Friday, January 18, 2013

ஹெல்தி அடையும் குவிந்த விருதுகளும் / Healthy Adai & Awards

இந்த அடை குறிப்பை வை.கோ.சார்  வலைப்பூவில் அவர்கள்  பகிர்வைப் பார்த்து செய்தேன்.மிக அருமையான பக்குவம் மட்டுமல்லாமல் நல்ல சத்தான ருசியான அடையும் கூட.அதன் செய்முறையை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.மிக்க நன்றி வை.கோ சார்.


இனி குறிப்பு .இது கொஞ்சமாக செய்து பார்க்க வேண்டிய அளவு :

தேவையான பொருட்கள்;
நயமான இட்லி அரிசி - 200 கிராம்
நயம் துவரம் பருப்பு  - 125 கிராம்
நயம் கடலை பருப்பு - 50 கிராம்
எல்.ஜி பெருங்காயப்பொடி - ஒரு சிறிய ஸ்பூன்
சிவப்பு மிளகாய் வற்றல் - 6-8 எண்ணிக்கை
பச்சை மிள்காய் - 1 அல்லது 2
தோல் நீக்கிய இஞ்சி - 1 சிறிய துண்டு
கருவேப்பிலை - 1 ஆர்க் (10-  15 இலைகள்)
உப்பு - தேவைக்கு
எண்ணெய் நெய் கலவை - தேவைக்கு.

பரிமாறும் அளவு 3-4  நபர்கள்- எட்டு அடைகள் வரும்.
அடை மாவு ரெடியாக இருந்தால் ஈசி ஹெல்தி ப்ரேக்பாஸ்ட் இது.

குறிப்பிட்ட அளவு அரிசி பருப்பு வகைகளை எடுத்து கொள்ளவும்.
அரிசி பருப்பு வகைகளை 3-5 மணி நேரம் ஊறவைக்கவும்.இப்ப குளிர் காலம் என்பதால் நான் 5 மணி நேரம் ஊற வைத்தேன்.

தண்ணீரை வடிகட்டி விட்டு மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து இரண்டு முறையாக மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.பெரிய வற்றலாய் இருந்ததால் நான் 4 உபயோகித்தேன்.நீங்கள் உங்கள் ருசிக்கு தக்கபடி 6-8 மிளகாய் வற்றல் உபயோகிக்கலாம்.
பருப்பு,அரிசி மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து 2-3 நிமிடம் அரைத்து கெட்டியாக எடுக்கவும்.நன்றாக அரைபட வேண்டும்.ரொம்ப நைசாக அரைக்க வேண்டும் என்பதில்லை.

அரைத்து எடுத்து நன்கு கலந்து உப்பு மட்டும் சரி பார்த்துக் கொள்ளவும்.உப்பு சரியாக இருந்தால் தான் அடையின் அசத்தலான ருசி சரியாக கிடைக்கும்.இட்லி மாவுக்கு உள்ள கெட்டித் தன்மை இருக்க வேண்டும்.ஒரு கால் -அரைமணி நேரம் அரைத்த மாவை மூடி வைக்கவும்.
பின்பு அடுப்பில் தோசைக்கல்லை ஏற்றி நன்றாக சூடு வரட்டும்.சிறிது எண்ணெய்  தடவவும்.இரண்டு குழிகரண்டிஅளவு  மாவை ஊற்றி நன்றாக வட்டமாக பரத்தி விடவும்.வெந்து வரும் பொழுது நடுவில் ஒரு ஒட்டை போடவும்.அதனில் சிறிது எண்ணெய் விடவும்.சுற்றியும் மேலேயேயும் சிறிது எண்ணெய் விடவும்.
ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி போடவும்.இப்படி பொன் முறுகலாக சுட்டு எடுக்கவும்.
சுவையான சத்தான ருசியான வை.கோஸ் ஹெல்தி அடை ரெடி.
இதனை பொடித்த வெல்லம் உருக்கிய நெய் அல்லது இட்லி மிளகாய்ப் பொடியுடன் பரிமாறலாம்.விரும்பினால் தேங்காய்ச் சட்னியோ அல்லது அவியலோ சாம்பாரோ விருப்பமானவற்றுடன் சாப்பிடலாம்.

