வை.கோ சார் மிக்க நன்றி. மகிழ்ச்சி.

கீதா உங்க கமெண்ட்டை பப்ளிஷ் செய்ய முடியலை,அதனால் காப்பி பேஸ்ட்.வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

Vijayalakshmi Dharmaraj said...

arumai arumai...
Bowl Jam Brownie
VIRUNTHU UNNA VAANGA

Sangeetha Nambi said...

Super Super Asiya... Love that screw type slicer.... my kid will love this for sure... Will grab it...
http://recipe-excavator.blogspot.com

S.Menaga said...

இப்படி செய்து கொடுத்தால் குட்டீஸ்களுக்கு ரொம்ப பிடிக்குமே,அருமை அக்கா!!

ராமலக்ஷ்மி said...

அட:)! அழகு. உருளைக் கிழங்கு என்றால் சுவைக்குக் கேட்கணுமா?

Saraswathi Tharagaram said...

Looks soo cute and very addictive too..

Priya said...

Ada akka, superaa irruku intha potato, love to get that gadget. Yenga vanguninga Indialaya?

faiza kader said...

Adada.. Engayavathu thedi paruthu mudalil intha toolai vaagi udaney seiyanum polla iruku.. Online shopping il kidaikuma? Romba supera iruku akka

Asiya Omar said...

விஜயலஷ்மி மிக்க நன்றி.

சங்கீதா மிக்க நன்றி.

மேனகா மிக்க நன்றி.

ராமலஷ்மி மிக்க நன்றி.

ப்ரியா, ஃபாயிஜா மிக்க நன்றி.
இந்த ஸ்பைரல் கட்டர் சூப்பர் ஸ்லைசர் என்ற செட்டோடு இருந்தது.நான் Carrefour -ல் தான் வாங்கினேன்.

Mahi said...

அழகாய் இருக்கு ஆசியா அக்கா!

Easy (EZ) Editorial Calendar said...

பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

அமைதிச்சாரல் said...

ரொம்ப நல்லாருக்கு குறிப்பும் ஸ்பைரல் கட்டரும். முன்னாடி விளம்பரங்கள்ல இந்த கட்டரைப் பார்த்துருக்கேன்.

athira said...

ஆவ்வ்வ் சூப்பர் நல்ல ஐடியா ஆசியா.. உந்தக் கட்டர் இங்கு கடைகளில் கிடைக்குது... .

vanathy said...

super.

Jaleela Kamal said...

எனக்கு ஓப்பன் ஆகவே ரொம்ப நேரம் எடுத்தது.

ரொம்ப அழகாக இருக்கு.குழந்தைகளுக்கு சாப்பிட ஈசியாக இருக்கும்
இங்கு ஷாப்பிங் பெஸ்டிவலில் விற்பார்கள்.