Wednesday, August 29, 2012

ஈசி கிட்ஸ் பட்டர் குக்கீஸ் / Easy Kids Butter Cookies.




தேவையான பொருட்கள்;
பட்டர் - 100 கிராம்
சீனி - 50 கிராம்
மைதா மாவு - 175 கிராம் ( 1 கப்)
வெனிலா எசன்ஸ் - சில துளிகள்


முதலில் பட்டர் சீனியை கலந்து கொள்ளவும்.சீனி கரைந்தும் கரையாமலும் இருந்தால் குகீஸ் கிரிஸ்பாக இருக்கும்.
வெனிலா எசன்ஸ் சில துளிகள் சேர்க்கவும்.
மைதா மாவு சேர்க்கவும் பிசைந்து கொள்ளவும். சப்பாத்தி மாவு மாதிரி வரும் .உருட்டி கொள்ளவும்.

சின்னதாக பிரித்து தேவையான சேப் செய்து கொள்ளவும்.அச்சு இருந்தால் ஈசி.

ஓவனை 150 டிகிரிக்கு முற்சூடு செய்யவும். பேக்கிங் ட்ரேயில் பட்டர் மைதா தடவிக் கொள்ளவும்.அதனில் ரெடி செய்த குக்கீஸ் வைக்கவும்.

15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.ஆறியவுடன் டப்பாக்களில் அடைத்து வைக்கவும்.கிரிஸ்பி யம்மி குக்கீஸ் ரெடி. நீங்க செய்யும் அளவை பொருத்து எண்ணிக்கை மாறுபடலாம். 15- 20 குக்கீஸ் வரும்.

விரும்பினால் இப்படி பட்டர், ஐசிங் சுகர் பீட்டர் கொண்டு மிக்ஸ் செய்து ஐசிங் டெக்கரேட் செய்து கொடுத்தால் குழந்தைகள் என்ன பெரியவர்களே விரும்பி சாப்பிடுவாங்க.குக்கீஸ் மீது பட்டர் ஐசிங் தடவி மற்றொரு குக்கீஸால் மூடி கடித்து சாப்பிட்டால் ஆஹா! தான்.


வாவ்! யம்மி ஈசி பட்டர் குக்கீஸ் ரெடி.

நானே விட்டால் அத்தனை யும் சாப்பிட்டிருப்பேன்.செம டேஸ்ட். இது என் மகள் எனக்காக செய்தது. என்ன சொல்லுங்க,வீட்டில் செய்தால் அதன் ருசி தனி தான்.


Tuesday, August 28, 2012

சிக்கன் ஃப்ரிட்டர்ஸ்/ Chicken Fritters

தேவையான பொருட்கள்;


போன்லெஸ் சிக்கன் - 300 கிராம்
கரைத்துக் கொள்ள:
மைதா மாவு - 4 டேபிள்ஸ்பூன்
கார்ன்ஃப்லோர் - 2 டேபிள்ஸ்பூன்
முட்டை -1
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
பால் - கால் கப்
உப்பு - தேவைக்கு
கரைத்து கொள்ள தேவையான பொருட்களை ரெடி செய்து கலந்து கொள்ளவும்.

சிக்கன் சுத்தம் செய்து கழுவி சிறிய துண்டாக கட் செய்து கொள்ளவும்.

கலந்த மாவு வகைகளுடன் முட்டை பால் சேர்த்து திக்காக பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

சிக்கனை அதனுடன் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.பொரிக்கும் பொழுது நன்கு கலந்து தனித் தனி துண்டாக பிரட்டி எடுத்து எண்ணெயில் போடவும்.விருப்பப்பட்டால் இத்துடன் ப்ரெட் கிரம்ஸும் ரோல் செய்தும் பொரிக்கலாம்.

கடாயில் தேவைக்கு எண்ணெய் காயவிட்டு ரெடி செய்த சிக்கன் கலவையை பக்குவமாக மீடியம் ஃப்லேமில் பொன்னிறத்தில் பொரித்து எண்ணெய் வடித்து எடுக்கவும்.

சுவையான சிக்கன் ஃப்ரிட்டர்ஸ் ரெடி. இது சாஃப்டாக டேஸ்டாக இருக்கும்.
அழகிய தட்டில் வைத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.நான் இங்கு கொஞ்சமாக செய்து காட்டியிருக்கிறேன்.நீங்கள் உங்கள் அளவிற்கு தக்கபடி செய்து கொள்ளவும்.


Saturday, August 25, 2012

வெஜ் நூடுல்ஸ் பிரியாணி/ Veg Noodles Briyani



நூடுல்ஸில் பிரியாணி மணம் கொடுத்து சமைத்தால் ருசி சூப்பர். நீங்களும் செய்து பாருங்க.