 அடை செய்தாச்சு.கொஞ்சம் மாவு மீதியிருந்தால் அதனை ஸ்நாக்ஸ் மாதிரி சாப்பிட  குணுக்கு செய்து அசத்தலாமாம். எங்கள் வீட்டில் அனைவரும் ரசித்து சாப்பிட்டோம்.

மீதமான அடை மாவுடன் நறுக்கிய வெங்காயம்,மல்லி,கருவேப்பிலை சேர்த்து கலந்து கிள்ளி கிள்ளி சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கலாம். சுவையான எளிதில் செய்யக் கூடிய குணுக்கு ரெடி.இது வும் வை.கோ சாரின் டிப்ஸ் தான்.அடையும் அதைவிட குணுக்கும் சூப்பரோ சூப்பர்.Sending this recipe to Saraswathi's Dish in 30 minutes - Rice Recipes and Giveaway.and Sending this to Gayathri's 

Walk Through Memory Lane- January. இந்த குறிப்பு ஜலீலாவின் பேச்கிலர்ஸ் இவென்ட்டில் இரண்டாம் பரிசை தட்டிச் சென்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.வாழ்த்துக்கள் சார்.
இதனை நேற்றே செய்து சாப்பிட்டாச்சு,உடனே சாப்பிட்ட கையோடு சாருக்கு மெயிலில் தெரிவித்தேன்.அதற்குள் போட்டி முடிவும் வரவே இங்கே விருதுகளுடன் பகிர்ந்தாச்சு.

 சமையல் அட்டகாசங்கள்  வலைப்பூ ஜலீலா நடத்திய பேச்சிலர்ஸ் இவெண்ட்டில்  சமைத்து அசத்தலாம் கலந்து கொண்டு 72 குறிப்புக்கள் இணைத்து இருந்தேன்,அதனால் ஸ்டார் ஆஃப் தி கிச்சன்,அவார்டு மற்றும் பெஸ்ட்  சைட் டிஷ் அவார்டு,பெஸ்ட் ப்ரேக்ஃபாஸ்ட் அவார்டு கிடைத்தது.
என்னுடைய மை ஹெல்தி ஹேப்பி கிச்சனும்  ஜலீலாவின் குக் புக் ஜலீலாவில் நடந்தேறிய பேச்சிலர்ஸ் ஃபீஸ்டில் கலந்து கொண்டு 19 குறிப்புக்கள் இணைத்து இருந்தேன்.
அங்கு கிச்சன் குயின் அவார்டும்,Exclusive party hand purse பரிசும்  பெஸ்ட் சாலட்,பெஸ்ட் ப்ரேக்பாஸ்ட் அவார்டு,பெஸ்ட்  சைட் டிஷ் அவார்டும் கிடைத்தது.ஒரே அவார்டு மழை தான்.

அவார்டுகள் உங்கள் பார்வைக்கு.
ஸ்டார் ஆஃப் தி கிச்சன் அவார்டு


கிச்சன் குயின் அவார்டு

ஜலீலா அன்பாக வழங்கிய Exclusive Party Hand Purse மற்றும் வழங்கிய பெஸ்ட் சைட் டிஷ் விருது, பெஸ்ட் ப்ரேக்ஃபாஸ்ட் விருது, பெஸ்ட் சாலட் விருதுகள் உங்கள் பார்வைக்கு ..


