Tuesday, February 19, 2013

ஈஸி டேஸ்டி தக்காளி சட்னி / Easy Tasty Tomato Chutney


தேவையான பொருட்கள்;
பழுத்த சிவப்பு தக்காளி - 200கிராம்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - அரை-1 டீஸ்பூன்
இஞ்சி - மிகச் சிறிய துண்டு
சின்ன வெங்காயம் - 7
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 + 2 டீஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 2 பின்ச்
கருவேப்பிலை - 1 இணுக்கு.

 வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய தக்காளி,உரித்த சின்ன வெங்காயம்,சிறிய துண்டு இஞ்சி போட்டு வதக்கவும்.சிறிது தேவைக்கு உப்பு சேர்க்கவும்,விரைவில் தக்காளி மசிந்து விடும்,மிளகாய்த்தூள் சேர்க்கவும் .நன்கு பிரட்டி விடவும்.அடுப்பை அணைக்கவும்.ஆறட்டும். ஆறியபின்பு கவனமாக மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.நன்றாக சிக்கென்று மூடி பெரிய ஜாரில் போட்டு அரைக்க வேண்டும் இல்லாவிடில் தக்காளி சட்னி வெளியே அபிஷேகமாகிவிடும்.

அரைத்த சட்னியை ஒரு பவுலில் மாற்றவும். தாளிப்பு கரண்டியில்,கடுகு,உளுத்தம் பருப்பு,பெருங்காயம்,கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.உப்பு சரி பார்க்கவும்.கெட்டியாக அல்லது கொஞ்சம் தளர்வாக உங்கள் விருப்பம் தான்.
சூப்பரான ஈசி டேஸ்டி தக்காளி சட்னி ரெடி.
இட்லி.தோசை,ஆப்பத்திற்கு சூப்பர் காம்பினேஷன்.

Sending this to

Gayathri s Walk Through Memory Lane - Month of Love @ Merry Tummy.


20 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுர்ரென்று இருக்கிற மாதிரி தோணுது...

Asiya Omar said...

நன்றி தனபாலன் சார்,மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன் சேர்த்தால் சுர்ரென்று இருக்கும்,அரைடீஸ்பூன் சேர்த்தால் நார்மல் காரம்,இது நன்கு சிவப்பு தக்காளி அது தான் இந்த கலர்.

priyasaki said...

பார்க்கவே கலர் நல்லாஇருக்கு ஆசியா. காஷ்மீரிதூள் பதிலா தனி மி.தூள்
போடலாமா. உங்க ரெசிப்பி சிலது செய்திருக்கிறேன் ஆசியா. அருமையாக‌
இருக்கு.

Sharanya palanisshami (sara's TASTY BUDS) said...

akka super chutney , i like this chutney with crispy dosa

Aruna Manikandan said...

perfect chutney, love to have with hot idli's :)

Sangeetha Nambi said...

Love this chutney ever...
http://recipe-excavator.blogspot.com

Vimitha Anand said...

tomato chuntey romba pudikum... arumaiya irukku

Meena Selvakumaran said...

perfect color , i love this chutney a lot

இளமதி said...

ஆசியா... சூப்பர் ரெஸிப்பி...:)
சட்டென்று செய்திடலாம். அத்தோடு சுவையும் நிச்சயம் அசத்தலாக இருக்கும்...

பகிர்வுக்கு மிக்க நன்றி!

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகுந்த சுவையான பதிவு/பகிர்வு.
பாராட்டுக்கள்.

Priya said...

Intha chutneyoda rendu idli extra saapidalam,arumaiya irruku.

கோமதி அரசு said...

ஆறியபின்பு கவனமாக மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.நன்றாக சிக்கென்று மூடி பெரிய ஜாரில் போட்டு அரைக்க வேண்டும் இல்லாவிடில் தக்காளி சட்னி வெளியே அபிஷேகமாகிவிடும்.//

சமையல் குறிப்புடன் கவனிக்க வேண்டிய விஷ்யமும் சொன்னதற்கு நன்றி.
தக்காளி சட்னி நன்றாக இருக்கிறது.
நான் சிவப்பு மிளகாய், சின்னவெங்காயம், தக்காளி வறுத்து செய்வேன். நீங்கள் சொன்ன முறையில் மிளகாய் தூள் சேர்த்து செய்து பார்க்கிறேன்.

Premalatha Aravindhan said...

wow delicious chutney,luks yum...

Mahi said...

றியபின்பு கவனமாக மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.நன்றாக சிக்கென்று மூடி பெரிய ஜாரில் போட்டு அரைக்க வேண்டும் இல்லாவிடில் தக்காளி சட்னி வெளியே அபிஷேகமாகிவிடும்./////Nallaa sonneenga Asiya Akka! I have done chutney fountain:) in the kitchen several times! So i wont make this grinding thakkali chutney at all! Hahahaha!

Nice chutney by the way!

Vijayalakshmi Dharmaraj said...

ha ha... Asiya akka enga kitchen layum niraya thadava thakali abishekam nadanthruku... chutney looks so tempting... rendu dosa extra ve ulla pogum...

Vijayalakshmi Dharmaraj said...

ha ha... Asiya akka enga kitchen layum niraya thadava thakali abishekam nadanthruku... chutney looks so tempting... rendu dosa extra ve ulla pogum...

கோவை2தில்லி said...

ஈசி சட்னி சூப்பராக இருக்கே...

கேரள நண்பர் வீட்டில் வரமிளகாய் இல்லாத காரணத்தால் இப்படித்தான் மிளகாய்த்தூள் சேர்த்து செய்தேன்.இஞ்சி எப்போதுமே சேர்ப்பேன். நல்ல சுவையை கொடுக்கும்...

athira said...

ஆஹா சூப்பர் சட்னி.. இனிப்போடு கூடிய சுவை கிடைக்குமென நினைக்கிறேன்.

Asiya Omar said...

கருத்து தெரிவித்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
அனைவரின் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி.

Jaleela Kamal said...

தக்காளி சட்னி கலரே அருமையாக இருககு. தோசையில் வைத்து சாப்பிட அருமையாக இருக்கும்
ஹனீபுக்கு இட்லிக்கு தக்காளி சட்னி தான் பிடிக்கும்.
இஞ்சி சேர்த்து நானும் செய்வதுண்டு.