Wednesday, October 31, 2012

கிழங்கான் மீன் குழம்பு & ஃப்ரை /Lady Fish Curry /Fry



குழம்பிற்கு தேவையான பொருட்கள்:
கிழங்கான் மீன் - 8- 10 மீன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு ,வெந்தயம்,சோம்பு - தலா அரைடீஸ்பூன்
பூண்டு பல் - 6
 பெரிய வெங்காயம் - 1
தக்காளி  பெரியது - 1
பச்சை மிளகாய் - 2
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள்  -ஒன்னரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்,சீரகத்தூள்,மிளகுத்தூள் - தலா கால் டீஸ்பூன்
மல்லி கருவேப்பிலை சிறிது
உப்பு - தேவைக்கு.


மீனை செதில் நீக்கி ,வயிற்றில் உள்ள கழிவை எடுத்து தலையை கழித்து சுத்தமாக நன்கு கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும்.

கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ,பாதி வெங்காயம்,பாதி தக்காளி,தேங்காய் துருவல்,மற்ற எல்லா மசால் தூள் வகைகளைச் சேர்த்து சிவற மீடியம் நெருப்பில் வைத்து வறுத்து எடுத்து ஆற வைத்து அரைத்து எடுக்கவும். புளி கரைத்து அரைத்த மசால் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு,வெந்தயம்,சோம்பு போட்டு வெடிக்கவும்,கருவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும்.நறுக்கிய பாதி வெங்காயம், தக்காளி ,பச்சைமிளகாய், சிறிது உப்பு சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
அரைத்து புளித்தண்ணீரோடு கலந்து வைத்த மசாலை சேர்க்கவும்.உப்பு சரி பார்த்து குழம்பு தேவைக்கு தண்ணீர் ஒரு கப் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். வற்றி இப்படி வரும்.நறுக்கிய ,மல்லித்தழை சிறிது சேர்க்கவும்.குழம்பு நன்றாக கொதிப்பதில் தான் ருசியே இருக்கிறது.

குழம்பு,  புளி தேங்காய் மசாலா வாடை மடங்கியதும் சுத்தம் செய்த மீனை சேர்க்கவும்.கலந்து விட்டு மீடியம் நெருப்பில் பத்து நிமிடம் அகப்பை போடாமல் மீனை வேக விடவும்.
மீன் வெந்து எண்ணெய் மேலெழும்பி வரும்.அடுப்பை அணைக்கவும்.


சுவையான கிழங்கான் மீன் குழம்பு ரெடி.
ப்லைன் ரைஸ், ஆப்பம்,சப்பாத்தி இட்லி,தோசையுடன் பரிமாறலாம்.

கிழங்கான் மீன் ஃப்ரை :
மீன் - 8-10
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - கால்- அரைடீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
கார்ன் ஃப்லோர் - 2 டீஸ்பூன்
ரெட் கலர்- பின்ச்(விரும்பினால்)
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

மீனுடன் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் கலந்து அரை-  ஒருமணி நேரம் ஊறவைக்கவும்.
எண்ணெய் காய வைத்து,மீனை  முறுக பொரித்து எடுக்கவும்.

சுவையான கிழங்கான் மீன் ஃப்ரை ரெடி .
சீரகப் பொடி அரைடீஸ்பூன் சேர்த்தால் மீன் ஃப்ரை சீரக மணத்துடன் இருக்கும்.
ஒவ்வொரு முறையும் மீன் குழம்பு,ஃப்ரை செய்யும் பொழுது சிறிய மாற்றத்துடன் செய்து பார்ப்பேன்.இதுவும் ஒரு முறை..

Thursday, October 25, 2012

பாதாம் ரைஸ் கீர் / Almond Rice Kheer


தேவையான பொருட்கள்;
கெட்டிப் பால் - அரை லிட்டர்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 3 அல்லது ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்
சாஃப்ரான் - பின்ச்
பாதாம் தோல் நீக்கியது - 15
வேகவைத்த பாசுமதி சோறு- 4 டேபிள்ஸ்பூன்
ஸ்வீட்டெண்ட் கண்டென்ஸ்ட் மில்க் - 4 - 5 டேபிள்ஸ்பூன் (தேவைக்கு)

பரிமாறும் அளவு -  4 நபர்
சமைக்க ஆகும் நேரம் - அரை மணி நேரம்.

அரை லிட்டர் பாலை காய்ச்சி எடுக்கவும்.பாதாம் பருப்பை ஊறவைத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் நெய் , கீறிய ஏலக்காய் சேர்க்கவும்.நெய் உருகவும் காய்ச்சிய பால் சேர்க்கவும்.பால் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது சாஃப்ரான் சேர்க்கவும்.நறுக்கிய பாதாம் சேர்க்கவும்.கலந்து விடவும்.வேகவைத்து மசித்த பாசுமதி சோறு சேர்க்கவும்.எல்லாம் சேர்ந்து கொதித்து வற்றி வரும். அடி பிடிக்காமல் கிண்டி விடவும்.

