Friday, September 28, 2012

வறுத்தரைத்த சாளை மீன் குழம்பு & ஃப்ரை/ Sardines fish curry & Fry




தேவையான பொருட்கள்;
சாளை மீன் - 12
புளி - எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் -1
பூண்டு - 4 பல்

வறுத்து அரைக்க :
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
மிளகு - 10
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் -2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
தாளிக்க :
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
கடுகு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது.

மீனை செதில் நீக்கி தலை வயிறு பகுதி கழிவு நீக்கி நன்கு கழுவி தண்ணீர் வடிகட்டவும்.புளியை கரைத்து வைக்கவும்.


கடாயில்  மேல் குறிப்பிட்டவற்றை சிவற வறுக்கவும்.

வறுத்து அரைத்த விழுதுடன் தேவைக்கு தண்ணீர், உப்பு  சேர்த்து மண் பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும்.கீறிய பச்சை மிளகாய் பூண்டு பல் சேர்க்கவும். நன்கு கொதிவரவும் புளித்தண்ணீர் சேர்க்கவும்.பச்சை வாடை மடங்கும் வரை கொதிக்க விடவும்.

மீன் சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.  
ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் காயவிட்டு கடுகு,கருவேப்பிலை  போட்டு வெடிக்கவும்,வெங்காயம் பொன்னிறமாக வதக்கி தயாரான மீன் குழம்பில் சேர்த்து கலந்து விடவும்.சிம்மில் 5 நிமிடம்  வைத்து உப்பு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும்.
சுவையான வறுத்தரைத்த சாளை மீன் குழம்பு ரெடி.
இந்த மீன் குழம்பு மூன்று நாள் வைத்திருந்தாலும் கெடாது.கைபடாமல் சூடு படுத்தி வைக்க வேண்டும்.பழைய மீன் குழம்பு சூப்பராக இருக்கும்.தக்காளி சேர்க்காமல் செய்த மீன் குழம்பு பக்குவமாக செய்தால் அருமையாக இருக்கும்.

மீன் பொரிக்க :
சாளை மீன் - 12
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள், மிளகு, சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன்
வினிகர் அல்லது எலுமிச்சை சாறு -1- 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கு.
குறிப்பிட்டவற்றை சிறிது தண்ணீர் சேர்ந்து கலந்து  மீன் மீது பூசி ஒரு மணி நேரம் வைக்கவும்.


ஒரு டப்பாவில் 2 டேபிள்ஸ்பூன் கோதுமை மாவு, ப்ரெட் கிரம்ஸ் 1 டேபிள்ஸ்பூன், சிறிது உப்பு கலந்து வைக்கவும். 
கலந்த மாவில் ஊறிய மீனை பிரட்டி சிறிது நேரம் வைக்கவும்.
கடாயில் தேவைக்கு எண்ணெய் சேர்த்து நன்கு சூடு வரவும் ரெடி செய்த மீனை போட்டு இரு பக்கமும் சிவற பொரித்து எடுக்கவும்.

சுவையான சாளை மீன் ஃப்ரை ரெடி. இதனை சும்மாவே நெத்திலி ஃப்ரை மாதிரி ஸ்டார்டராகவும் பரிமாறலாம்.

ஈசி சாளை மீன் குழம்பு & ரோஸ்ட் பார்க்க இங்கு கிளிக்கவும்



Thursday, September 27, 2012

வெண்டைக்காய் முட்டைப் பொரியல் / Bhindi Egg Stir Fry

தேவையான பொருட்கள்;
வெண்டைக்காய் - கால் கிலோ
முட்டை - 1
பெரிய வெங்காயம் - 1
கடுகு,  உ.பருப்பு -1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1
மிளகு,சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு.

செய்முறை :
1.வெண்டைக்காயை கழுவி துடைத்து இப்படி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
2.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்து வரவும்,கடுகு,உ.பருப்பு,வற்றல் கிள்ளி போட்டு கருவேப்பிலை சேர்க்கவும்.
3.நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அடுத்து நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து நன்கு வதக்கி வேக விடவும். உப்பு,மிளகு,சீரகத்தூள்  சேர்க்கவும், நன்கு பிரட்டி விடவும்.
4. முட்டையை பின்ச் உப்பு சேர்த்து  அடித்து  வதங்கிய வெண்டைக்காயுடன் சேர்க்கவும், அடுப்பை சிம்மில் வைத்து சிறிது முட்டை வெந்து வரவும் நன்கு உதிர்ந்து வருவது போல் பிரட்டி விட்டு தேங்காய் துருவல் சேர்க்கவும், பிரட்டவும். அடுப்பை அணைக்கவும்.

