Saturday, December 22, 2012

தக்காளி ஆணம் / Tomato Salna


தேவையான பொருட்கள்;
தக்காளி - 200 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மல்லி கருவேப்பிலை - சிறிது
தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன் + முந்திரி பருப்பு - 3(அரைக்க)
எண்ணெய் - 2டேபிள்ஸ்பூன்
கடுகு ,உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1
உப்பு  -தேவைக்கு


 தக்காளி,வெங்காயத்தை இப்படி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 குக்கரில் நறுக்கிய வெங்காயம்,தக்காளி, இஞ்சி பூண்டு,கரம் மசாலா,மஞ்சள்,மிளகாய்த்தூள் சேர்க்கவும்.தாளிக்க சிறிது நறுக்கிய வெங்காயம் தனியாக எடுத்து வைக்கவும்.
 இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும்.பச்சை மிளகாய்,சிறிது  நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.

 மூடி குக்கரை 2 விசில் விடவும் அடுப்பை அணைக்கவும்.திறந்தால் இப்படியிருக்கும்.
 அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க வைக்கவும்.தேவைக்கு தண்ணீர், உப்பு சேர்க்கவும்.

 நன்கு கொதித்து தேங்காய்  வாடை மடங்கட்டும்.வாணலியில் எண்ணெய் விட்டு சூடேறியதும் கடுகு,உளுத்தம் பருப்பு சேர்க்கவும்,பின்பு வெந்தயம் சேர்க்கவும்,வற்றல்,கருவேப்பிலை  சேர்த்து வெடிக்கவும்,சிறிது நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் தாளிச்சதை கொதித்து கொண்டிருக்கும் தக்காளி ஆணத்தில் சேர்த்து கலந்து விடவும்.சுவையான தக்காளி ஆணம் ரெடி. 
இதனை வெறும் சோறு, இட்லி,தோசை,சப்பாத்தி,ஆப்பம்,இடியாப்பம்,பரோட்டா ஆகியவற்றுடன் பரிமாறலாம்.

முக்கிய குறிப்பு:
சாதத்தில் ரசம் போல் ஊற்றி சாப்பிட தேங்காய் அரவைக்கு பதில் 1 கப்
சோறு வடித்த கஞ்சி சேர்க்கவும்.கலந்து விட்டு கொதி வரவும், தாளித்து உபயோகிக்கலாம்.இது மிகவும் ருசியாக இருக்கும்.இந்த வெறும் சோறு, தக்காளி ஆணத்திற்கு தொட்டுக் கொள்ள  வெங்காய முட்டை ஆம்லட் சூப்பர் காம்பினேஷன்.இது ஊரில் எங்க வீட்டில் அண்ணிகள் அடிக்கடி செய்யும் ஆணம். சிம்பிளாகவும் ருசியாகவும் இருக்கும்.

Sending this recipe to Gayathri's Walk through Memory Lane hosted by Nithu's Kitchen.

15 comments:

faiza kader said...

Simply super..

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சகோ.

ராதா ராணி said...

தக்காளியில் இதுவரை இப்படி செய்ததில்லை.. வித்தியாசமான குறிப்பா இருக்கு , வடிகஞ்சி சேர்த்து செய்றது.. சுலபமாவும் இருக்கு ஆசியா..இன்று செய்து பார்க்கிறேன்..

அமைதிச்சாரல் said...

குறிப்பு நல்லாருக்கு.

ஸாதிகா said...

ஆஹா...தக்காளி ஆணம்..பார்க்கவே சூப்பராக உள்ளது.சைட் டிஷ் என்ன செய்வது என்று குழம்பிக்கொண்டு இருக்கும் பொழுது எப்பவும் வீட்டில் இருக்கும் பொருட்களைக்கொண்டே ஒரு அருமையான சைட் டிஷ் இனி தயாரித்து விடலாம் வெகு சுலபமாக.

Mahi said...

//1 கப் சோறு வடித்த கஞ்சி //...avvvv! நான்லாம் சமைக்க ஆரம்பிச்சதில இருந்தே குக்கர்சோறுதான்! கஞ்சி எப்புடி வடிக்க? :) குக்கரில இல்லாம பாத்திரத்தில சோறுவடிக்க ஒரு ஸ்டெப் பை ஸ்டெப் ரெசிப்பி போடுங்களேன் ஆசியாக்கா? ;) :)

தக்காளி ஆணம் நல்லாருக்குது, செய்து பார்த்து சொல்லறேன்.

Asiya Omar said...

கருத்திற்கு மிக்க நன்றி ஃபாயிஜா.

மிக்க நன்றி சகோ.வெங்கட்.

ராதா செய்து பாருங்க,சுட சுட சாதத்துடன் சாப்பிட சூப்ப்ராக இருக்கும்.

மிக்க நன்றி அமைதிச்சாரல்.

ஸாதிகா மிக்க நன்றி.இதனை வீட்டு மசாலா போட்டு தான் வைப்பாங்க,நான் ஈசியாக இருக்க மாற்றி கொடுத்திருக்கேன்.

மகி,எங்க வீட்டில் எப்பவும் சாதம் வடித்து தான் செய்வேன்.ஒரு நாள் பதிவு போட்டால் போச்சு.செய்து பாருங்க.பிடிக்கும்,கிட்ட தட்ட எம்டி சால்னா மாதிரி தான்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தளதளக்கும் தக்காளி போன்ற பகிர்வுக்கு வாழ்த்துகள்.

Priya said...

Romba superaa irruku Salna, flavourful.

Sangeetha Nambi said...

I can feel the smell... Yummy...
http://recipe-excavator.blogspot.com

Sumi said...

Very nice to hear the word "aanam"
This is a frequently made dish at my household back in my native place. I have been searching for a recipe for a long time..thanks will try this.

Do you know a recipe for "Meen/fish Aanam" ?

athira said...

வாவ்வ்வ் பார்க்கவே அழகு..தேங்காய் சேர்த்தாலே சூப்பர்தான்ன்..

Saraswathi Tharagaram said...

MY Mum used to make this salna, Really missing her dishes and Your dishes are very comforting and close to my heart..

S.Menaga said...

ஆஹா தோசைக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்...

கோமதி அரசு said...

தக்காளி ஆணம் சுவையாக செய்ய எளிதாக இருக்கிறது ஆசியா.
வாழ்த்துக்கள்.