Friday, March 30, 2012

ஈசி சிக்கன் சுருட்டு கறி / Easy Chicken Curry.

தேவையான பொருட்கள்:
சிக்கன் துண்டுகள் - முக்கால் கிலோ
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
பச்சை மிளகாய் - 3
நறுக்கிய மல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 6 நபர்.

செய்முறை:

சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி தண்ணீர் வடித்து,அத்துடன்,தயிர்,மஞ்சள் தூள்,ஒரு டீஸ்பூன் இஞ்சிப் பூண்டு,தேவைக்கு உப்பு சேர்த்து அரை மணி நேரமாவது விரவி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காயவும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கி சிவற ஆரம்பிக்கவும் இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா சேர்க்கவும்.நன்கு வதங்கட்டும்.

நறுக்கிய தக்காளி,மிளகாய்,மல்லி இலை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கி கூட்டு போல் ஆனவுடன் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.

விரவி வைத்த சிக்கனை சேர்க்கவும்.
நன்கு பிரட்டி விடவும்,தண்ணீர் சேர்க்கக் கூடாது,சிக்கனில் ஊரும் தண்ணீரே போதும்.அடுப்பை மீடியமாக வைக்கவும்.மூடி கால் மணி நேரம் வேக வேண்டும்,இடையில் திறந்து பிரட்டி விட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.

இப்படி சிக்கன் கூட்டோடு சுருண்டு எண்ணெய் மேலெழும்பி வரும்.அடுப்பை அணைக்கவும்.
சுவையான சிக்கன் சுருட்டு கறி ரெடி.
விரும்பிய முக்கிய உணவுடன் பக்க உணவாகப் பரிமாறவும்.நீங்கள் சமைக்கும் சிக்கன் அளவிற்கு தகுந்தபடி பொருட்கள் அளவை கணக்கிட்டு சேர்த்து கொள்ளவும்.
.

-ஆசியா உமர்.

Tuesday, March 27, 2012

முள்ளங்கி கீரை பருப்பு /Radish Greens Dal

தேவையான பொருட்கள்:
முள்ளங்கி - 1
முள்ளங்கி கீரை - 2 கப்
பருப்பு - 50 கிராம்
பூண்டு - 4 பல்
தக்காளி - 1
மஞ்சப் பொடி - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

அரைக்க:
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம்,சோம்பு - தலா கால் டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1

தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு - தலா அரைடீபூன்
சின்ன வெங்காயம் - 5 நறுக்கியது.
பெருங்காயப் பொடி -கால் டீஸ்பூன்

நான் எப்பவும் ஒரு கீரை பேய், ஃப்ரெஷாக எங்கே கீரையைக் கண்டாலும் விடுவதில்லை.இந்த சத்தான முள்ளங்கி கீரை கிடைத்தால் விடுவேனா என்ன?


முள்ளங்கி,கீரையை மண் போக அலசி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
றவைத்த பருப்பை நறுக்கிய பூண்டு பல் மஞ்சப் பொடி சேர்த்து வேகவைக்கவும்.


சீரகம் சோம்பு,வற்றல் போட்டு மிக்ஸியில் பொடித்து விட்டு ,தேங்காய் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

பருப்பு மலர்ந்து வரும் பொழுது நறுக்கிய முள்ளங்கி கீரையை சேர்க்கவும்.சிறிது நேரம் வேக விடவும்.
நறுக்கிய தக்காளி,சிறிது உப்பு சேர்க்கவும்.எல்லாம் சேர்ந்து வேகட்டும்.
அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.கலந்து விடவும்.

நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் நெய் விட்டு காயவும்,கடுகு,உ.பருப்பு சேர்த்து வெடிக்கவும்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்,பெருங்காயப் பொடி சேர்க்கவும்.சிவந்து வரவும் ,தாளித்ததை வெந்த கீரை பருப்பில் கொட்டவும்.

சுவையான சத்தான முள்ளங்கி கீரை பருப்பு ரெடி.
ப்லைன் சாதம் சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

--ஆசியா உமர்.

Saturday, March 24, 2012

ஈசி இறால் பிரட்டல் / Easy Prawn Roast

தேவையான பொருட்கள்:
ஒரு கிலோ மீடியம் சைஸ் இறால் வாங்கி சுத்தம் செய்து கழுவி எடுத்தால் அரைக்கிலோ கிடைக்கும்.
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
புளிக்காத கெட்டி தயிர் - 1-2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன்
காஷ்மீரி சில்லி பவுடர் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 100 கிராம்
நறுக்கிய தக்காளி - 100 கிராம்
நறுக்கிய பச்சை மிளகாய் - 1-2
நறுக்கிய மல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடித்த இறாலுடன் சிறிது உப்பு,மஞ்சள்தூள்,தயிர்,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காயவும் ரெடி செய்த இறாலைப் போடவும்.பிரட்டி விடவும்.

