Saturday, January 12, 2013

சீனிப் பொங்கல் / சீனிச் சோறு / Sugar Pongal


பொதுவாக பொங்கல் மண்டவெல்லம் அல்லது அச்சு வெல்லத்தில் செய்வோம்.நான் இங்கு சீனியில் செய்து காட்டியிருக்கிறேன்.எங்க ஊரில் இதனை சீனிச் சோறுன்னு  கொஞ்சம் மாறுபட்ட செய்முறையில் செய்வாங்க.நான் பொங்கல் மாதிரியே செய்திருக்கிறேன்..

தேவையான பொருட்கள்:
பச்சரிசி அல்லது பாசுமதி அரிசி - 1 கப் (150 கிராம்)
சீனி - ஒன்று முதல் ஒன்னேகால் கப்( விருப்பப் படி)
பால் + தண்ணீர் - 1 +1 கப்
நெய் - 3 - 4 டீஸ்பூன் 
முந்திரி கிஸ்மிஸ் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
ஏலப்பொடி - கால் டீஸ்பூன்
சாஃப்ரான் -பெரிய  பின்ச்
(கேசரி)மஞ்சள் கலர் - பின்ச் (விரும்பினால்)
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - பின்ச்..

3-4  நபர்களுக்கு பரிமாறலாம்.
சாதம் ரெடியாக இருந்தால் அரைமணிக்குள் செய்து அசத்தி விடலாம்.


 பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.

 ஒரு கப் அரிசியை நன்கு அலசி எடுத்து கொள்ளவும்.அத்துடன் ஒரு கப் பால் ஒரு கப் தண்ணீர் சேர்த்து 15 நிமிடம்  ஊற  வைக்கவும்.

 ஒரு பாத்திரத்தில் ஒன்னேகால் கப் சீனியுடன் சாஃப்ரான்,ஏலப்பொடி,பின்ச் மஞ்சள் கலர் அரை கப் தண்ணீர் சேர்த்து சிறு தீயில் வைத்து கொதித்து சீனி கரைந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

 பாலில் ஊறிய அரிசியுடன் ஒரு டீஸ்பூன் நெய்,பின்ச் உப்பு சேர்த்து  குக்கரில் ஒரு பாத்திரம் வைத்தோ அல்லது நேரடியாகவோ கொதி வந்து ஆவி வரத் தொடங்கியவுடன், அடுப்பை குறைத்து இரண்டு விசில் வைத்து  அணைக்கவும்.பால் சேர்ப்பதால் நேரடியாக குக்கரில் வைத்தால் அடி பிடிக்கும்.எனவே ஒரு பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுப்பது நல்லது.
 இப்படி பக்குவமாக வெந்து எடுத்து சூட்டுடன் மசித்து கொள்ளவும்.

 மசித்த பால் சோறில் சீனிக் கலவையை சேர்க்கவும்.அடுப்பை குறைத்து வைத்து ஒரு சேர கலந்து விடவும். இறுகி வரும். அடுப்பை அணைக்கவும்.

 ஒரு கடாயில் 2 டீஸ்பூன் நெய் விடவும். முந்திரி உலர் திராட்சையை இளஞ்சிவப்பாக வறுத்து கொட்டவும்.

 வறுத்த முந்திரி உலர் திராட்சையை ரெடி செய்த சீனிப் பொங்கலில் சேர்க்கவும்.
 தேங்காய் துருவல் சேர்க்கவும்.கிளறி விடவும்.இது தான் மிக்க ருசியைத் தரும்.ஒரு டீஸ்பூன் நெய் விரும்பினால் மேலே போட்டு பிரட்டி விடலாம்.

சூப்பர் சுவையுள்ள சீனிப் பொங்கல் ரெடி.

இது சும்மாவே பவுலில் வைத்து காலை மாலை டிபனுக்கு சாப்பிடலாம்.இனிப்பு பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
எங்க வீட்டில்  இரண்டாவது அண்ணி கொஞ்சம் சாதம் மீதியானால் கூட சீனிச் சோறு செய்து பிள்ளைகளுக்கு பண்டம் போல் தருவாங்க.அவங்க இப்ப இல்லை.எதையும் வேஸ்ட் செய்ய மாட்டாங்க.அவங்க நினைவாய்த்தான் இந்த ரெசிப்பி தந்திருக்கிறேன்...


