Monday, January 21, 2013

தூள் பக்கோடா / Shredded Onion Pakoda


தேவையான பொருட்கள்;
பெரிய வெங்காயம் - 2 (200 கிராம்)
கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் -1 அல்லது 2
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 2 பின்ச்
சோடா உப்பு - 1 பின்ச்
எண்ணெய் பொரிக்க -தேவையான அளவு
உப்பு - தேவைக்கு.

1.முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.அத்துடன் கடலை மாவு,அரிசி மாவு,பெருங்காயத்தூள், சோடா உப்பு,உப்பு சேர்த்து நன்றாக கையால் விரவவும்.தண்ணீர் தெளிக்க வேண்டாம்,வெங்காயத்தில் ஊறும் தண்ணீரே போதும்.தேவைப்பட்டால் லேசாக தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.
2.பொரிக்கத் தேவையான எண்ணெய்யை வாணலியில் சூடு செய்யவும்.
விரவிய பகோடா மாவில்  சூடான எண்ணெயை 2 டீஸ்பூன் சேர்க்கவும்.நன்கு கலந்து விடவும்.சூடான எண்ணெய் சேர்ப்பதால் நல்ல மொறு மொறுப்பாக இருக்கும்..இப்ப தூள் பக்கோடாவிற்கான மாவு ரெடி.
அரிசி மாவு சேர்ப்பதும் மொறு மொறுப்பிற்கு தான்.


 வாணலியில் சூடான எண்ணெய்யில் பகோடா மாவை உதிர்த்து போடவும்.வெங்காயம் அதிகம் சேர்ப்பதால் சிறிது இனிப்பு சுவையுடன் இருக்கும்.வெங்காயம் அளவு கூட கூட இந்த தூள் பக்கோடா ருசியாக இருக்கும்.மிதமாப நெருப்பில் பொன்முறுகலாக பொரித்து எண்ணெய் வடிகட்டி எடுக்கவும்.


 சுவையான எங்க ஊர் தூள் பக்கோடா ரெடி.
விரும்பினால் மல்லி கருவேப்பிலை கூட நறுக்கி சேர்க்கலாம்.ஆனால் பாருங்க எங்க ஊரில் வெறும் வெங்காயம்,பச்சை மிளகாய் மட்டும் தான் சேர்ப்பாங்க.இரவு நேரங்களில் ஊர் பஜாரில் இந்த தூள் பக்கோடா வியாபாரம் பரபரப்பாக நடக்கும்.செய்தித்தாளில் பொட்டலம் கட்டி தருவாங்க,வாங்கி விட்டு வீடு வந்து சேர்வதற்குள் பக்கோடாவில் உள்ள எண்ணெய்யை தாள் உறிஞ்சி சாப்பிட பதமாக இருக்கும்.

23 comments:

angelin said...

அப்படியே ஒரு பொட்டலம் பார்சல் ப்ளீஸ் :))
இங்கே ரொம்ப ஸ்நோ ..குளிருக்கு சாப்பிட நல்லா இருக்கும் ....பகிர்வுக்கு நன்றி .

உங்க ரெசிப்பி உல்லிதீயல் நேற்று செய்தேன் ஆசியா ..மிக அருமையாக வந்தது .

Meena Selvakumaran said...

I like this pakoda , crispy and yummy.yours look perfect.

faiza kader said...

appadiye ennakum oru poothalam.. romba nalla iruku..

Sweetlime said...

Salam amma, so crispy and mouth watering pakoda...Parcel pls....

Mahi said...

சூப்பர்ப் பகோடா!

கோமதி அரசு said...

ஆசியா, தூள் பக்கோடா செய்முறை அருமை.
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும்.
குளிர் காலத்தில் சுட சுட செய்து கொடுத்தால் தட்டு காலியாகி விடும்.
அழகான படங்கள்.
வாழ்த்துக்கள்.

Sharanya palanisshami (sara's TASTY BUDS) said...

thank you for linking to my event , add the logo and link to your sidebar too..............

Sangeetha Nambi said...

Love this snacker all time...
http://recipe-excavator.blogspot.com

அமைதிச்சாரல் said...

ஜூப்பருங்க..

Aruna Manikandan said...

perfect tea time snack :)

இளமதி said...

அருமையான ஸ்நாக்ஸ்...:) செய்திருக்கேன் முன்பும். என்ன கொஞ்சம் எண்ணை இழுத்து வைத்திருக்கும் என்பதால் எப்பவாச்சும்தான்..
நல்ல பகிர்வு ஆசியா!

ஸாதிகா said...

அருமையாக செய்து காட்டி இருக்கீங்க ஆசியா.

Asiya Omar said...

ஏஞ்சலின் மிக்க நன்றி.
மீனா மிக்க நன்றி.
ஃபாயிஜா மிக்க நன்றி.
ஸ்வீட்லைம் மிக்க நன்றி.
மகி மிக்க நன்றி.
கோமதியக்கா மிக்க நன்றி.

Asiya Omar said...

சரண்யா வருகைக்கு மிக்க நன்றி.லோகோ,லின்க் இணைத்திருக்கேன்.என் ஆங்கில ப்ளாக்கில் சைட் பாரில் இணைத்து விட்டேன்.
சங்கீதா மிக்க நன்றி.
அமைத்திச்சாரல் மிக்க நன்றி.
அருணா மிக்க நன்றி.
இளமதி மிக்க நன்றி.
தோழி ஸாதிகா மிக்க நன்றி.

S.Menaga said...

சூப்பர்ர் பகோடா !!

Vijayalakshmi Dharmaraj said...

my most favorite pakoda...
Mint Chutney
Show Your Style to the World - Series
VIRUNTHU UNNA VAANGA

Vimitha Anand said...

Never get this right... Tea ku supera irukkum

கோவை2தில்லி said...

சூப்பரான பக்கோடா....எங்கள் வீட்டிலும் இப்படித் தான் செய்வோம். பகிர்வுக்கு நன்றி.

இமா said...

எனக்கும் ஒரு பார்சல். :)

Kanchana Radhakrishnan said...

super pakoda.

வெங்கட் நாகராஜ் said...

தில்லிக்கு ஒரு பொட்டலம் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்.... :)

Priya said...

Yennakum oru packet fulla parcel,love this pakoda.

S.Menaga said...

ஆஹா ஒரு பார்சல் எனக்கும்,செம குளிரா இருக்கு இங்க....