விருதுகளுக்கும் பரிசுக்கும் மிக்க நன்றி,மிக்க மகிழ்ச்சி ஜலீலா.போட்டியில் கலந்து கொண்டு விருதுகள் பரிசு பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.நான் என் விருதுகளை தனியாக அதற்கென்று ஒரு வலைப்பூ ஆரம்பித்து சேமித்து வருகிறேன். ஆரம்பித்து கிட்ட தட்ட ஒரு வருடமாகப் போகிறது.
நான் இதுவரை பெற்ற அனைத்து விருதுகளும் விபரங்களும் அங்கு  பதிவிட்டு வைத்திருக்கிறேன். என் விருதுகள் பக்கம் செல்ல இங்கே கிளிக்கவும்.விருதுகள் பெறுவதும் கொடுப்பதும்  மகிழ்ச்சியே.


29 comments:

angelin said...

பரிசு மற்றும் அவார்ட்ஸ் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஆசியா .

Asiya Omar said...

உடன் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்.மகிழ்ச்சி.

ராதா ராணி said...

ஆஹா..ஆச்சரியம்தான்.ஒரே நேரத்தில் அடை குறிப்பு குடுத்தது..மகிழ்ச்சி ஆசியா..அவார்டுகள் பெற்றமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..!

Meena Selvakumaran said...

Lovely award and lovely gift.congrats

கோவை2தில்லி said...

பரிசு மழை கிடைத்ததற்கு வாழ்த்துகள். தொடர்ந்து கலக்குங்க.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான பகிர்வு.... வை.கோ. சாருக்கு புது பேர் வைச்சுட்டீங்களே சகோ....

அவர் பெயர் வை. கோபாலகிருஷ்ணன். கோபால் சாமி அல்ல! :)

Asiya Omar said...

ராதா வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

மீனா வருகைக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

கோவை2தில்லி,சகோ.வெங்கட் தம்பதியினர் வருகைக்கும் வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
இன்று அதிக வேலையோடு பதிவுமிட்டதால் பெயரை மறதியாக டைப்பித்து விட்டேன்,சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி.

S.Menaga said...

வாழ்த்துக்கள் அக்கா!! அடையும் நன்றாக இருக்கு...

கோமதி அரசு said...

ஆசியா அருமையான அடை செய்து அசத்திவிட்டீர்கள்.
வை.கோ சார் பக்குவத்தில் அடை செய்து அசத்திவிட்டீர்கள்.
நீங்கள் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள். மேலும் பலவிருதுகள் பெறவேண்டும் நீங்கள். வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புச்சகோதரிக்கு என் இனிய வணக்கங்கள்.

என் செய்முறை விளக்கத்தின்படி “அடை” செய்து, தாங்கள் விரும்பிச் சாப்பிட்டதாகச் சொல்வது எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இதுவே நான் என் வலைத்தளத்தில் எழுதியுள்ள முதல் சமையல் குறிப்பாகும்.

இதற்கு இந்த அளவு ஒரு மிகப்பெரிய வரவேற்பும், விளம்பரமும் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை.

கணிசமான எண்ணிக்கையில் பலரும் என் பதிவுப்பக்கம் வருகை தந்து பாராட்டியுள்ளது, மிகவும் மகிழ்வளிக்கிறது.

போட்டியில் கலந்து கொள்ளும் நோக்கத்திலும் நான் அதை எழுதவில்லை.

போட்டி அறிவிப்பு பற்றி எனக்கு ஓர் தகவல் மட்டும் கொடுத்திருந்தார்கள்.

அதைப்பார்த்ததும், என் வழக்கம் போல நகைச்சுவைக்காக மட்டுமே எழுதி என் வலைத்தளத்தில் நான் பதிவு வெளியிட்டு இருந்தேன்.

அதை நம் அன்புச்சகோதரி திருமதி ஜலீலா கமால் அவர்கள், அவர்கள் அறிவித்த போட்டிக்காக எடுத்துக் கொள்வதாகச் சொன்னார்கள்.

அதை அந்தப்போட்டிக்கு எவ்வாறு அனுப்ப வேண்டும் என்ற வழிமுறைகளும், தொழில் நுட்பங்களும், ஏதும் எனக்குத் தெரியாது, மேடம் என்று சொல்லியும், நான் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் அவர்களே செய்து கொடுத்து உதவினார்கள்.

