Sunday, January 27, 2013

உணக்க செம்மீன் மாங்காய் இட்டு வச்ச கறி / Dry prawns with Raw Mango Curry

 Thanks Faseela. இது என் ஆங்கில வலைப்பூ தோழி ஃபஸீலாவின் குறிப்பை பார்த்து செய்தது.

தேவையான பொருட்கள்;
காய்ந்த கூனி இறால் - அரை கப்
மாங்காய் - 1
தக்காளி - 1
சின்ன வெங்காயம் - 10
காஷ்மீரி சில்லி பவுடர் - ஒன்னரை டீஸ்பூன்(காரம் அவரவர் ருசிக்கு தக்க)
மஞ்சள் தூள் -அரைடீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய்  - 3-4  டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

காரம்,எண்ணெய் அளவு மட்டும் குறைத்து கொண்டேன்.அவரவர் விருப்பப்படி  சேர்த்து கொள்ளலாம்.
மாங்காய்,வெங்காயம்(வெங்காயத்தை அம்மியில்,குழவியில் இடித்தும் சேர்க்கலாம் ) ,தக்காளி பொடியாக நறுக்கி கொள்ளவும்,கூனி இறாலை லேசாக வறுத்து எடுக்கவும்.


 ஒரு மண் சட்டியில் நறுக்கிய மாங்காய்,வெங்காயம்,தக்காளி ,மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சிறிது ,ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும்.
 பின்பு நன்றாக கலந்து கொள்ளவும்.
 இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும்.அடுப்பை பற்ற வைக்கவும்.கொதி வரும்

 நன்றாக 15-20  நிமிடம் மிதமான நெருப்பில் மூடி போட்டு வேக வைக்கவும்.

 வெந்த பின்பு வறுத்த கூனி இறாலை சேர்க்கவும்.கலந்து விடவும்.
கூனி இறால் சேர்த்து மீண்டும் மூடி ஒரு ஐந்து நிமிடம் வேக விடவும்.

 2 -3 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கருவேப்பிலை இரண்டு இணுக்கு சேர்த்து கலந்து விட்டு மூடி வைக்கவும்.இது தான் முக்கியமான டிப்ஸ்.இது நல்ல மணத்தை தரும்.


 சுவையான உணக்க செம்மீன் மாங்காய் இட்டு வச்ச கறி ரெடி.
இதனை ப்லைன் சாதத்திற்கு பக்க உணவாகப் பரிமாறலாம். இது மாங்காய் ஊறுகாயில் கூனி இறால் சேர்த்தது போல் அத்தனை ருசி.தொக்கு அல்லது ஊறுகாய் மாதிரி ஃப்ரிட்ஜில் வைத்தும் உபயோகிக்கலாம்.அவசரத்திற்கு காரசாரமாக தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும்.



8 comments:

Priya said...

Yummyilicious and fingerlicking gravy, love to enjoy with a bowl of rice.

vanathy said...

Super recipe.

Meena Selvakumaran said...

yummy , liked the cooking pot.

அஸ்மா said...

சலாம் ஆசியாக்கா. பெயரும், ரெசிபியும் புது மாதிரி இருக்கு. 'உணக்க செம்மீன்'ன்னா காய்ந்த இறாலோ? அதென்ன பாஷையாம்? :)

தாளிப்புகூட இல்லாமல் வேலையும் சுலபமாக‌ தெரிகிறது. இன்ஷா அல்லாஹ் ட்ரை பண்ணிப் பார்க்கணும். பகிர்வுக்கு நன்றி ஆசியாக்கா.

Sangeetha Nambi said...

Yummy....
http://recipe-excavator.blogspot.com

Asiya Omar said...

மிக்க நன்றி ப்ரியா.

மிக்க நன்றி வானதி.

மிக்க நன்றி மீனா.

அஸ்மா வஅலைக்கும் ஸலாம்.
கேரள குறிப்பு,செய்து பாருங்க.வருகைக்கும் நன்றி.

சங்கீதா மிக்க நன்றி.

faiza kader said...

aa.. perey vidiyasamaga iruku.. kooni iraal illai.. ooril poi thaan try pannanum.. super

S.Menaga said...

பெயரே வித்தியாசமா இருக்கு,ரெசிபி நல்லாருக்குக்கா...