Saturday, January 5, 2013

வீடியோ சமையல்- நெல் மாவு ரொட்டி & கொழுக்கட்டை - Video Samaiyal - Rice Flour Roti & Kozhukattai




நெல் மாவு ரொட்டி & கொழுக்கட்டை 
செய்முறையைக் காண வீடியோவை கிளிக்கவும்.

video


ரொட்டி கையில் தட்டுவது சிரமம் என்று நினைப்பவர்கள் நான் முன்பு பகிர்ந்த இந்த முறையிலும் செய்யலாம்.

நெல் மாவு எங்க ஊர் முறைப்படி எப்படி தயார் செய்வது என்பதனை தெரிந்து கொள்ள இங்கே கிளிக்கவும்.
காலையில் பசியாற அரிசிமாவு ரொட்டி,கொழுக்கட்டை,கருப்பட்டி கொழுக்கட்டை, கருப்பட்டி ஆப்பம்,புட்டு,இடியாப்பம், ஆப்பம்,இட்லி,தோசை என்பன வாகத்தான் இருக்கும்.எங்க ஊர்ப் பக்கம் அதிகமாக விளைவது நெல், உளுந்து,பாசிப்பயறு என்பதால் அதனைத் தழுவியே உணவு வகைகளும் இருக்கும். விசேஷமாக எங்க ஊர் ஸ்பெஷலான  அரிசிமாவில் செய்வது தான் மட்டன் தக்கடி.
அதன் செய்முறையை முன்பே இங்கு பகிர்ந்திருக்கிறேன்.

இந்த அவசர காலத்தில் காலை உணவாக கார்ன்ஃப்லேக்ஸ்,ப்ரெட் சாண்ட்விச், ஒட்ஸ் என்று மாறிவிட்டது என்றாலும் வார விடுமுறை நாட்களில் பாரம்பரிய உணவுகளை சமைத்து அசத்திவிடுவதுண்டு. நாம் ரசித்து உண்டவைகளை நம்ம குழந்தைகளும் ருசிக்க வேண்டாமா?

9 comments:

faiza kader said...

Romba nalla iruku.. Thelivana villakam. Size thankammiya iruku.

vanathy said...

Akka, super.

Priya said...

Authentic dishes, superaa irruku.

Asiya Omar said...

ஃபாயிஜா வருகைக்கு நன்றி.கருத்திற்கு மகிழ்ச்சி.வீடியோவிற்காக கொஞ்சமாக செய்து காட்டியிருக்கேன்.

வருகைக்கும் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி,நன்றி வானதி.

Jaleela Kamal said...

வீடியோ சமையல் அருமை நெல் மாவு மாசி ,வெங்காய முட்டை எனக்க்கு பிடிச்ச டிபன்.

இன்றூ கூட அது தான் செய்தேன்

கோமதி அரசு said...

ஆசியா,நீங்கள் நெல் மாவு தயாரிக்கும் முறை நெல் மாவு கொழுக்கட்டை, நெல் மாவு ரொட்டி தயாரித்த விதம் எல்லாம் அருமை.

நாங்கள் வெங்காயம் இல்லாமல், பச்சை மிளகாய் காரட், சிவப்பு மிளகாய் தாளித்து தேங்காயை பல் பல்லாய் கீறி போட்டு செய்வோம்.
சிவப்பு அரிசி கொழுகட்டை மிக ருசியாக இருக்கும். இனி ஊருக்கு போனால் சிவப்பு அரிசி வாங்கி வரவேண்டும். சிவப்பு அரிசி மாவு கடைகளில் கிடைக்கிறது. வீட்டில் நாமே தயார் செய்வது போல் இருக்காது.
பகிர்வுக்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ருசியான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Asiya Omar said...

ப்ரியா தொடர் கருத்திற்கு மிக்க நன்றி.

ஜலீலா மிக்க நன்றி.

கோமதி அக்கா மிக்க நன்றி.அக்கா,உங்க குறிப்பை இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.

வை.கோ சார் மிக்க நன்றி.

Kanchana Radhakrishnan said...

வீடியோ சமையல் அருமை