தேவையான பொருட்கள்;
கறி ஃப்லேவர் நூடுல்ஸ் பாக்கெட் - 3 ( சுமார் 250 கிராம்)
நறுக்கிய காய்கறிகள் (கேரட்,கோஸ்,கொடைமிளகாய்)- 100 கிராம்
நறுக்கிய வெங்காயம் - 100 கிராம்
நறுக்கிய தக்காளி - 100 கிராம்
நறுக்கிய மல்லி புதினா - தலா - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
நுடுல்ஸ் பேக்கில் உள்ள கறி மசாலா - தேவைக்கு.
எண்ணெய் ,நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - மசாலாவில் உள்ளது போதும் அல்லது சிறிது தேவைக்கு.

காய்கறிகளை சுத்தம் செய்து கழுவி நறுக்கி வைக்கவும்.வெங்காயம் தக்காளி,மல்லி,புதினாவும் நறுக்கி கொள்ளவும்.
நூடுல்ஸ் பதமாக வடித்து மேலே குளிர்ந்த தண்ணீர் விட்டு வைத்தால் ஒன்றோடு ஒன்று ஒட்டாது.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் நெய் விட்டு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.லேசாக சிவறவும்,இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.
நறுக்கிய தக்காளி மல்லி புதினா சேர்க்கவும்.கால் டீஸ்பூன் உப்பு சேர்க்கவும். இலகுவாக வதங்கி விடும்.

நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
காய்கறிகள் வதங்கியதும் நூடுல்ஸ் பேக்கில் உள்ள மசாலாவை தேவைக்கு போடவும். 2-3 டீஸ்பூன் போடலாம்.நன்கு பிரட்டி விடவும்.வடித்த நூடுல்ஸ் சேர்க்கவும்.

நன்கு ஒரு சேர கலந்து காய்கறி,மசாலா எல்லாம் நூடுல்ஸ் மீது சார்ந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.சூடாக பரிமாறவும்.

சூப்பர் சுவையுள்ள வெஜ் நூடுல்ஸ் பிரியாணி ரெடி.

இது என் 400 -வது இடுகை.வருகை தந்து ஆதரவு கொடுத்த அனைத்து அனபான நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

Friday, August 24, 2012

விருதிற்கு மேல் விருது...

பதிவுலகில் அனுபவமிக்க திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் தொடர்ந்து சக பதிவர்களுக்கு விருது கொடுத்து வருவது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம்.அவர் கையால் நான் தொடர்ந்து மூன்று விருதுகள் பெற்று விட்டேன். மிக்க நன்றி ஐயா.




Fabulous Blog Ribbon Award, Liebster Award இவ்விருதுகளை ஐயாவிடமிருந்து பெற்றுக் கொள்வதில் மிக்க மகிழ்சியடைகிறேன்.


இவ்விருதுகளை என்னை பின்தொடரும் அனைத்து அன்பான பதிவர்களுக்கும் மகிழ்ச்சியுடன் சமர்ப்பிக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

Tuesday, August 21, 2012

கிரிஸ்பி சிக்கன் ட்ரம்ஸ்டிக் / Crispy Chicken Drumstick





தேவையான பொருட்கள்:
சிக்கன் லெக் பீஸ் - 1 கிலோ
சில்லி பவுடர் - 1-2 டீஸ்பூன்(அவரவர் விருப்பம்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - அரைடீஸ்பூன்
தயிர் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன்
முட்டை - 1
எண்ணெய், உப்பு - தேவைக்கு.

கோட்டிங் மிக்ஸ்க்கு :
மைதா - 4 டேபிள்ஸ்பூன்
கார்ன்ஃப்லோர் அல்லது அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன் ( நல்ல கிரிஸ்பியாக விரும்புபவர்கள் அரிசி மாவு முயற்சிக்கலாம்)
ஹாட் & ஸ்பைஸி ப்ரெட் க்ரம்ஸ் - 2 டேபிள்ஸ்பூன் ( ரெடிமேடாக கிடைக்கிறது)
(வீட்டில் தயார் செய்ய 2 டேபிள்ஸ்பூன் ப்ரெட்கிரம்ஸ் உடன் அரை டீஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ் சேர்த்தால் ஸ்பைஸி ப்ரெட் கிரம்ஸ் ரெடி)
உப்பு - அரை டீஸ்பூன்.

கோட்டிங் மிக்ஸ் ரெடி செய்து கொள்ளவும்.கலந்து கொள்ளவும்.

சிக்கன் தோல் நீக்கி மசாலா ஏறுவதற்கு வசதியாக கீறி விட்டுக் கொள்ளவும்.நன்கு அலசி தண்ணீர் வடிகட்டவும்.பின்பு தேவையான பொருட்களில் சொன்ன எண்ணெய் தவிர அனைத்து பொருளையும் சேர்த்து கலந்து ஒரு மணிநேரமாவது ஊறவைக்கவும்.காரம் குறைவாக இருக்க சில்லி பவுடர் அளவை குறைத்து கொள்ளலாம்.

மசாலா ஏறிய சிக்கனில் தண்ணீர் ஊறியிருந்தால், தண்ணீரை வடிகட்டிவிட்டு, ஊறிய சிக்கனை கோட்டிங் மிக்ஸில் நன்கு பிரட்டி எடுத்து வைக்கவும்.ஒரு அரைமணி நேரம் ஃப்ரீஸரில் வைத்து எடுக்கவும்.