நன்கு வற்றி கெட்டியாக வரும் பொழுது ஸ்வீட்டண்ட் கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து  நன்கு கலந்து சிம்மில் வைத்து திரும்பவும் கலந்து விடவும்.

இப்படி  ஊற்றுவது போல் கெட்டியாக இருக்கும். அடுப்பை அணைக்கவும்.
ஆறினால் இன்னும் கெட்டியாகும். வெது வெதுப்பாக அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறலாம்.

சுவையான பாதாம் ரைஸ் கீர் ரெடி.

செமையாக இருக்கும்.அழகுக்கு வேண்டுமானால் தோலுடன் கூடிய ஊறவைத்த பாதாமை நறுக்கி மேலே ஒன்றிரண்டு விரும்பினால் தூவி பரிமாறவும்.ஒரு சிலர் பாதாம் அரைத்து சேர்ப்பார்கள்.தோல் நீக்கி நறுக்கி சேர்க்கும் பொழுது வாயில் கடிபடும் சாப்பிட அருமையாக இருக்கும்.கீறி அல்லது தட்டிப் போட்ட ஏலக்காயை மறக்காமல் எடுத்து விட்டு பரிமாறவும் ஏலக்காய் பொடி சேர்த்தால் எடுக்க தேவையில்லை.

இக்குறிப்பை நான்  என் ஆங்கில வலைப்பூவில் நடத்தும் முதல் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.
போட்டி முடிய இன்னும் ஐந்து நாட்களே இருக்கிறது. உங்கள் குறிப்புக்களை தொடர்ந்து அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அனைவருக்கும் இனிய  புனித ஹஜ்ஜுப் பெருநாளாம் தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Sunday, October 21, 2012

இறால் உருளைக்கிழங்கு கிரேவி & இறால் தக்காளி ஃப்ரை- Prawn Potato Gravy / Prawn Tomato Fry


இறால் உருளைக்கிழங்கு கிரேவி & இறால் தக்காளி ஃப்ரை



தேவையான பொருட்கள்;
இறால் - 1 கிலோ
உருளைக்கிழங்கு - 200 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
கரம் மசாலா - அரைடீஸ்பூன்
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
சில்லி பவுடர் - 2 + 1  டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
சீரக சோம்புத்தூள் - 1 டீஸ்பூன் (அல்லது தலா அரைடீஸ்பூன்)
மல்லி புதினா நறுக்கியது - கொஞ்சம்
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 2 +1 மீடியம் சைஸ்
வெங்காயம் - 2 மீடியம் சைஸ்
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன் +3 முந்திரி -பேஸ்ட்
எண்ணெய் - 3+1 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு

இறாலை தோல் நீக்கி சுத்தம் செய்து மேற்பக்கம் லேசாக கீறி கருப்பு அழுக்கு போன்ற பகுதியை எடுத்து,அரைடீஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு பிரட்டி  நன்கு அலசி தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி துண்டுகளாக்கி வைக்கவும்.

சுத்தம் செய்து தயார் செய்த இறாலுடன் 2 டீஸ்பூன் சில்லி பவுடர் ,இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 டீஸ்பூன்,தயிர் ,சிறிது உப்பு சேர்த்து விரவி வைக்கவும்.
இதில் பாதி ஃப்ரைக்கும் ,மீதி பாதியை கிரேவிக்கும் உபயோகிக்கலாம்.




கடாயில் எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன் விட்டு கருவேப்பிலை  வெங்காயம் சேர்த்து வதக்கவும், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு கரம் மசாலா சேர்க்கவும்.வதக்கவும்.நறுக்கிய தக்காளி இரண்டு ,மல்லி புதினா,பச்சை மிளகாய், சிறிது தேவைக்கு உப்பு சேர்த்து வதக்கவும்.நன்கு தக்காளி வெங்காயம் மசிந்து வரும் பொழுது மசாலா தூள் வகைகள் சேர்க்கவும்.நன்கு பிரட்டவும்.ரெடி இறாலில் பாதியை சேர்த்து வதக்கவும்.


இறால் வெந்து வரும் பொழுது வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.பிரட்டவும்

அரைத்த தேங்காய் முந்திரி பேஸ்ட்  கெட்டித்தனமைக்கு தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு சிம்மில் வைத்து எண்ணெய் மேல் வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.
சுவையான இறால் உருளைக்கிழங்கு கிரேவி ரெடி.

