Monday, December 10, 2012

மட்டன் வெண்டைக்காய் சால்னா / Mutton Bhendi Salna

தேவையான பொருட்கள்;
மட்டன் - 300 கிராம்
வெண்டைக்காய் - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 1
பெரிய தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
தயிர் - 2 டீஸ்பூன்
மல்லி இலை - சிறிது
மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன்
கறி மசாலாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் 3 டேபிள்ஸ்பூன் + முந்திரி 3 அரைக்க.
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

செய்முறை:

கறியை கொழுப்பு நீக்கி சுத்தமாக கழுவி தண்ணீர் வடிகட்டவும்.நறுக்க வேண்டியவைகளை நறுக்கியும்,தேங்காய் அரைத்தும் தயார் செய்து வைக்கவும்.

வெண்டைக்காயை நன்கு கழுவி துடைத்து இரண்டு இன்ச் துண்டாக போட்டு வைக்கவும்.அதனை மைக்ரோவேவில் இரண்டு நிமிடம் வைத்து எடுக்கலாம் அல்லது ஒரு நாண்ஸ்டிக் கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கியும் எடுத்து தனியாக வைக்கலாம்,

குக்கரில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் வதக்கவும்,இஞ்சி பூண்டு வதக்கி கரம் மசாலா சேர்த்து வதக்கவும்,நறுக்கிய தக்காளி ,மல்லி இலை சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்த்து தக்காளி மசியட்டும்.அத்துடன் மிளகாய்த்தூள்,மசாலாத்தூள் சேர்த்து பிரட்டி கறியை சேர்க்கவும்.தயிரும் சேர்த்து பிரட்டவும்.

பிரட்டி விட்டு தேவைக்கு தண்ணீர் சேர்த்து உப்பு சரி பார்த்து மூடி மூன்று விசில் வேக வைக்கவும்.

விசில் அடங்கியவுடன் திறந்து வதக்கிய வெண்டைக்காயை சேர்க்கவும்.

சால்னாவில் கலந்து விடவும்.


அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்க்கவும்.நன்கு எல்லாம் சேர்ந்து கொதித்து தேங்காய் வாடையும் மடங்கி வெண்டைக்காய் மட்டன் சால்னாவுடன் சேர்ந்து காணப்படும்.சிறிது நேரம் மூடி சிம்மில் வைத்து திறக்கவும்.எண்ணெய் மேலெழும்பி வரும்.
அடுப்பை அணைக்கவும்.

சுவையான மட்டன் வெண்டைக்காய் சால்னா ரெடி.
வெஜ் மட்டும் சாப்பிடுபவர்கள் இதே முறையில் வெண்டைக்காய் மட்டும் வைத்தும் சாப்பிடலாம்.
இதனை வெறும் சோற்றோடு சாப்பிட சுவையாக இருக்கும், மட்டனை விட எல்லோரும் வெண்டைக்காயை தான் பிரியமாக எடுத்து சாப்பிடுவார்கள்.

குறிப்பு:
இதில் சேர்த்து இருக்கும் கறிமசாலா எங்க ஊர் அடிப்படை மசாலாவாகும்.அதனைக் காண இங்கு கிளிக்கவும்.நீங்க உங்க டேஸ்ட்டுக்கு மசாலா சேர்த்து இந்த முறையில் சமைத்து அசத்தலாம்.


வெண்டைக்காய் மீன் குழம்பு பார்க்க இங்கே கிளிக்கவும்.

ஜலீலாவின் பேச்சிலர்ஸ் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.

15 comments:

Nandini said...

Delicious and unique salna.

Vijayalakshmi Dharmaraj said...

nice..
Thalipeeth
VIRUNTHU UNNA VAANGA

மனோ சாமிநாதன் said...

மட்டனுடன் வெண்டைக்காய்! இந்த குறிப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது ஆசியா! அதுவும் அந்த கறி மசாலா குறிப்பும் சீரகம் அதிகமாக, சோம்பு குறைவாக என்று மிக வித்தியாசம்!!

ஸாதிகா said...

மட்டனுடன் வெண்டைக்காயா?வித்த்யாசமாக யோசித்து புதுமையாக சமைக்கறீங்க தோழி

S.Menaga said...

மட்டன்+வெண்டைக்காய் காம்பினேஷன் வித்தியாசமாவும்,பார்ப்பதற்க்கு நன்றாகவும் இருக்கு....

Vimitha Anand said...

Combo pudhusa irukka. try panni paakaren... Yummy salna

Sweetlime said...

salam, amma...Its very very nice..all ur receipes are exactly like my mom receipes...I can see my mom's cooking in ur blog....May allah shower all his blessings on u...

faiza kader said...

Akka ithu romba pudusa irukey.. Neegaley try panniyatha or ithu pool seivagala...?

Priya said...

Very unique salna, mutton and bhindi quite interesting.

Asiya Omar said...

நந்தினி நன்றி.

விஜி நன்றி.

மனோ அக்கா நன்றி.

ஸாதிகா நன்றி.

மேனகா நன்றி.

விமிதா நன்றி.

ஸ்வீட் லைம் கருத்திற்கு மகிழ்ச்சி.

ஃபாயிஜா, இது எங்க வீட்டில் இருந்தே சாதாரணமாக அடிக்கடி செய்வது.எங்க ஊர் சமையல்.

ப்ரியா செய்து பாருங்க.

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

Easy (EZ) Editorial Calendar said...

ரொம்ப நல்லா இருக்கு......பகிர்வுக்கு மிக்க நன்றி......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Divya Pramil said...

Akka super combo...Never thought of vendakkai and mutton, will try this soon :)
Prawn Fry On Toothpicks / Eral Fry

மாதேவி said...

அருமையாக இருக்கின்றது ஆசியா.

devadass snr said...

நண்பரே எனது இதயங் கனிந்த கிருத்துவ மற்றும் புது வருட நல் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

riswana parvin said...

very useful....loads of thanks.......