Tuesday, February 12, 2013

குவிக் சுரைக்காய் கூட்டு & சுரைக்காய் தோல் துவையல் / Quick Bottlegourd Kuttu & Thuvaiyal


 சுரைக்காய் தோல் துவையல்:
தேவையான பொருட்கள்;
சுரைக்காய் தோல் அரைக் கிலோவில் சீவியது
எண்ணெய் - 2  டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்  துருவல் - 2-3  டேபிள்ஸ்பூன்
புளி - கொட்டையளவு
பெருங்காயம் - பின்ச்
உப்பு - தேவைக்கு



 கடாயில் எண்ணெய் விடவும்,சூடேற்றவும்,உளுத்தம் பருப்பு,வற்றல் போட்டு பொரிய விடவும், சுரைக்காய் தோல் சேர்க்கவும்,வதக்கவும்.

 பின்ச் பெருங்காய்த்தூள் சேர்க்கவும்,தேங்காய்த்துருவல் சேர்த்து பிரட்டி விடவும்,அடுப்பை அணைக்கவும்.சிறிது தேவைக்கு புளி ,உப்பு சேர்க்கவும்.

 சிறிது தண்ணீர் சேர்த்து துவையலாக அரைத்து எடுக்கவும்.


சுவையான சத்தான சுரைக்காய் தோல் துவையல் ரெடி.ருசி பிரமாதமாக இருக்கும்.

 குவிக் சுரைக்காய் கூட்டு 
செய்ய  தேவையான பொருட்கள்:
பிஞ்சு சுரைக்காய் ஒன்று -  அரைக்கிலோ
பாசிப்பருப்பு - 100 கிராம்
மஞ்சள்,சீரகப்பொடி - தலா அரைடீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

சுரைக்காய் பிஞ்சு என்பதால் விதை முத்தலாக இருக்காது.எனவே தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.பாசிப்பருப்பை லேசாக வறுத்து தண்ணீரில் ஊற வைக்கவும்.
 குக்கரில் பாசிப்பருப்பு , ஒரு கப் தண்ணீர்,சுரைக்காய்,மஞ்ச,சீரகத்தூள் சேர்க்கவும்.மூடி 2 விசில் வரவும் அடுப்பை அணைக்கவும்.
 ஆவியடங்கியவுடன் திறக்கவும்.
வெந்த சுரைக்காய் பாசிப்பருப்பில் உப்பு தேவைக்கு சேர்த்து  அகப்பையால் கலந்து  விடவும்
 அரைத்த தேங்காய்,பச்சை மிளகாய் விழுது சேர்க்கவும்.

 நன்றாக ஒரு சேர கூட்டு கொதித்து வரும்.கருவேப்பிலை சேர்த்து, தேங்காய் எண்ணெய் விட்டு கலந்து மூடி வைக்கவும்,விரும்பினால் நறுக்கிய மல்லி இலையும் சேர்க்கலாம்.

 சுவையான குவிக் சுரைக்காய் கூட்டு  &  சுரைக்காய் தோல் துவையல் ரெடி. இதனை சாதம்,சப்பாத்தி,பூரியுடன் சாப்பிடலாம்.செய்து பாருங்க,நிச்சயம் பிடிக்கும்.

Sending this recipe to 

Traditional & Native Recipes @ Sara's Tasty Buds .



Gayathri s Walk Through Memory Lane - Month of Love @ Merry Tummy.



Dish Name Starts With Q  - இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.


14 comments:

ஸாதிகா said...

சுலபமாக சுரைக்காயில் கூட்டு சமைத்து காட்டியதுடன் தோலை வீணாக்காமல் துவையலும் செய்து காட்டி விட்டீர்கள் ஆசியா.

ராதா ராணி said...

கூட்டு இதே முறையில் செய்வதுண்டு ஆசியா.. துவையல் இதுவரை செய்ததில்லை. இனி செய்து பார்க்க வேண்டும்.அருமை.

இராஜராஜேஸ்வரி said...

சுவையான சத்தான சுரைக்காய் தோல் துவையல் பாராட்டுக்கள்..

Jay said...

wow...flavorful n inviting version
Tasty Appetite

திண்டுக்கல் தனபாலன் said...

புதிய செய்முறை...

நன்றி...

S.Menaga said...

அசத்தலான 2 இன் 1 சமையல்!!

சே. குமார் said...

அக்கா...
2 இன் 1 சூப்பர் சமையல்...
சுரைக்காய் தோலில் துவையல்... அருமை... நாளை எங்கள் அறையில் இதுதான் இரவு சாப்பாடு...

athira said...

ஆஹா சூப்பரா இருக்கே.. வழமையா வாழைக்காய்த் தோலில் துவையல் செய்வோம் இது சுரக்காயில் இன்றுதான் அறிகிறேன்ன்.. பார்க்க சூப்பர்.

Saraswathi Tharagaram said...

What a comforting dishes..Sure goes yum with rasam rice..

கோவை2தில்லி said...

நல்லதொரு பகிர்வு. பீர்க்கங்காயில் இதுமாதிரி கூட்டும், தோலில் துவையலும் செய்வேன்.

Vimitha Anand said...

Rendu recipeyum super

faiza kader said...

irandum arumai.. thanks for linking to the event..

Shama Nagarajan said...

tempting recipe and yummy.
Ongoing event:
FAST FOOD EVENT -MUSHROOM
in my blog.

Asiya Omar said...

கருத்து தெரிவித்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.வருகைக்கு மகிழ்ச்சி.