இப்போது பரிசும் கொடுத்து மகிழ்வித்துள்ளார்கள்.

அந்த என் பதிவினை சுருக்கமான முறையில் இங்கு தாங்களும் வெளியிட்டு என்னை மேலும் சிறப்பித்துள்ளீர்கள்.

அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

தாங்கள் அளித்துள்ள படங்களும் அருமையாகவே உள்ளன.

>>>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நான் என் விருதுகளை தனியாக அதற்கென்று ஒரு வலைப்பூ ஆரம்பித்து சேமித்து வருகிறேன். ஆரம்பித்து கிட்ட தட்ட ஒரு வருடமாகப் போகிறது.//

இது மிகவும் வரவேற்கத்தக்க ஓர் நல்ல வழக்கம் தான்.

பிறருக்கும் இதுபோலவே சேமிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினையும் ஏற்படுத்தும்.

//நான் இதுவரை பெற்ற அனைத்து விருதுகளும் விபரங்களும் அங்கு பதிவிட்டு வைத்திருக்கிறேன். என் விருதுகள் பக்கம் செல்ல இங்கே கிளிக்கவும்.//

நீங்கள் சொன்ன இடத்தில் கிளிக்கிப்பார்த்தேன்.

நான் மயக்கம் போடாத குறை தான்.

அடடா, எவ்வளவு விருதுகளும் சான்றிதழ்களும், பரிசுகளும் பெற்றுள்ளீர்கள் !!!!!!!!!!

எல்லாவற்றையும் ஏற்ற மிகப்பெரிய கப்பல் அல்லவா வேண்டும் போல உள்ளது!

உங்களுக்கு திருஷ்டி சுற்றிப்போட வேண்டும்.

மனமார்ந்த பாராட்டுக்கள் அன்பான வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

//விருதுகள் பெறுவதும் கொடுப்பதும் மகிழ்ச்சியே.//

ஆம். நிச்சயமாக. அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. பெறுவதை விட கொடுப்பதில் தான் அதிக மகிழ்ச்சியுள்ளது.

அன்புடன்
கோபு

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சி ஆசியா:)!

பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

நானும் இந்தமுறையில் அடை செய்து பார்க்கிறேன்.

Asiya Omar said...

மேனகா அனபான வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

கோமதியக்கா வாங்க,வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

Asiya Omar said...

வை.கோ சார் வருகைக்கும் அழகான வாழ்த்து மற்றும் கருத்துரைகளுக்கும்
மிக்க நன்றி.

ராமலஷ்மி வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.செய்து பாருங்க,நான் பாசிப்பருப்பும் சேர்ப்பேன்,ஆனால் இங்கு சார் குறிப்பு படி செய்து பார்த்தேன்.நன்றாக இருந்தது.மகிழ்ச்சி.

GEETHA ACHAL said...

வாழ்த்துகள்...

அடை ரொம்ப க்ரிஸ்பியாக சூப்ப்பராக இருக்கின்றது...ரொம்ப அருமை...

ஸாதிகா said...

விருதுகளுக்கு வாழ்த்துக்கள்.வைகோ சாரின் அடை பதிவைப்பார்த்த்துமே அதேபோல் செய்து விட வேண்டும் என்று இன்று வரை செயல் படுத்தவில்லை.நீங்கள் அழகாக அடை சுட்டு அதனை பதிவாக்கியும் விட்டீர்கள் தோழி

இளமதி said...

ஆசியாக்கா நீங்கள் பரிசும் விருதும் பெற்றமைக்குஎன் மனமார்ந்த வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!!!
மேலும் மேலும் இதுபோல நிறைய பரிசு விருதுகள் பெற வேண்டுகிறேன்.

வைகோ ஐயாவின் குறிப்பினை பிரமாதமாக செய்து காட்டியமைக்கும் மிக்க நன்றிகள்!

middleclassmadhavi said...