சுவையான வெண்டைக்காய் முட்டைப் பொரியல் ரெடி.

என்னுடைய
 கேரட் முட்டைப் பொரியல்
முட்டைகோஸ் முட்டைப்  பொரியல்
பார்க்க கிளிக்கவும்.

Tuesday, September 25, 2012

முருங்கைக்கீரை கூனி இறால் பொரியல் / Drumstick leaves dry shrimps poriyal



தேவையான பொருட்கள்;
முருங்கைக்கீரை - ஒரு கப்
காய்ந்த கூனி இறால் - ஒரு கைப்பிடியளவு
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய பூண்டு பல் - 2
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
எண்ணெய் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு



கீரையை ஆய்ந்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.கூனி இறாலை மண் போக அலசி ஊற வைத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காயவும், சீரகம்,உளுத்தம் பருப்பு,வற்றல் கிள்ளி போட்டு தாளிக்கவும்.நறுக்கிய வெங்காயம்,பூண்டு  சேர்த்து வதக்கி கீரை சேர்க்கவும் .கீரை சிறிது வதக்கியவுடன்  தண்ணீர் தெளித்து சிறிது மூடி போடவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.கூனி இறால் சேர்க்கவும்.நன்கு வதக்கி வேக விடவும்.
தேங்காய்த் துருவல் சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும்.


சுவையான முருங்கைக்கீரை கூனி இறால் பொரியல் ரெடி.
சும்மாவே சாப்பிடலாம்.,சைட் டிஷாகவும் பரிமாறலாம்.

குறிப்பு:
தூத்துக்குடியில் இருந்த சமயம் ஃப்ரெஷ் கூனி இறால் கிடைக்கும்,பால் போல் இனிப்பாக இருக்கும். அதனை மீன் கார மாலையம்மா இப்படி சமைக்கும் படி சொல்லித் தருவது வழக்கம், அந்த நினைவில் காய்ந்த கூனி இறாலை வைத்து சமைத்து பார்த்தேன், ருசி செமையாக இருந்தது.

Sunday, September 23, 2012

பச்சைப் பயறு கறி /கோதுமை மாவு புட்டு/ Green Gram Curry


தேவையான பொருட்கள்;
பச்சைப்பயறு - 100 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் நறுக்கியது - 1
இஞ்சி நறுக்கியது - 1 டீஸ்பூன்
பூண்டு நறுக்கியது - 1 டீஸ்பூன் 
மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு,சீரகம் - தலா அரை டீஸ்பூன்
கருவேப்பிலை,மல்லி இலை - சிறிது
அரைத்த தேங்காய் விழுது - 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
உப்பு -தேவைக்கு 
பச்சைப்யறை நான்கு மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து வேக வைத்து வைக்கவும்.

 கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,சீரகம்,கருவேப்பிலை தாளித்து ,பொடியாக நறுக்கிய இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் சேர்க்கவும்,உப்பு சேர்த்து வதக்கவும்.விரும்பினால் தேங்காய் விழுது சேர்க்கவும்.
 தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்க்கவும்.கொதிவரவும் வேகவைத்த பாசிப்பயறை சேர்த்து திரும்பவும் கொத்திக்க விட்டு,நறுக்கிய மல்லி இலை சேர்த்து பிரட்டி இறக்கவும்.
 சுவையான பச்சைப் பயறு கறி ரெடி.


கோதுமைமாவு புட்டு ரெசிப்பி பார்க்க  இங்கே கிளிக்கவும்.

இதனை பூரி,சப்பாத்தி,வெறும் சோறு,புட்டு ஆகியவற்றுடன் பரிமாறலாம்.
ஆல் இந்தியா டூர் போன சமயம் ஹரித்துவாரில் சப்பாத்தி,பூரிக்கு இந்த கறி தான், பெரிய இரும்பு வாணலியில் ரோட்டுக்கடைகளில் ரெடியாக இருக்கும்.அங்கு சாப்பிட்டதில் கரம் மசாலா சுவையும்,கொஞ்சம் இனிப்பு சுவையும் தெரிந்தது,விரும்பினால் கால் டீஸ்பூன் கரம் மசாலா சேர்க்கலாம்.தேங்காய் சேர்க்காமலும் செய்யலாம்.

