Thursday, January 24, 2013

பூரி ஃபிர்னி / Poori Firni


 பூரிக்கு:
தேவையான பொருட்கள்;
கோதுமை மாவு - 1கப்
மைதாமாவு - 1 கப்
ரவை - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,தண்ணீர் - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு.

 முதலில் கோதுமை,மைதா,ரவை தேவைக்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.பின்பு தேவைக்கு தண்ணீர் சேர்த்து பக்குவமாக குழைத்து கொள்ளவும்.மூடி அரைமணி நேரம் வைக்கவும்.
 சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக மாவை பிரித்து பூரிகளாக திரட்டி ,கடாயில் தேவைக்கு எண்ணெய் வைத்து சூடானவுடன் பூரியை சுட்டு எடுக்கவும்.ரவை சேர்ப்பதால் எண்ணெய் அதிகம் குடிக்காது.

சூப்பர் புஸு புஸு பூரி ரெடி.

ஃபிர்னி -2
தேவையான பொருட்கள்;
ஜவ்வரிசி - 3 டேபிள்ஸ்பூன்
சேமியா - 3 டேபிள்ஸ்பூன்
ரவை - 1-2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 4
சீனி - 200 கிராம்
காய்ச்சிய பால் - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உடைத்த முந்திரி, திராட்சை - தலா 1 டேபிஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - பின்ச்.

பரிமாறும் அளவு - 4 நபர்.

 தேவையான பொருட்களை ரெடி செய்து கொள்ளவும்.

 ஒரு பாத்திரத்தில் 3-4 கப் தண்ணீர்(600- 800 மில்லி) எடுத்து கொள்ளவும்.முதலில் ஊறிய ஜவ்வரிசியை சேர்க்கவும்.வெந்து வரட்டும்.
 பின்பு வறுத்த சேமியாவை சேர்க்கவும்.அடுப்பை மீடியமாக வைக்கவும்.
 பின்பு ரவை சேர்க்கவும்.அடுப்பை குறைத்து விடவும்.கீரிய ஏலக்காய் சேர்க்கவும்.எல்லாம் ஒரு சேர மணத்துடன் வெந்து வரும்.சீனி சேர்க்கவும்.கரைந்து வரும் பொழுது ஒரு கப் பால் சேர்க்கவும்.
 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்க்கவும்.
 கலந்து விடவும்,ஒரு பின்ச் உப்பு சேர்க்கவும். கெட்டியாக இருந்தால் தேவைக்கு கொதி நீர் அல்லது காய்ச்சிய பால் சேர்க்கலாம்.
 தாளிப்பு கரண்டியில் நெய் விட்டு முந்திரி திராட்சை பக்குவமாக வறுக்கவும்.
 ரெடியான ஃபிர்னியில் கொட்டவும்.கலந்து விடவும்.
சுவையுள்ள ஃபிர்னி ரெடி.

ஃபிர்னியை பூரியுடன் பரிமாறவும்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க.
இனிப்பு பிரியப்படாதவர்கள் மசாலுடன்  பரிமாறலாம்.


 Gayathri's 

Walk Through Memory Lane- Januaryஅனைவருக்கும் இனிய மீலாது நபி வாழ்த்துக்கள்.

21 comments:

ராதா ராணி said...

பாலுல ஏலக்காய் ,சர்க்கரை போட்டு பூரி ஊற வைத்து சாப்பிடுவோம்.. இது புதுசா இருக்கு ஆசியா...செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

ஸாதிகா said...

வாவ்..வித்தியாசமாக உள்ளது தோழி.

Chitra said...

yummy treat! :-)

Vimitha Anand said...

Nice combo... Creamy and yummy dish

வை.கோபாலகிருஷ்ணன் said...

படங்களும் செய்முறையும் அழகு. பாராட்டுக்கள்.

சே. குமார் said...

ம்... அருமையா படத்துடன் விளக்கம்,
பார்க்கும் போதே சாப்பிடணுமின்னு தோணுது அக்கா....

சூப்பர்....

Meena Selvakumaran said...

Yummy combo.Love to have it .Very tempting dish

Nandini M said...

Delicious and unique phirni!

இளமதி said...

அருமை...நல்ல குறிப்பு. கிட்டத்தட்ட பாயாசம் போலவே இருக்கிறது. ஆனால் பூரியுடன் காம்பினேஷன் வித்தியாசமாக இருக்கிறது. நன்றாக இருக்கும்...:)
பகிர்வுக்கு மிக்க நன்றி !

faiza kader said...

மிலாது ஸ்பெஷல் சூப்பர்...

vanathy said...

Super combination.

S.Menaga said...

சூப்பர்ர் காம்பினேஷன்,பூரி நல்லா புஸ்புஸ்ன்னு இருக்கு....

ராமலக்ஷ்மி said...

படங்களுடன் செய்முறையை அழகாகத் தந்துள்ளீர்கள் ஆசியா. நன்றி.

parveen ali said...

Nice recipe

Priya said...

Pooriyum firniyum kalakuthu,super combo.

Savitha Ganesan said...

Romba tempt panreenga,phirni looks yumm.

GEETHA ACHAL said...

எப்பொழுதும் பூரி மசாலா சாப்பிட்டு போர் அடித்துவிட்டது..அதற்கு ஏற்ற மாறுதல் ரெஸிபி..

இங்கே என்னுடைய Bangladesh தோழி வீட்டிற்கு சென்ற பொழுது அவங்க Parottaவிற்கு இதனையும் நம்மூர் சேகரியினை கலர் பொடி சேர்க்காமல் செய்ததையும் தான் Side dish ஆக கொடுத்தாங்க..

வெங்கட் நாகராஜ் said...

ஃப்ர்னி - புதுசா இருக்கே....

athira said...

ஆஹா சூப்பர்... பூரிக்கு றவ்வை சேர்ப்பது இப்பத்தான் அறிகிறேன்ன்.. இனி செய்திட வேண்டியதுதான்ன்..

Asiya Omar said...

கருத்து தெரிவித்த அனைத்து அன்பான நட்புள்ளங்களுக்கு மிக்க நன்றி.

கோவை2தில்லி said...

பூரியுடன் ஃபிர்னி பிரமாதமாக இருக்குங்க.....