என்னுடைய பருப்பு சோறு ரெசிப்பி பார்க்க இங்கே கிளிக்கவும்.




Sending this recipe to Saraswathi's Dish in 30 minutes - Rice Recipes and Giveaway and  to Gayathri's Walk Through Memory Lane- January.


 அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
என்னுடைய மற்ற பொங்கல் குறிப்புகளைப் பார்க்க இங்கு கிளிக்கவும்.

18 comments:

faiza kader said...

romba super.. en husband ku chakarai pongal romba pidikum. chn il irukum pooluthu adikadi seiven. inga manda vellam veethil illathathaal seiya villai. sugar poothu innaikey seithu koduthu viduren... thx akka

Divya Pramil said...

Super delicious pongal akka :) Perfect for the season!!

Meena Selvakumaran said...

Yummy pongal.

கோமதி அரசு said...

சீனிப் பொங்கல் நல்லா இருக்கிறது.
உங்கள் அண்ணிக்கு நல்ல ரசனை. அவர்களின் நீங்கா நினைவுகளில் மலர்ந்த சீனிப் பொங்கல் நல்ல ருசி.
படங்கள் அழகு.
பொங்கல் வாழ்த்துக்கு நன்றி.
வேளாண்மை சிறக்க வாழ்த்துக்கள்.

faiza kader said...

pongal seithu sappithum vithenn..nalla vanthathu. next post pooduren..

Nandini M said...

Lovely and sweet pongal! Love the sugar burst.

கோவை2தில்லி said...

சீனிப் பொங்கல் பிரமாதமா இருக்கு. நான் கல்கண்டு சாதம் செய்வதுண்டு. இதைப் போல்....

ராதா ராணி said...

தை பொங்கலுக்கு இதைத்தான் செய்ய போறேன் ஆசியா.. நல்லா இருக்கு .

Priya said...

Delicious pongal akka, yennaku vellathula seiyura pongala vida cheeni pongal romba pidikum.

angelin said...

பார்க்கவே ருசியாருக்கு ஆசியா ..இது வரை நான் இனிப்பு பொங்கல் செய்ததேயில்லை ..எப்பவும் வெண் பொங்கல் தான் ..செய்திருக்கேன் இம்முறை இதே முறையில் செய்து விடுகிறேன் .பகிர்வுக்கு நன்றி ஆசியா

Saras said...

Delectable recipe and must for this season..Well prepared..
Thanks for the same for linking dear..

S.Menaga said...

வித்தியாசமான சீனிப்பொங்கல்,இதுமாதிரி செய்ததில்லை...

வை.கோபாலகிருஷ்ணன் said...

ருசியான பதிவு. செய்முறை விளக்கங்கள் அருமை. பாராட்டுக்கள்.

இங்கு திருமணங்களில் இதே போலத்தான் கல்கண்டு பாத் என்று செய்து பரிமாறுகிறார்கள்.

Mahi said...

Delicious! New recipe Asiya Akka..so, we can make this with left over rice? Interesting!

Ungalukkum, kudumbathinarukkum iniya pongal vazhthukkal!

இளமதி said...

மிக்க நன்றி ஆசியா அக்கா..
நல்லதொரு இனிக்கும் குறிப்பும் இனிப்பான வாழ்த்தும்..:)

உங்களின் இந்தப் பதிவு என் கண்களில் படாமல் ஒளிந்துவிட்டதே...இப்பதான் பார்த்தேன்..

உங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்!

vanathy said...

Looking yummy.

Vijiskitchencreations said...

நான் கல்கண்டு பாத் செய்வதுண்டு.
இது அடுத்த தடவை செய்து பார்க்கனும். என் குழந்தைகளுக்கு பிடிக்கும். நல்ல குறிப்பு. நான் இதை நோட் செய்துட்டேனெ. நன்றி ஆசியா.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

அண்ணியின் நினைவாகப் பதிந்த பொங்கல் குறிப்பு அருமை ஆசியா. விஜி சொல்லியிருப்பது போல் கல்கண்டு சாதம் செய்வதுண்டு நானும். இந்த முறையிலும் செய்து பார்க்கிறேன். நன்றி.

உழவர் திருநாள் வாழ்த்துகளும்.