Thursday, December 27, 2012

புட்டு & இடியாப்பம் - வீடியோ சமையல் / Puttu & Idiyappam - Video Samaiyal

வீடியோ சமையல் பகிர்ந்து ரொம்ப நாளாச்சு.முன்னேற்பாடு இல்லாமல் தீடீரென்று நினைத்தவுடன் எடுத்தது இந்த பகிர்வு.பேச்சிலர்ஸ் இவெண்ட்டிற்காக எடுத்தது.பிஸியாக இருந்ததால் பகிர முடியாமல் போய்விட்டது.லைட்டிங்  சுமாராகத்தான் வந்திருக்கு. மக்கள்ஸ் அட்ஜஸ்ட் செய்துப்பீங்கன்னு நம்புகிறேன்.

 புட்டு செய்முறை:

video

இடியாப்பம் செய்முறை:


video

புட்டு,இடியாப்பம் எப்படி ஈசியாக செய்வது என்று காட்டியிருக்கிறேன். பார்த்து விட்டு உங்களின் அன்பான கருத்தை தெரிவிக்கவும்.இனி நீங்களும் அடிக்கடி செய்ய ஆரம்பித்து வீடுவீர்கள் . செய்து விட்டு உங்க விருப்பமான பக்க உணவுடன் பரிமாறவும்.

18 comments:

Kavitha said...

சூப்பர் ஆசியா..
அவசியம் செய்து பார்க்கிறேன்..அதுவும் அந்த குட்டி இடியாப்பம் கண்ணிலேயே இருக்கு..

வாழ்த்துக்கள்

Savitha Ganesan said...

romba useful aana video akka.super pongo.

அமைதிச்சாரல் said...

பேச்சிலர்களுக்கும் ரொம்பவே எளிமையாப் புரியும்படி அழகாச் செஞ்சு காமிச்சுருக்கீங்க. மாவில் ஒரு ஸ்பூன் எண்ணெய்யைச் சேர்த்துப் பிசிறிட்டு அப்புறம் வெந்நீர் சேர்த்துக் கிளறினா இடியாப்பம் இன்னும் உதிரா வரும்.

Asiya Omar said...

நன்றி கவிதா.மிக்க மகிழ்ச்சி.

நன்றி சவீதா.மிக்க மகிழ்ச்சி.

நன்றி அமைதிச்சாரல். மொத்தமாவு கிண்டும் பொழுது நானும் எண்ணெயோ நெய்யோ சேர்ப்பது வழக்கம்.கருத்திற்கு மகிழ்ச்சி.

ஸாதிகா said...

ஆஹா..புட்டும் இடியாப்பமும் 4 இல் இருந்து 4 1/2 நிமிடங்களில் வெகு சுலபமாக செய்து காட்டி விட்டீர்கள்.விடீயோவும் தடங்கல் இல்லாமல்,குரலும் தெளிவாக இருந்தது.இப்படி அடிக்கடி வீடியோ சமையல் போடுங்கள்.

இடியாப்பத்தை இட்லி வடிவில் அவித்து இருக்கின்றீர்கள்.நாங்கள் இதற்கென்றே மூங்கில் தட்டு விற்கும்.அதில் இடியாப்பம் பிழிந்து அவித்தால் மிகவும் ஷாஃப்டாகவும் பனை ஓலையின் மணமுமுமாக இடியாப்பம் மிக அருமையாக இருக்கும்.

Asiya Omar said...

ஸாதிகா கருத்திற்கு நன்றி.நாங்களும் ஓலைத்தட்டில் தான் இடியப்பம் அவிப்பது வழக்கம்.ஓலைதட்டும் ஊரில் சொல்லி இங்கே வாங்கி வந்தது இருக்கிறது.நான் தான் எல்லாரும் ஈசியாக செய்வது போல் இருக்க இட்லி தட்டில் அவித்து காட்டினேன்.மகன் சும்மா எதார்த்தமாக எடுத்து தந்த வீடியோ இது.ஆஹா இப்ப தான் ஓலை தட்டில் அவித்து காட்ட்யிருக்க்லாமேன்னு நினைக்கிறேன்.:)..

இளமதி said...

ஆகா..வீடியோ சமையல்ல அசத்தீட்டீங்க ஆசியாக்கா...:)

குழல்புட்டு ரொம்ப நாளாச்சு..அவிக்கனும்னு ஆவலை கிளப்பீட்டீங்க..:)
இடியப்பம் நான் இந்த மாதிரிதான் அவசரத்துக்கு செய்வது வழக்கம்..

அழகான தெளிவான அருமையான குரலோடு சேர்ந்த பதிவு. வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்க மகனுக்கும்..
பகிர்வுக்கு மிக்க நன்றி அக்கா..:)

Vimitha Anand said...

Super attempt... Asathiteenga ponga

ராதா ராணி said...

அழகான செய்முறை விளக்கம்.. இடியாப்பம் பஞ்சு பஞ்சா நல்லா இருக்கு ஆசியா. பகிர்வுக்கு நன்றி.

Sweetlime said...

salam amma ur puttu+ idiyappam super...I really dont know how to make puttu..without waiting i tried like as u said..It came out very well..thanks ma..Keep rocking...

Priya said...

Romba useful video Akka, thanks for sharing.

வை.கோபாலகிருஷ்ணன் said...

;))))) Superb !

Asiya Omar said...

இளமதி வருகைக்கு மிக்க நன்றி.

விமிதா மிக்க நன்றி.

ராதா ராணி மிக்க நன்றி.

ஸ்வீட் லைம் மிக்க நன்றி.

ப்ரியா மிக்க நன்றி.

வை.கோ சார் மிக்க நன்றி.

Mahi said...

இந்த மாதிரி இடியப்ப அச்சு என்கிட்ட இல்லை, கோவையில் கடைகளிலும் எவர் சில்வர் அச்சுதான் கிடைக்குது. இப்படி மெலிசு இடியப்பம் செய்யணும்னு எனக்கு ரொம்ப ஆசை ஆசியாக்கா! புட்டு வீடியோ அப்புறமாதான் பார்க்கணும். ;)

p.s. பரோட்டா & உருளைகிழங்கு குருமா செஞ்சு ஒரு புடி புடிச்சாச்! ;):)

இமா said...

//பேச்சிலர்ஸ் இவெண்ட்டிற்காக// பொருத்தமான விதமாக விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள் ஆசியா. பாராட்டுக்கள்.

கோமதி அரசு said...

அழகான குரலில் இடியாப்பம், புட்டு செய்து காட்டி விட்டீர்கள்.
மிகவும் அருமை.

Asiya Omar said...

மகி கருத்திற்கு மகிழ்ச்சி.எங்க ஊரில் இந்த மாதிரி இடியாப்ப உரல் சாதாரணமாக கிடைக்கிறது.சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது வாங்கி நிச்சயம் அனுப்புகிறேன்.

இமா கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

கோமதியக்கா கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

Shama Nagarajan said...

all time favorite akka