Thursday, February 28, 2013

பாலக் கோஸ் பொரியல் / Palak Cabbage Stir fry


தேவையான பொருட்கள்;
பாலக் கீரை - ஒரு கட்டு
முட்டை கோஸ் - 100 கிராம்
வெங்காயம் - 1
பூண்டு பற்கள் - 4
மிளகாய் வற்றல் - 2
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு -1 டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 -3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
கீரையை சுத்தமாக அலசி தண்ணீர் வடித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.முட்டை கோஸ் நறுக்கி அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.வெங்காயம்,பூண்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் சூடேறவும்,கடுகு,சீரகம்,உ.பருப்பு,வற்றல் கிள்ளி  சேர்த்து வெடிக்கவும்,பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும். கீரையை சேர்க்கவும்,சிறிது வதங்கட்டும்,முட்டை கோஸ் சேர்க்கவும்.கொஞ்சம் ருசிக்கு உப்பு பார்த்து சேர்க்கவும்.நன்கு வதங்க விடவும்,இரண்டுமே விரைவில் வதங்கி விடும்,தேங்காய்த் துருவல் சேர்த்து பிரட்டி விடவும்.அடுப்பை அணைக்கவும்.


சுவையான சத்தான பாலக் கோஸ் பொரியல் ரெடி.


சாதத்தில் பிரட்டியோ அல்லது பக்க உணவாகவோ  சாப்பிடலாம்.
பாலக்கீரையும் முட்டை கோஸ் சேர்த்து பொரியல் செய்தால் ருசியும் சத்தும் அபாரம்.

20 comments:

Sangeetha Nambi said...

Super healthy keerai...
http://recipe-excavator.blogspot.com

ராதா ராணி said...

சத்தான ஆரோக்கியமான குறிப்பு. ரொம்ப சீக்கிரம் செய்திடலாம் போல இருக்கு..பாலக் கீரை கிடைக்கும் போது ஞாபகமாக செய்து பார்க்கிறேன் ஆசியா..

இளமதி said...

வித்தியாசமா இருக்கு. நல்ல குறிப்பு ஆசியா.

பகிர்வுக்கு மிக்க நன்றி!

Vimitha Anand said...

Very healthy stir fry

S.Menaga said...

கோஸுடன் கீரை சேர்த்து சமைத்திருப்பது சூப்பர்ர்!!

Meena Selvakumaran said...

very healthy and easy to make

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... மிகவும் பிடிக்கும்... நன்றி...

அமைதிச்சாரல் said...

சத்தான பொரியல்.

Mahi said...

Different combo! Healthy and simple recipe.

கோமதி அரசு said...

சத்து மிகுந்த பாலக் கோஸ் பொரியல் அருமை.

கோவை2தில்லி said...

வித்தியாசமான கூட்டாக இருக்கு. பாலக்கும் கோஸும்.... செய்து பார்க்கிறேன்.

மாதேவி said...

பாலக்கீரை கோஸ் வித்தியாசமாக இருக்கின்றது.

சே. குமார் said...

அக்கா நலமா?

பாலக் மற்றும் கோஸ் தனித்தனியாக செய்து சாப்பிட்டு இருக்கிறேன்...
இது முதல் முறை கேள்விப்படுகிறேன்...

அருமையா சொல்லியிருக்கீங்க.... செய்து பார்க்கலாம்...

மனோ அண்ணா வலைச்சரத்தில் சொன்னது போல் நீங்க சமையல் ராணிதான்....

priyasaki said...

நல்ல ரெசிபி ஆசியா. கோஸ் வாங்கினால் பொரியல்,கூட்டு தவிர வேறு செய்வதில்லை. இது வித்தியாசமாக இருக்கு. பகிர்வுக்கு நன்றி ஆசியா.

Priya said...

Super combination akka, rasamoda superaa irrukum.

athira said...

நல்லாயிருக்கு குறிப்பும் படமும். ஆனா இங்கத்தைய பாலக்கீரை... அதுதான் ஸ்பினாஜ் ல அதிகம் தண்ணி வரும்... வறையாக்க சரியான கஸ்டமாக இருக்கும்.

ஸாதிகா said...

கீரையையும் முட்டை கோசையும் சேர்த்து பொரியல் செய்து அசத்திட்டீங்க.பார்க்கவே சாப்பிடத்தூண்டுகிறது ஆசியா.

Jaleela Kamal said...

மிக அருமையான் பொரியல்,.

Princy Vinoth said...

very different i never tried this.

You have an award waiting at my space pls collect it.

SpicyFoood

Asiya Omar said...

கருத்து தெரிவித்த அனைத்து நட்புள்ள்ங்களுக்கும் மிக்க நன்றி,வருகைக்கு மகிழ்ச்சி.