இறால் தக்காளி ஃப்ரை:
முதலில் இஞ்சிபூண்டு,தயிர்,சில்லி பவுடர் கலந்து ரெடி செய்த இறாலில் எடுத்து வைத்த பாதியை ஃப்ரைக்கு உபயோகிக்கவும்.
 ஒரு ஃப்ரை பேனில் எண்ணெய் விட்டு காயவும் கருவேப்பிலை போட்டு வெடிக்கவும் ஊறிய இறாலை சேர்க்கவும்.சிறிது தண்ணீர் ஊறி வற்றி வரும்.

பொடியாக நறுக்கிய  தக்காளி ஒன்றை சேர்க்கவும்.நன்கு பிரட்டி தக்காளி மசிந்து இறாலுடன் சேருமாறு வதக்கவும்.
சுவையான இறால் தக்காளி ஃப்ரை ரெடி.காரம் அவரவர் விருப்பத்திற்கு தேவைப்பட்டால் சில்லி பவுடர் சேர்க்கவும்.

இறால் நாடி ஃப்ரை:
விரும்புபவர்கள் ஒரு முறை முயற்சித்து பார்க்கவும்.
இறால் தலையில் இருக்கும் ஓடு கழிவை சுத்தம் செய்து சதைப்பற்றுடன் இருக்கும் நாடியை எடுத்து நன்கு சுத்தமாக பலதடவை அலசி தண்ணீர் வடிகட்டவும்.
அதனுடன் சிறிது உப்பு,இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைடீஸ்பூன் சேர்த்து விரவி வைக்கவும்.

 கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விடவும்.நான் ஸ்டிக் கடாய் கூட உபயோகிக்கலாம்.ரெடி செய்த இறால் நாடி போன்ற பகுதியை சேர்க்கவும்.
நன்கு தண்ணீர் வற்றி வறுபட்டு வரும்.

 தேவைக்கு சில்லி பவுடர் அல்லது சிக்கன் 65 மசாலா சிறிது சேர்த்து சிம்மில் வைத்து பிரட்டவும்.

 எண்ணெய் வடித்து எடுக்கவும்.பேப்பர் டவலில் வைத்து எடுத்து பரிமாறவும்.

சுவையான இறால் நாடி ஃப்ரை ரெடி.

இறால் விற்கிற விலைக்கு அதன் தலையே பாதி கழிந்து விடும்,அப்படி கழிக்காமல் தலைப்பகுதியில் உள்ள சதைப்பகுதியை  எடுத்து நன்கு சுத்தம் செய்து இப்படி வறுத்து சாப்பிட்டால் கூனி இறால் போல் ருசியாக இருக்கும்.இறால் சமையலில் உப்பு சிறிது அதிகமானால் கூட கடுக்கும்,  உப்பு பார்த்து சேர்க்கவும்..

ஆக இறால் வாங்கினால் இப்படி மூன்று விதமாக சமைத்து அசத்தலாம்.

Wednesday, October 17, 2012

கேரட் போண்டா / Carrot Fritters


தேவையான பொருட்கள்;
கேரட் - 2 -3 மீடியம் சைஸ்
வெங்காயம் - 1
ஸ்பிரிங் ஆனியன்  அல்லது கொத்தமல்லி நறுக்கியது  - 2 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
மைதா - ஒரு கப்
முட்டை - 1 (விரும்பினால்)
எண்ணெய் - 1 கப்
உப்பு - தேவைக்கு.

Serves - 4


கேரட்டை தோல் சீவி துருவி எடுத்துக் கொள்ளவும்.வெங்காயம் ,பச்சை மிளகாய், ஸ்பிரிங் ஆனியன் பொடியாக நறுக்கி அத்துடன் சேர்க்கவும்.

அத்துடன் ஒரு கப் மைதா சேர்க்கவும்.மிளகுத்தூள் சேர்க்கவும்.

தேவைக்கு உப்பும் சேர்த்து கலந்து கொள்ளவும், முட்டை சேர்க்க விரும்பாதவர்கள் இப்படியே வடை போல் தட்டி எண்ணெயில் இருபக்கமும் பொன் முறுகலாக பொரித்து எடுக்கலாம்.முட்டை சேர்த்தும் கலந்து கொள்ளலாம்.
கடாயில் எண்ணெய் காயவிட்டு வடை  போல் தட்டி போடவும்.மீடியம் நெருப்பில் பக்குவமாக இருபக்கமும் பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.

எண்ணெய் வடியவிட்டு டிஷ்யூ பேப்பரில் வைத்து எடுத்து பரிமாறவும்.

சுவையான கேரட் போண்டா ( ஃப்ரிட்டர்ஸ் )ரெடி.

 இதனை சும்மா சாப்பிட்டாலே சூப்பராக இருக்கும்.விரும்பினால் தேங்காய் சட்னி அல்லது டொமட்டோ சாஸுடன் பரிமாறவும்.