Wednesday, January 30, 2013

சேனைக்கிழங்கு கடைசல் / புளிக்கறி / Tangy Yam Curry




தேவையான பொருட்கள்;
சேனைக்கிழங்கு - கால் கிலோ
புளி - சிறிய எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி அல்லது குழம்பு மசாலா  - ஒன்னரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
மல்லி கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 3 -4 நபர்.

செய்முறை:
முதலில் சேனைக்கிழங்கை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி கழுவி எடுக்கவும்.வெங்காயம் நறுக்கி வைக்கவும்,புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
குக்கரில் சேனைக்கிழங்கு,அரிசி கழனி ஒரு கப், சிறிது உப்பு சேர்த்து
மூன்று விசில் வேகவைத்து எடுக்கவும்.




 வெந்த பின்பு தண்ணீர் வடிகட்டவும்.
 மசித்து விடவும்.
 வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,வற்றல்,கருவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 அத்துடன் புளித்தண்ணீர் சேர்க்கவும்.மஞ்சள் தூள்,சாம்பார் அல்லது குழம்பு மசாலா  பொடி சேர்க்கவும்.
 நன்கு கொதித்து புளி மசாலா வாடை மடங்க வேண்டும்.
 மசித்த சேனைக்கிழங்கை சேர்க்கவும்.
 கலந்து விடவும்.அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக ஒரு சேர கொதிக்கட்டும்.உப்பு சரி பார்க்கவும்.
 நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும். அடுப்பை அணைக்கவும்.குழம்பு வைத்து குறைந்தது அரை மணி நேரம் கழித்து பரிமாறவும்.கிழங்கு புளியை ஏற்று ருசியாக இருக்கும்.

சுடு சாதத்திற்கு ஊற்றி சாப்பிடவோ அல்லது கெட்டியாக தொட்டுக் கொள்ளவோ பரிமாறலாம்.
இப்படி தனியாக வேகவைத்து செய்யாமல் குக்கரிலேயே தாளித்தும் செய்யலாம்.
 சுவையான சேனைக்கிழங்கு கடைசல்ரெடி.

இதற்கு சாம்பார் பொடி தவிர வீட்டு குழம்பு மசாலாவும் உபயோகிக்கலாம்.எங்க வீட்டில் அண்ணி கருணைக்கிழங்கை இப்படி கடைந்து செய்வார்கள், பார்க்க கெட்டி பருப்பு போலவே இருக்கும்.நான் இங்கு சேனைக்கிழங்கை செய்து காட்டியிருக்கிறேன்.கழனி சேர்த்து சேனைக்கிழங்கு (பெரியதாக இருக்கும்) அல்லது கருணைக்கிழங்கை ( சிறியதாக உருளையாக இருக்கும்) வேக வைத்தால் அதில் உள்ள சொர சொரப்பு(அரிப்பு) இருக்காது.


13 comments:

Kalpana Sareesh said...

too good.. hav to try it.. nice version of cooking it..

இளமதி said...

ஆசியா... அருமையா இருக்கு. இருக்கும்.
ம். எனக்கு எங்கம்மா நினைப்பை ஏற்படுத்தீட்டீங்க...
அவங்களும் இப்படியேதான் ரொம்ப அசத்தலா செய்வாங்க. கடைசியில் ரொம்ம்ப குறைவா கொஞ்சம் தேங்காய்பூ மைய அரைச்சு சேர்த்துவிடுவா. அதுவும் நல்ல வாசனையா இருக்கும்.

நல்ல குறிப்பு ஆசியா.. பகிர்வுக்கு மிக்க நன்றி!

Vimitha Anand said...

Tangy n yummy curry. Will try soon

Sangeetha Nambi said...

Never tried curry using Yam... But this is rocking one...
http://recipe-excavator.blogspot.com

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர்-சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு தவிர...

Priya said...

Pulicurry superaa irruku akka, my mom used to do this but i never prepared here.

கோவை2தில்லி said...

சூடான சாதத்துக்கு அருமையா இருக்கும்... பகிர்வுக்கு நன்றிங்க.

Meena Selvakumaran said...

I just deep fry them always.this looks yummy ,and tnxs for the tip ,will be very helpful

S.Menaga said...

மிக அருமை,இதனுடன் வேகவைத்த‌ து.பருப்பு சிறிது சேர்த்தால் சுவை இன்னும் நல்லாயிருக்கும்...

Asiya Omar said...

மிக்க நன்றி கல்பனா.

இளமதி மிக்க நன்றி.தேங்காய் சிறிது அரைத்து விட்டால் சூப்பராக இருக்குமே!

விமிதா மிக்க நன்றி.

சங்கீதா மிக்க நன்றி.

Asiya Omar said...

தனபாலன் சார் வாங்க,ரொம்ப நாளாச்சு,நலமா? கருத்திற்கு நன்றி.

மிக்க நன்றி ப்ரியா,நானும் எப்பவாவது இப்படி சமைப்பதுண்டு.

கோவை2தில்லி மிக்க நன்றி.

மேனகா டிப்ஸ்க்கு மிக்க நன்றி.இனி பருப்பு சிறிது சேர்த்து செய்து பார்க்கிறேன்..

Mahi said...

Hearing for the first time Asiya Akka! Looks yummm!

Divya Pramil said...

Sounds so delicious akka... Flavorful too :) Elathulayum kalakringa :)