பின்பு கடாயில் எண்ணெய் நன்கு காயவிட்டு, சிக்கன் துண்டுகளை மிதமான நெருப்பில் பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.




சுவையான கிரிஸ்பி சிக்கன் ட்ரம்ஸ்டிக் ரெடி.இதனை பார்ட்டியில் ஸ்டார்டராக அல்லது சைட் டிஷ் ஆக பரிமாறலாம்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Saturday, August 18, 2012

அளவுடனே உண்போம் ! நலமுடனே வாழ்வோம்!

அனைவருக்கும் அன்பான மகிழ்ச்சி கலந்த நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.


என்னை மிகவும் கவர்ந்த சகோ.ஜெய்லானி அவர்களின் இந்த பரங்கி பேட்டை கானா( சாப்பாடு) பாடலைக் கேட்டு அவர் இறுதியாக சொல்லும் நல்ல கருத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதே என் ஆசை.

இனி திங்க திங்க ஆசை...!




இன்ஷா அல்லாஹ்! வரும் நாட்களில் புத்தம் புதிய குறிப்புகளோடு சந்திப்போம்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.


Wednesday, August 15, 2012

சுதந்திர தின ஸ்பெஷல் & வாழ்த்துக்கள்


அனைவருக்கும் என்னுடைய அன்பான சுதந்திர தின வாழ்த்துக்கள்.
இந்த மாதம் முழுவதுமே வெறும் மீள்பதிவாய் பதிவுகளை பகிரும்படியாகிவிட்டது.
தொழுகை,ஓதல்,நோன்பு கால சமையல் என்று பொழுது கழிகிறது.

என் வலைப்பூ வாசகர்களுக்காக என்னுடைய என் மனம் கவர்ந்த




ஒவ்வொன்றாக கிளிக் செய்து பார்க்கவும்.மிக்க நன்றி.


Sunday, August 12, 2012

நோன்பு திறக்க - ஸ்நாக்ஸ் வகையறாக்கள்


நோன்பு திறக்கும் பொழுது தண்ணீர்,பேரீச்சம் பழத்தோடு,ஜூஸ்,கஞ்சி அத்துடன் வடை, பஜ்ஜி, சமோசா, பப்ஸ் வகையறாக்களும் பரிமாறுவதுண்டு.

என்னோட ரெசிப்பிக்கள் சில மீள் பதிவாக உங்களுக்காக. ஒவ்வொன்றாக கிளிக் செய்து பார்க்கவும்.
தமிழ்குடும்பம்.காமில் சமையல் ஸ்நாக்ஸ் போட்டிக்காக அனுப்பிய என்னோட










இன்னும் இருக்கும் அத்தனையும் பகிரத்தான் ஆசை. வரும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக பார்ப்போம்.


Wednesday, August 8, 2012

ஜில்லுன்னு வந்தாச்சு..!

ஊரிலிருந்து வந்ததும் வராததுமாக பத்திரமாக எடுத்து வந்த மண் பானையில் தண்ணீர் ஊற்றி வைத்தேன்.இந்த அமீரகக் கடும் கொடும் வெயிலுக்கு மிக இதமாகவே இருக்கு.எங்க வீட்டில் ஃப்ரிட்ஜ் தண்ணீர் யாரும் குடிப்பதில்லை.மண் பானை தண்ணீரையாவது குடிப்பாங்கன்னு பார்த்தால் யாருமே தொடலை,ஏன்னு கேட்டால் ஃப்ரிட்ஜ் தண்ணீரை விட ஜில்லுன்னு இருக்காம்.பின்ன இருக்காதா என்ன? ஏசியில் மண் பானையை வைத்தால் அப்படி தானே இருக்கும்.ஆஹா!ஆனால் நோன்பு திறந்தவுடன் இந்த மண்பானை தண்ணீரில் எலுமிச்சை பிழிந்த நன்னாரி சர்பத்(ஊரில் இருந்து வரும் பொழுது என்னோட சாச்சி ஆசையாக வாங்கி தந்தது)அதுவும் சப்ஜாவிதையுடன் கலந்து குடிக்கும் பொழுது சூப்பராகத்தான் இருக்கு.

ரமலான் மாதம் கழித்து பதிவிடலாம் என்று நினைத்திருந்தேன், என்றாலும் என் நோன்பு ஸ்பெஷல் ரெசிப்பிக்களை மீள் பதிவாகவாவது பதிவிடலாம் என்ற எண்ணம் வந்ததால் இந்த இடுகை.

இந்த பதிவில் என்னுடைய வெரைட்டி கஞ்சி வகைகள் உங்களுக்காக..



கஞ்சி இல்லாமல் நோன்பு திறப்பா? நோன்பு திறப்பின் சிறப்பு உணவில் முதல் இடம் இந்த கஞ்சிக்கு தான் என்பதை நான் சொல்ல வேண்டுமா என்ன?

என்றென்றும் அன்புடன்,
-ஆசியா உமர்.