Congrats!

Mahi said...

வாழ்த்துக்கள் ஆசியாக்கா!

அடை ரொம்ப நல்லா இருக்கு. அதுல குணுக்கும் செய்து 2 இன் 1 குறிப்பா குடுத்துட்டீங்க, அருமை! :)

விருதுகளுக்கும், சமையல் போட்டியில் கிடைத்த பட்டம் மற்றும் பரிசுகளுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்!

சே. குமார் said...

வாழ்த்துக்கள் அக்கா.

திரு. வைகோ ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இளமதி said...
//வைகோ ஐயாவின் குறிப்பினை பிரமாதமாக செய்து காட்டியமைக்கும் மிக்க நன்றிகள்!//

இளமதி!

நீங்க என்னிடம் என்ன சொல்லியுள்ளீர்கள் தெரியுமா?

நான் சொன்ன முறையில், எனக்காகவே குணுக்கு செய்து, தகவல் கொடுத்து, விசா ஏற்பாடு செய்யப்போவதாகச் சொல்லி இருக்கிறீங்கோ.

நினைவு இருக்கட்டும்.

என் பாஸ்போர்ட் ரெடி.

உங்கள் குணுக்கினை ருசிக்க மட்டுமே ஜெர்மன் புறப்பட நானும் ரெடி.

சூடான சுவையான குணுக்கும், விசாவும் ரெடியா?

நாக்கில் நீருடன் .... VGK

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சே. குமார் said...
வாழ்த்துக்கள் அக்கா.

திரு. வைகோ ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி Mr சே. குமார் Sir.

vgk

வை.கோபாலகிருஷ்ணன் said...

//Asiya Omar said...
வை.கோ சார் வருகைக்கும் அழகான வாழ்த்து மற்றும் கருத்துரைகளுக்கும்
மிக்க நன்றி.//

நன்றிக்கு நன்றிகள், என் அன்புச் சகோதரியே!

அன்புடன்
கோபு

athira said...

அச்சச்சோ ஆசியா நான் இதுக்கு வந்து வாழ்த்தாமல் விட்டிட்டனே.... ஆவ்வ்வ்வ்வ் ரொம்ப லேட்ட்டாகிட்டேன்ன்ன்..

வாழ்த்துக்கள்.. அழகிய கான் பாக் பத்திரம்:) கள்ளர்கள் ஜாஸ்தியாமே...

athira said...

அடை செய்து காட்டிட்டீங்க சூப்பர்ர்...

Priya said...

Adaiyum and kunnukum super akka, neegha kalakuringa, vazhuthukal unga awardskum, parisukum.

Jaleela Kamal said...

மிக அருமையாக தொகுத்து போட்டு இருக்கீங்க ஆசியா.
எல்லாத்த்தையும் இங்கேயே பகிர்ந்து இருக்கீங்களா?


உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

கோபு சார் அடை நானும் அவர் போட்ட உடனே செய்தாச்சு,
நல்ல ஒரு பில்லிங். நானும் பலவகைகளில் செய்து உள்ளேன்.

விருதுகளை தனிப்பதிவாக போட்டு சேமித்து இருக்கீங்க பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கு.
இது போல் போட்டு வைப்பது மிக்க மகிழ்சியாக இருக்கும்/

நானும் நான் வைத்துள்ள 8 பிளாக்குகளில் ஒரு பிளாக்கில் போட்டு வைத்துள்ளேன். அதை நான் பப்ளிஷ் செய்யவில்லை.

Asiya Omar said...

கீதா ஆச்சல் மிக்க நன்றி.
ஸாதிகா மிக்க நன்றி.
இளமதி மிக்க நன்றி.
மிடில்கிளாஸ் மாதவி மிக்க நன்றி.
மகி மிக்க நன்றி.
சே.குமார் மிக்க நன்றி.
அதிரா மிக்க நன்றி.
ப்ரியா மிக்க நன்றி.

Asiya Omar said...

ஜலீலா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.