Thursday, September 20, 2012

சங்கரா மீன் ஃப்ரை / Red Snapper Fish Fry


தேவையான பொருட்கள்;
மீடியம் சைஸ் முழு சங்கரா மீன் - 6
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
ரெட் கலர் - 2 பின்ச்
ஒயிட் வினிகர்  - 3 டீஸ்பூன் அல்லது ஒரு எலுமிச்சை சாறு
கார்ன் ஃப்லோர் - 3 டேபிள்ஸ்பூன் ( மீனை பிரட்டி எடுக்க) அல்லது அரிசி மாவு அல்லது கடலை மாவு.
உப்பு ,எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:
1. மீனை செதில், பக்கவாட்டில் உள்ள  முட்பகுதிகளை நீக்கி வயிற்றுப்பகுதியை  சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடிகட்டவும்.
2. மசாலா ஏறுவதற்கு வசதியாக மீனை கீறி விட்டுக் கொள்ளவும்.
3.. மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,மிளகுத்தூள்,சீரகத்தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட் ,வினிகர்,தேவைக்கு உப்பு சிறிது தண்ணீர்  சேர்த்து கலந்து கொள்ளவும்.
4. மீனில் தயார் செய்த மசாலாவை தடவி,  ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜிலோ அல்லது வெளியிலோ ஊற வைக்கவும்.
5. கடாயில் எண்ணெய் காய வைக்கவும்.
6. ஊறிய மீனை கார்ன் ஃப்லோரில் லேசாக பிரட்டி பொரிப்பதால் மீன் உதிராமல் வெடிக்காமல் முழுதாக பொரித்து எடுக்க அருமையாக வரும்.
எண்ணெய் காய்ந்து வரும் பொழுது மீனை போட்டு ஒரு பக்கம் முறுகவும் மறு பக்கம் திருப்பி போட்டு ,இரண்டு பக்கமும் ஒரே போல் பொரித்து எண்ணெய் வடிய விட்டு எடுக்கவும்.

சுவையான சங்கரா மீன் ஃப்ரை ரெடி.
சங்கரா மீனை முழுசாக பொரித்து சாப்பிடும் பொழுது அதன் சுவையே தனி தான்.

Monday, September 17, 2012

பார்ட்டி ஸ்நாக்ஸ் இவெண்ட் முடிவும் விருதும்

சிநேகிதியின் இனிய இல்லம் வலைப்பூவில் ஒரு மாதமாக பார்ட்டி ஸ்நாக்ஸ் இவெண்ட் வெற்றிகரமாக நடத்தி அதன் முடிவும் இன்று அறிவிக்கப் பட்டது.


போட்டிக்கு மொத்தம் 83 குறிப்புக்கள் வந்திருந்தன.விதம் விதமான குறிப்புக்கள், வந்த அனைத்து குறிப்புக்களும் அருமையாக இருந்தது. நான் 19 குறிப்புக்களை என் தமிழ்,ஆங்கில வலைப்பூக்களில் இருந்து பகிர்ந்திருந்தேன். இன்று முடிவை பார்க்கும் பொழுது தான் தெரிந்தது சிநேகிதி என்னை சமையல் ராணியாக தேர்வு செய்து கிச்சன் குயின் என்ற விருதும் வழங்கியிருக்காங்க. நான் அதிக எண்ணிக்கையில் குறிப்பு அனுப்பியமைக்கு ஏதாவது விருது கிடைக்கும் என்று மட்டுமே எதிர் பார்த்தேன், இந்த விருது எதிர்பார்க்காமல் வந்து மகிழ்ச்சி தந்தது எனலாம். சிறப்பான பட்டம் பெற்ற அனைத்து சக வலைப்பூ தோழிகளுக்கும், பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் பல.
அன்பான அழகான விருது உங்கள் பார்வைக்கு...


மிக்க நன்றி சிநேகிதி.போட்டி நடத்தி முடிவு அறிவிப்பது என்பது எத்தனை சிரமம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.கடின உழைப்பிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

Saturday, September 8, 2012

சிக்கன் லாலிபாப் / Chicken Lollipop



தேவையான பொருட்கள்:

ஃப்ரெஷ் சிக்கன் விங்ஸ் - அரைக்கிலோ
சிக்கன் 65 பவுடர் - ஒன்னரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை பழம் - பாதி
முட்டை - 1
கார்ன்ஃப்லோர் - 2 டீஸ்பூன்
கடலை மாவு - 2 டீஸ்பூன்
ரெட் கலர் - பின்ச்
எண்ணெய் உப்பு - தேவைக்கு.

