Wednesday, January 16, 2013

சேனைத் தீயல் / Yam Theeyal

 தேவையான பொருட்கள்;
சேனைக்கிழங்கு - கால் கிலோ
கருப்பு கொண்டைக்கடலை - 50 கிராம்( ஊற வைத்தது)
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

வறுத்து அரைக்க:
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள்- 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
கரம் மசாலா - அரைடீஸ்பூன்
பெரிய வெங்காயம் -1
பெரிய தக்காளி - 1

தாளிக்க:
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு & வெந்தயம் - தலா அரைடீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு
மிளகாய் வற்றல் - 1
நறுக்கிய வெங்காயம் - 1
தட்டிய இஞ்சி பூண்டு - தலா 1 டீஸ்பூன் குவியலாக.

 சேனைக்கிழங்கை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.


சேனைக்கிழங்கை கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் தேவைக்கு உப்பு சேர்த்து வேகவைக்கவும்.கொண்டைக்கடலையையும் தனியாக வேகவைத்து வைக்கவும்.
 கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தேங்காய் துருவல் மசாலா தூள்கள் அனைத்து சேர்த்து வறுக்கவும்.

 அத்துடன் நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.ஆறியவுடன் மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.

 கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்து வரும் பொழுது  கடுகு,வெந்தயம் சேர்க்கவும்,வற்றல் கிள்ளி போடவும்,கருவேப்பிலை சேர்க்கவும், வெடித்து வரும் பொழுது நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.இஞ்சி பூண்டு சேர்க்கவும்.நன்கு சிம்மில் வைத்து வதக்கவும்.
 அரைத்த விழுதை சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.

 நன்கு வேக வைத்த சேனைக்கிழங்கு, கொண்டைக்கடலை சேர்க்கவும்.
பிரட்டி விடவும்.தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

 நறுக்கிய மல்லி இலை சிறிது சேர்க்கவும்.பிரட்டி விட்டு இறக்கவும்.
சுவையான சேனைத் தீயல் ரெடி. 
இதனை பக்க உணவாக சாதம் சப்பாத்தியுடன் பரிமாறலாம்.கெட்டியாக இருக்க வேண்டும்.
இங்கு ஒரு ரெஸ்டாரண்டில் டெய்லி சத்யா உண்டு,அங்கு போகும் பொழுது ஒரு நாள் இந்த சேனைத் தீயல் இலையில் பரிமாறினாங்க.சரி அதனை ருசித்து விட்டு முயற்சித்தது தான் இந்த குறிப்பு.அந்த டேஸ்ட் வரலை என்றாலும், நான் என்னுடைய உள்ளிதீயல்,கடலைகறியை கலந்து கட்டி ஒரு சேனைத்தீயல் உருவாக்கி விட்டேன்.
இதனுடன் வெறும் சோறு கலந்து கட்டுசோறு போலும் செய்யலாம்.வறுத்து செய்திருப்பதால் சீக்கிரம் கெடாது.
இப்ப சிறு கிழங்கு சீசன் மறக்காமல் சிறு கிழங்கு பொரியல் வைத்து சாப்பிடுங்க.16 comments:

சே. குமார் said...

நான் நேற்று மதியம் ஒரு மலையாளி ஓட்டலில் இதை சாப்பிட்டேன். என்னடா கடலையும் சேனைக் கிழங்கும் போட்டு சமைச்சிருங்காங்கன்னு நெனச்சேன் அக்கா... இதுதானா அது... அப்ப நம்ம அறையிலும் செய்து பார்க்கணும்.

Asiya Omar said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி குமார்.செய்து பாருங்க.

Mahi said...

புது ரெசிப்பியா இருக்கேன்னு பார்த்தேன், உங்க சொந்த முயற்சியா? :) நல்லா இருக்கு ஆசியாக்கா!

தேவையான பொருட்கள் எல்லாமே கைவசம் இருக்கு. செய்து பார்க்கிறேன். என்ன ஒண்ணே ஒண்ணு, சேனைதான் ஃப்ரோஸன்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

கோமதி அரசு said...

சேனைத்தீயல் மிக நன்றாக் இருக்கு. என் அம்மாவுக்கு திருவனந்தபுரம். தீயல் அடிக்கடி செய்வார்கள். சோம்பு போடாமல்.
உங்கள் பாணியில் செய்துப் பார்க்கிறேன்.
பகிர்வும் படங்களும் சூப்பர்.

Asiya Omar said...

மகி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

கோமதியக்கா,வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஹோட்டலில் ருசித்த தீயலில் சோம்பு மணம்,கரம் மசாலா மணம் இருந்தது,அதனால் தான் சேர்த்து செய்து பார்த்தேன்.சோம்பு சேர்ப்பது வயிற்றுக்கும் நல்லது.

Easy (EZ) Editorial Calendar said...

சேனையில் தீயலை இன்று தான் கேள்வியே பட்டேன்.....கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்...இன்னும் இது மாதிரி புதுசா வேறு ஏதாவது இருந்தாலும் எழுதுங்க.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

அமைதிச்சாரல் said...

நாஞ்சில் பகுதில சோம்பு,கரம்மசாலா,தக்காளியெல்லாம் சேர்க்காம செய்வோம்.புளி கரைச்சு விட்டுக் குழம்பு பதத்துல இருக்கும். இது வித்தியாசமா செஞ்சுருக்கீங்க. நல்லாத்தான் இருக்கும்ன்னு தோணுது.

Vimitha Anand said...

Curry romba nalla irukku. Chapathi ku nalla irukkum

Vijayalakshmi Dharmaraj said...

supera iruku.. love it...
Today's Recipe - Chapathi Curry

Invite you to participate on SHOW YOUR STYLES(Cooking) TO THE WORLD - SERIES
VIRUNTHU UNNA VAANGA

இளமதி said...

அருமையான குறிப்பு..இதற்கு அவசியம் கறுப்புக் கொண்டைக்கடலைதான் நன்றாக இருக்குமா? கைவசம் வெள்லைக்கடலை இருக்கு அதனால் கேட்கிறேன்.

செய்து பார்க்கிறேன். நல்ல குறிப்பு மிக்க நன்றி ஆசியா.

ராதா ராணி said...

குறிப்பு புதுசா இருக்கு .. பார்க்க நல்லா இருக்கு, சுவையும் நல்லாத்தான் இருக்கும் போல... செய்து பார்த்திட வேண்டியதுதான்..:)

Priya said...

Superaa irruku intha senai theeyal..

Sangeetha Nambi said...

Love this all time...
http://recipe-excavator.blogspot.com

S.Menaga said...

சூப்பரான சேனைத் தீயல்!!

கோவை2தில்லி said...

சமீபத்தில் தான் உள்ளி தீயல் சாப்பிட்டேன் கேரளத்தில். இதையும் செய்து பார்க்கிறேன்.

ஸாதிகா said...

வித்தியாசமாக உள்ளது தீயல்.