வெந்து வரும் பொழுது தண்ணீர் இறாலில் ஊறும்.அத்துடன் நறுக்கிய வெங்காயம்,தக்காளி,மல்லி இலை,பச்சை மிள்காய் சேர்க்கவும்.நன்கு பிரட்டு விட்டு தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும்.

மிள்காய்த்தூள்,கரம் மசாலா சேர்க்கவும்.

நன்கு பிரட்டு விட்டு வேகவிடவும்.தண்ணீர் சுண்டி வரும்.

மூடி 5 நிமிடம் மிகச் சிறிய தீயில் வைக்கவும்.நல்ல பிரட்டினாற் போல் எண்ணெய் மேல் எழும்பி வரும்.அடுப்பை அணைக்கவும்.

சுவையான ஈசி இறால் பிரட்டல் ரெடி.
மசாலா,குழம்பு என்று செய்வதை விட ஈசியாக இப்படி செய்து திருப்தியாக சாப்பிடலாம்.இதனை விரும்பிய வற்றுடன் பக்க உணவாக பரிமாறவும்.

--ஆசியா உமர்.

Wednesday, March 21, 2012

அயிலக்கறி / Mackerel Curry

இது அறுசுவைத்தோழி தளிகாவின் குறிப்பு. மிக்க நன்றி தளிகா.

  • மீன் இந்த சைஸ் பார்த்து வாங்கிக்கோங்க.அது தான் ருசி.பெரிய சைஸ் எங்களுக்கு பிடிப்பதில்லை.அயிலா நம்ம கானாங்கெழுத்தி தான்.
  • தேவையான பொருட்கள்;
  • மேக்கரேல்/அயிலா மீன் - அரை கிலோ
  • பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
  • அல்லது சின்ன வெங்காயம் - 3/4 கப்
  • தக்காளி - ஒன்று
  • இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 5
  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  • மல்லித் தூள் - 3/4 - 1 தேக்கரண்டி
  • தேங்காய்ப் பால் - ஒரு கப்
  • தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
  • தாளிக்க:
  • தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 3
  • கறிவேப்பிலை - 2 கொத்து
மீனை சுத்தம் செய்து நன்கு கழுவி எடுத்து கொள்ளவும். தேங்காயை ஒன்றாம்பால், இரண்டாம் பால் என்று தனித்தனியே அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
முதலில் கடாயில் எண்ணெய் விட்டு காயவும் நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
பின் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாயை வரிசையாக இரண்டிரண்டு நிமிடம் வதக்கி அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்த்து வதக்கவும்.
பின்பு அதில் இரண்டாம் தேங்காய்பாலையும் ஊற்றி உப்பு சேர்த்து கொதி வரும்பொழுது மீன் சேர்க்கவும்.
மீன் சேர்த்து 5-10 நிமிடம் சிறு தீயில் கொதிக்கட்டும்.

முதல் திக்கான தேங்காய்ப்பால் சேர்க்கவும்.

சிறிது நுரை கூடி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.

பின் தாளிப்பில் கொடுத்துள்ள கறிவேப்பிலை, வெங்காயத்தை 2 தேக்கரண்டி எண்ணெயில் நன்கு பொன்னிறமாக வதக்கி சேர்க்கவும்.
சுவையான அயிலக்கறி ரெடி.

அயிலக்கறியை விருப்பமான உணவுடன் பக்க உணவாக பரிமாறவும்.


---ஆசியா உமர்.

Monday, March 19, 2012

கீரை கோஸ் கேரட் பொரியல்/ Greens Cabbage Carrot Poriyal


இந்த குறிப்பை ஹெல்தி மார்சல்ஸ் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.

தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை அல்லது ஏதாவது ஒரு கீரை - ஒரு கப்
நறுக்கிய கோஸ் - ஒரு கப்
நறுக்கிய கேரட் - ஒரு கப்
நறுக்கிய வெங்காயம் - 1
ஊறவைத்த பாசிப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சப்பொடி,சீரகப்பொடி,பெருங்காயப்பொடி - தலா கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு,சீரகம் - தலா அரைடீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

வாணலியில் எண்ணெய் விட்டு காயவும்,கடுகு,உ.பருப்பு,சீரகம்,வற்றல் போட்டு வெடிக்க விடவும்.
நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.கேரட்,கோஸ்,கீரை சேர்க்கவும்.

நன்கு பிரட்டி விட்டு ஊறிய பாசிப்பருப்பை சிறிது தண்ணீருடன் சேர்க்கவும்.

நன்கு பிரட்டி விட்டு மஞ்சப் பொடி,சீரகப்பொடி,பெருங்காயப்பொடி சேர்க்கவும்.நன்கு வதக்கி மூடி விடவும்.


இப்படி வெந்து வரும்,உப்பு தேவைக்கு சேர்க்கவும்.
தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி விடவும்.

சுவையான சத்தான முருங்கைக்கீரை கோஸ் கேரட் பொரியல் ரெடி.
பக்க உணவாகவோ அல்லது அப்படியே கூட சாப்பிடலாம்.மிகவும் சத்தான ருசியான பொரியல்.

-ஆசியா உமர்.