விங்ஸ் -சை லாலிபாப்பாக கட் செய்வது சிறிது சிரமமான காரியம், என்றாலும் அதன் ருசிக்கும் அழகிற்காகவும் மெனக்கிடலாம்.அரைக்கிலோவில் 10-12 எண்ணம் இருக்கும் விங்சை இரண்டாக கட் செய்து கொள்ளவும்.தோலை நீக்கி கொள்ளவும்.மேல் பக்கம் கட் செய்த துண்டில் ஒரு பக்கம் ஒரு எலும்பு இருக்கும். எலும்பை பிடித்துக் கொண்டு கறிப்பகுதியை மேல் பக்கமாக ஒதுக்கினால் லாலி பாப் ரெடியாகிவிடும் அதைப்போல் விளிம்புப்பகுதி கட் செய்ததில் இரண்டு எலும்பு இருக்கும்,அதனில் மெல்லிய எலும்பை நீக்கி விட்டு கன்மான எலும்பில் கறிப்பகுதியை ஒதுக்கி வைத்தால் இன்னொரு லாலிபாப் ரெடியாகிவிடும்.ஆக ஒரு விங்ஸில் இரண்டு லாலிபாப் கிடைக்கும்.
கழுவி சுத்தமாக தண்ணீர் வடித்து வைக்கவும்.

லாலிபாப்புடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,சிக்கன் 65 மசாலா, எலுமிச்சை ஜூஸ்,தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து விரவி வைக்கவும்.

ஒரு மணி நேரம் ஊறட்டும்.
ஒரு பவுலில் முட்டை,கார்ன்ஃப்லோர்,கடலைமாவு,சிறிது உப்பு,பின்ச் ரெட் கலர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.



சிக்கன் லாலிபாப்பை அதனில் கால் மணி நேரம் ஊற விடவும்.சிக்கன் துண்டின் மேல் கரைசலை தோய்த்து எடுத்து பொரிக்கவும்.

எண்ணெய் காய வைக்கவும். மிதமான சூட்டில் கருகாமல் பக்குவமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான சிக்கன் லாலிபாப் ரெடி.போன்பகுதியில் அலுமினியம் ஃபாயில் கொண்டு கவர் செய்தால் பார்க்க அழகாக இருக்கும்.
இதனை ஸ்டார்டராக பரிமாறலாம் அல்லது சைட் டிஷ் ஆக பரிமாறலாம்.

குறிப்பு:
இது கொஞ்சம் சாஃப்டாக இருக்கும்.இதே முறையில் செய்து பாருங்க,டேஸ்ட் அருமையாக இருக்கும்.கிரிஸ்பாக வேண்டுமெனில் சிறிது அரிசி மாவு சேர்த்து கொள்ளலாம்.அல்லது முட்டையுடன் கடலை மாவு பதில் மைதாமாவு கூட சேர்த்து செய்யலாம்.

Monday, September 3, 2012

நீலகிரி மட்டன் பிரியாணி/ Nilgiris Mutton Briyani

தேவையான பொருட்கள்;
பாசுமதி அரிசி - அரைக்கிலோ
மட்டன் - அரைக்கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
ஹோல்கரம் மசாலா பவுடர் - 1- ஒன்னரை டீஸ்பூன்
ஏலம், கிராம்பு, பட்டை சிறிய துண்டு - தலா இரண்டு
முழு மிளகு - கால்டீஸ்பூன்
பிரிஞ்சி இலை - 1
அன்னாசிப்பூ - 1
வெங்காயம் - 150 கிராம்
தயிர் - 100 மில்லி
எலுமிச்சை பழம் - சிறியது 1
நறுக்கிய மல்லி,புதினா - தலா அரைகப்
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் நெய் - கலவை - 150 மில்லி (தலா 75 மில்லி)
உப்பு - தேவைக்கு.

தேவையான பொருட்களை முதலில் ரெடியாக எடுத்து வைக்கவும்.அரிசியை ஊறவைக்கவும், மட்டனை கழுவி சுத்தம் செய்து தண்ணீர் வடிகட்டவும்.

அரைத்துக் கொள்ள:
முந்திரி - 25 கிராம் (ஊற வைத்து அரைக்கவும்)
150 கிராம் வெங்காயம் நறுக்கி சிறிது தண்ணீர் விட்டு வேக வைத்து,ஆற விட்டு அரைத்து எடுக்கவும்.
நறுக்கிய அரை கப் மல்லி, அரை கப் புதினா, பச்சை மிளகாய் -3,தயிர் 50 மில்லி விட்டு அரைத்து எடுக்கவும்.

