Saturday, February 23, 2013

சாக்லேட் கேக் / Chocolate Cake

 தேவையான பொருட்கள்;
மைதா மாவு - 150 கிராம்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
கோகோ பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
சீனி (பவுடராக்கியது) - 150 கிராம்
பட்டர்  அல்லது மார்ஜரின் - 150 கிராம்
முட்டை - 2 (150 கிராம்)
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
பால் - அரை கப்
உப்பு - பின்ச்.

தயார் செய்ய - 20 நிமிடம்
பேக்கிங் நேரம் - 30-45 நிமிடம்
பரிமாறும் அளவு -6- 8 நபர்கள்

 தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
மைதா,பேக்கிங் பவுடர்,கோகோ பவுடர் சேர்த்து சலித்து வைக்கவும்.

 முட்டை மஞ்சள் கரு,வெள்ளைக்கரு தனியாக பிரித்து வைக்கவும்.
 வெண்ணெய், சீனியையும் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
 அத்துடன் முட்டை மஞ்சள் கரு,வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.

 மீண்டும் அடித்துக் கொள்ளவும்.சீனி நன்கு கரைந்து பொங்கி வெண்ணெய் லைட்டாக இருக்க வேண்டும்.
 மாவு சலித்து ரெடி செய்ததை எடுத்துக் கொள்ளவும்.
 சலித்த மாவுடன் வெண்ணெய்,பட்டர் கலவையை கலந்து கொள்ளவும்.
 பால் சேர்க்கவும்.
 கலந்து கொள்ளவும்.
 முட்டை வெள்ளைக்கருவை நுரைக்க அடித்து தனியாக அதனையும் சேர்க்கவும்.
 கலந்து கொள்ளவும். இதனை அப்படியே சிறிது  வெண்ணெய் தடவி மைதா மாவு தூவி ரெடி செய்த பேக்கிங் ட்ரேக்கு மாற்றலாம். நான் ரெடி செய்தது பேக்கிங் பவுல் என்பதால் அதனிலேயே பேக் செய்து பார்த்தேன்.சூப்பராக வந்தது.
 ஓவனை 200 டிகிரி செல்சியஸ்க்கு முற்சூடு செய்யவும்.மாவு ரெடி செய்து வைத்த பேக்கிங் பவுலை எடுத்து வைக்கவும்.
 30- 45 நிமிடம் பேக் செய்து எடுக்கவும். உங்கள் ஓவனைப் பொருத்து நேரம் வேறுபடக்கூடும்.கேக் ரெடியானதை ஒரு மரக் குச்சி கொண்டு வெந்து விட்டதை தெரிந்து கொள்ளலாம்.

 ஓவனை விட்டு வெளியே எடுத்து ஆற வைக்கவும்.ஆறிய பின்பு தலை கீழாக பவுலை  திருப்பி ஒரு ப்லேட்டில் எடுத்தால் சாக்லேட் கேக் ரெடி துண்டு செய்து பாரிமாறவும்.
 சூப்பர் ஸ்பாஞ்சி சாக்லேட் கேக் ரெடி.

 விருப்பம் போல் செரி அல்லது ஸ்ட்ராபெர்ரி, கிரீம்,சாக்லேட் சிப்ஸ், கொண்டு அலங்கரித்து பரிமாறலாம்.இது என் மகள் முதல் முதலாக அவளே அலங்கரித்தது உங்கள் பார்வைக்கு.


என்னுடைய 
ஸ்ட்ராபெர்ரி சாக்லேட் கேக் 

சாக்லேட் புட்டிங் 

பார்க்க கிளிக்கவும்.

12 comments:

கோமதி அரசு said...

இந்த மாதம் தீம் சாக்லேட் அல்லது கோகோ பவுடர் முக்கிய பொருள். சோ கலக்கியாச்சு.என் மகள் பள்ளிக்கு எடுத்து சென்று பகிர்ந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.//

குழந்தைகளுக்கு பிடித்துவிட்டால் அப்புறம் என்ன!

வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

வெற்றி பெற பின் ஸ்வீட் வேண்டும்... மறந்துடாதீங்க...

faiza kader said...

romba arumaiyaga vanthu iruku.. nadri..

Meena Selvakumaran said...

looks so moist and soft,fluffy.superaa iruku.

Divya Pramil said...

Wow looks soooo delicious :) Enaku romba pudicha cake :) Arumaya panirukinga akka :)

Princy Vinoth said...

Looks very nice!

SpicyFoood

vanathy said...

Super recipe.

athira said...

நல்லாயிருக்கு கேக். செய்துபார்க்க ஆசைதான் ஆனா மினக்கெடுவது குறைவு நான்.

Kanchana Radhakrishnan said...

super recipe.

Asiya Omar said...

கருத்து தெரிவித்த நட்புள்ளங்களுக்கு மிக்க நன்றி.அனைவரின் வருகைக்கும் மகிழ்ச்சி.

Jaleela Kamal said...

ரொம்ப அருமையாக இருக்கு ஆசியா
உஙக்ள் மார்பிள் கேக், நான் கலர் ஃபுல் கேக்காக செய்தும் பார்த்து இருக்கேன்.

நான் கொஞ்ச்மாக ஹனீபுக்கு மட்டும் மைக்ரோ வேவில் வைத்து கொடுத்து விடுவது.

கோவை2தில்லி said...

கேக் அருமையா வந்திருக்குங்க. பாராட்டுகள்.