Tuesday, January 29, 2013

கிரிஸ்பி போன்லெஸ் சிக்கன் ஃப்ரை / Crispy Boneless Chicken Fry

தேவையான பொருட்கள்;
எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 300 கிராம்
கெட்டி தயிர் - 1 டீஸ்பூன்
லெமன் ஜூஸ் - 1 டீஸ்பூன்
சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
துளி ரெட் கலர்
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் அல்லது குறைவாக தேவைக்கு.
உப்பு தேவைக்கு.

கோட்டிங் மிக்ஸ்;
மைதா 2 டேபிள்ஸ்பூன்
கார்ன்ஃப்லோர் - 1 டேபிள்ஸ்பூன்
ப்ரெட் கிரெம்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்
(கலந்து வைக்கவும்)

பரிமாறும் அளவு - 2 நபர்

செய்முறை:
சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை சுத்தமாக அலசி தண்ணீர் வடித்துக் கொள்ளவும்.
அத்துடன் தேவையான பொருட்களில் சொன்ன அனைத்து பொருட்களையும் சேர்த்து விரவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

கோட்டிங் மிக்ஸ் தனியாக ஒரு ப்லேட்டில் ரெடி செய்யவும்.ஊறிய சிக்கனை அதனில் ஒரு போல் பிரட்டி எடுத்து வைக்கவும்.கோட்டிங் மிக்ஸ் மீதி இருந்தால் பத்திரப்படுத்தி மீண்டும் உபயோகிக்கலாம்.


ஒரு கடாயில் எண்ணெய் சூடேற்றவும்.ரெடி செய்த சிக்கன் துண்டுகளை போடவும்,.

 பக்குவமாக மிதமான நெருப்பில் பொன் முறுகலாக பொரித்து எடுக்கவும்.

சுவையான கிரிஸ்பி போன்லெஸ் சிக்கன் ஃப்ரை ரெடி. 
வெளியே முறுகலாகவும் உள்ளே ஜூஸியாகவும் இருக்கும்.
வெங்காயம், லெமன் கட் செய்து அலங்கரித்து பரிமாறவும்.
பார்ட்டியில் ஸ்டார்டராக பரிமாறலாம்.







8 comments:

Easy (EZ) Editorial Calendar said...

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கிறது...உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

சே. குமார் said...

வாவ்... சுலபமாக செய்து சாப்பிடலாம் போல... இந்த வெள்ளி முயற்சிக்கலாம்...

அக்கா... படங்களுடன் விளக்கம் அருமை.

Meena Selvakumaran said...

lookd delicious , will definitely try it .

Priya said...

Love to finish a whole plate of this crispy fries,tempting akka.

Asiya Omar said...

மலர் வருகைக்கு நன்றி.

மிக்க நன்றி குமார்.

மிக்க நன்றி மீனா.

மிக்க நன்றி ப்ரியா.

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

ரொம்ப நல்ல இருக்கு
வாரத்துல 4 நாள் சிக்கன் இல்லாம ஹனீபு சாப்பிடமாட்டான் , நானும் தினம் தினம் ஓவ்வொரு வகையாக இதே போல் செய்வது தான் ஆனால் போட்டோ எடுக்க தான் நேரமில்லாமல் போகுது.

VijiParthiban said...

செய்துவிட்டேன் அக்கா மிகவும் அருமையாக இருந்தது... நன்றி ...

ஸாதிகா said...

சுலபமான செய்முறை...சுவையான குறிப்பு...அழகான பிரஷண்டேஷன்...:)