மல்லி,புதினா,மிளகாய் தயிர் விட்டு அரைத்து எடுக்கவும். தயிர் சேர்ப்பதால் பச்சை நிறம் மாறாமல் இருக்கும். ஊசி மிள்காயாக இருந்தால் பார்த்து சேர்க்கவும்.காரம் அதிகம் இருக்கும்.

வெங்காயம் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்து, ஆற விட்டு அரைத்து எடுக்கவும்.


மட்டனுடன் முக்கால் டீஸ்பூன் கரம் மசாலா பவுடர் ,1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 50 மில்லி தயிர், உப்பு சேர்த்து மூன்று விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
பிரியாணி செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் நெய் விட்டு காய்ந்தவுடன்,ஏலம்,பட்டை,கிராம்பு,அன்னாசிப்பூ,மிளகு,பிரிஞ்சி இலை போட்டு வெடிக்கவும், மிதி ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு சிம்மில் வைத்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு வதங்கி மணம் வந்தவுடன், அரைத்த வெங்காயம் பேஸ்ட் போட்டு நன்கு வதக்கவும்.
பின்பு அரைத்த மல்லி,புதினா,மிளகாய்,தயிர் பேஸ்ட் சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
அரைத்த முந்திரி பேஸ்ட் சேர்க்கவும்.வதக்கவும்.

வேக வைத்த மட்டன் சேர்க்கவும்.வேக வைத்த தண்ணீர் இருந்தாலும் சேர்க்கவும்.
மட்டனுடன் மீதி கரம் மசாலா பவுடர்,மல்லித்தூள் சேர்க்கவும்.வதக்கி விடவும்.வதக்கிய கலவை மட்டனுடன் நன்கு சேர்ந்து வருமாறு பிரட்டி விடவும்.

மசாலா மட்டனுடன் சார்ந்து எண்ணெய் மேல் வர வேண்டும்.

தண்ணீர் அரிசியின் அளவிற்கு இரண்டு மடங்கு வைக்கவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.அரிசியின் தரம் பொறுத்து தண்ணீர் அளவு வேறுபடும்.

ஊறவைத்த அரிசியை சேர்க்கவும். நன்கு கலந்து விடவும்.அடுப்பை மீடியமாக வைக்கவும்.

அரிசி வெந்து நன்கு மேலெம்ழுபி வரும் பொழுது,எலுமிச்சை பழம் பிழிந்து பிரட்டி விட்டு அலுமினியம் ஃபாயில் போட்டோ அல்லது சாதாரணமாக மூடியை சிக்கென்று மூடி பிரியாணி அடி பிடிக்காமல் இருக்க கீழே பழைய தோசைக்கலம் வைத்து அடுப்பை சிம்மில் வைத்து கால் மணி நேரம் தம் போடவும். அடுப்பை அணைத்து மீண்டும் கால் மணி நேரம் கழித்து திறக்கவும்.
ஒரு போல் பக்குவமாக உதிரியாக வருமாறு பிரட்டி விட்டு எடுக்கவும்.

கமகமக்கும் நீலகிரி மட்டன் பிரியாணி ரெடி. இது பார்ப்பதற்கு ஆலிவ் கிரீன் கலரில் இருக்கும்.
பிரியாணியை நீங்கள் விரும்பும் சைட் டிஷ் உடன் பரிமாறவும்.

முக்கியக் குறிப்பு:
இது அண்ணன் செஃப் சல்மான் சம்சுதீன்(ஜித்தா,ஹில்டன்) அவர்கள் ஐடியா படி செய்தது.அண்ணன் என் சமையலை பார்த்து விட்டு இது அப்படி செய்யக் கூடாது,அது இப்படி செய்யக் கூடாதுன்னு ஒரு முறை கருத்து சொன்னாங்க, நமக்கா சமாளிக்க தெரியாது, அண்ணன் இது வீட்டு சமையல் அப்படி தான் இருக்கும் என்றேன். இந்த பிரியாணியில் சாமான் அளவு என் இஷ்டம் போல் சேர்த்து கொண்டேன். நீங்களும் உங்க டேஸ்ட்டிற்கு தகுந்த படி கூட்டி குறைத்து கொள்ளலாம். இதில் ஹோல் கரம் மசாலா பவுடர் சேர்ப்பது தனிச் சிறப்பு.