Tuesday, January 8, 2013

கத்திரிக்காய் மீன் குழம்பு / Brinjal Fish Curry


தேவையான பொருட்கள்;
மீன் - அரைக்கிலோ 
கத்திரிக்காய் - 200 கிராம்
தக்காளி - 100 கிராம்
வெங்காயம் - 100கிராம்
பச்சை மிளகாய் - 2
பூண்டு பல் - 6
புளி - எலுமிச்சை அளவு (விருப்பப் படி)
மல்லி,கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 3-4  டேபிள்ஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு,வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்
தேங்காய்ப் பால் அல்லது தேங்காய்அரைத்தது - அரை கப்
மீன் மசாலா - 2 மேஜைக்கரண்டி(வீட்டு மசாலா)
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

பொதுவாக கத்திரிக்காயோடு கருவாடு தான் சேர்த்து சமைப்போம்,மீன் சேர்த்து சமைத்தாலும் சூப்பர்.
மீன் துண்டுகளை சுத்தமாக கழுவி,மஞ்சள் உப்பு போட்டு உலசி மீண்டும் கழுவி தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.புளியை ஊறவைத்து கரைத்து வைக்கவும்.நறுக்க வேண்டியவைகளை நறுக்கி வைக்கவும்.

 மண் சட்டி அல்லது மீன் சமைக்கும் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு,சூடு வந்தவுடன்  கடுகு,உளுத்தம் பருப்பு,வெந்தயம் சேர்க்கவும்.

 அடுத்து கருவேப்பிலை சேர்த்து வெடித்து வரும் பொழுது, பச்சை மிளகாய்,பூண்டு பல்,நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

 நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.நன்கு வதங்க விடவும்.
பின்பு நறுக்கிய பிஞ்சு கத்திரிக்காய் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.

ஒரு ஐந்து நிமிடம் மூடி போட்டு கத்திரிக்காயை சிம்மில் வேக வைக்கவும்.கத்திரிக்காய் மெதுவாக வெந்து இருக்க வேண்டும்.உடையக் கூடாது.

திறந்து மீன் மசாலா,மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
 நன்கு ஒரு சேர பிரட்டி விடவும்.

 புளித் தண்ணீர் சேர்க்கவும்.குழம்பு தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்.உப்பு சேர்க்கவும்.நன்கு கொதித்து மசாலா புளி வாடை மடங்க வேண்டும். இது தான் முக்கியம்.

 பின்பு மீன் துண்டுகளைச் சேர்க்கவும்.நன்கு கொதித்து மீன் வெந்து வரும்.தேங்காய்ப்பால் அல்லது தேங்காய் அரைத்ததைச் சேர்க்கவும்.தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்.குழம்பு கெட்டித்தனமை உங்கள் விருப்பம்.அடுப்பைக் குறைத்து விடவும் சிம்மில் ஐந்து நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும்.விரும்பினால் நறுக்கிய மல்லி இலை சிறிது தூவலாம்.மூடி வைக்கவும்.

 பின் பரிமாறும் பொழுது திறந்தால் எண்ணெய் மேலே வந்து பார்க்க அழகாய் இருக்கும். மீன் போட்ட பின்பு அகப்பை போடக் கூடாது. ஐந்து நிமிடத்தில் மீன் வெந்து விடும்.தேங்காய் விட்டு ஐந்து நிமிடம் அவ்வளவே அதற்கு மேல் வைத்தால் மீன் உடைந்து விடும்.திறந்தே சமைத்தால் மீன் உடையாது.தேங்காய் விருப்பமில்லாத்வர்கள் சேர்க்காமலும் குழம்பு வைக்கலாம்.புளி,காரம் அளவு  உங்கள் விருப்பமே.

 சுவையான கத்திரிக்காய் மீன் குழம்பு ரெடி. தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜி உள்ளவர்கள் பார்த்து சாப்பிடவும்.
இதனை சூடான சோறு மற்றும் இட்லி,தோசை,ஆப்பம், சப்பாத்தியுடனும் பரிமாறலாம்.

சைட் பாரில் இருக்கும் மீன் தலைப்பைக் கிளிக்கினால் வித விதமான மீன் சமையலை ருசிக்கலாம்.

10 comments:

Vijayalakshmi Dharmaraj said...

Heard about manpaanai meen kuzhambu... now seen..
COCONUT CORIANDER CHUTNEY
VIRUNTHU UNNA VAANGA

அமைதிச்சாரல் said...

நல்லாருக்கு ஆசியா..

Meena Selvakumaran said...

Lovely step by step instructions.even the beginners can do it.looks yum,

அஸ்மா said...

சலாம் ஆசியாக்கா!

மீன் குழம்பில் கத்தரிக்காய்.. அருமையாக இருக்குமே :) தாளித்த பிறகு கத்தரிக்காயைப் போட்டு மூடி போடாமல் திறந்து வைத்தே அதை நன்றாக வதக்கிவிடுவோம். அப்படியே நெய் மணக்கும் கத்தரிக்காயாகிவிடும் :) பகிர்வுக்கு நன்றி ஆசியாக்கா.

Priya said...

Manga Kathirika potta meen kuzhambu'na naan romba virumpi saapiduven,but romba naal achi meen kuzhambu saapitu.

சே. குமார் said...

படங்களுடன் விளக்கம் அருமை.

இந்த வாரம் செய்து பார்த்துட வேண்டியதுதான்...

faiza kader said...

fresh fish suvaithey 9 maasam aahuthu.. ungal recipe pai parthavudan naavil neer ooruherathu

athira said...

வாவ் சூப்பர் ஆசியா.. உது இடியப்பத்துக்கு இன்னும் சூப்பரா இருக்கும்.

ஸாதிகா said...

மணக்க மணக்க மின் குழம்பு சூப்பர் தோழி.

Asiya Omar said...

வருகை மற்றும் கருத்து தெரிவித்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி..