Tuesday, February 26, 2013

ப்ரெட் பேன் கேக் / Bread Pan Cake


தேவையான பொருட்கள்;
ப்ரெட் துண்டுகள் - 4
முட்டை - 1
மைதா - அரை கப்
பால் - அரை கப்
வெனிலா எசன்ஸ் - அரைடீஸ்பூன்
சீனி - 4 -6 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் நெய் கலவை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - பின்ச்
அலங்கரித்து பரிமாற - தேன், செர்ரி பழங்கள் (விருப்பம் போல்)

பரிமாறும் அளவு - 2-3.

முட்டை பிரியப்படாதவர்கள் வெறும் மைதா,பால்,வெனிலா எசன்ஸ், சீனியுடன் பின்ச் பேக்கிங் பவுடரோ அல்லது சோடா உப்பு சேர்த்து பேன் கேக் மாவு ரெடி செய்து கொள்ளலாம்..

செய்முறை:
 ஒருபவுலில் முட்டை, சீனி ,மைதா மாவு,பால்.வெனிலா எசன்ஸ்,பின்ச் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.இட்லி மாவு பதம் இருக்க வேண்டும். ப்ரெட் துண்டுகளை இரண்டு இரண்டாக கட் செய்து வைக்கவும்.எட்டு துண்டுகள் வரும்.

 கரைத்து வைத்த மைதா முட்டை கலவையில் தோய்த்து எடுக்கவும்.
 தோசைக் கல் அல்லது ஒரு நான்ஸ்டிக் தவாவில் எண்ணெய் நெய் கலவை விடவும்.ப்ரெட் துண்டுகளை தவா சூடேறியவுடன் போட்டு பொன் முறுகலாக இரண்டு பக்கமும் திருப்பி சுட்டு எடுக்கவும்.
வெனிலா எசன்ஸ் சேர்ப்பது முக்கியம்.அந்த மணம் அபாரமாக இருக்கும்.

 சுவையான ப்ரெட் பேன் கேக் ரெடி.

இதனை தேனுடன் பரிமாற சுவை அபாரமாக இருக்கும்.

ரெடியான ப்ரெட் பேன் கேக் மீது சிறிது தேன் விட்டு மடித்து சாப்பிடவும்.சும்மாவே சூப்பராக இருக்கும்.விருப்பப்பட்டால் செர்ரி அலங்கரித்து பரிமாறலாம்.
ஒரு நாள் பேன் கேக் மாவு மீதமானது ப்ரெட்டை தோய்த்து சுட்டுப் பார்த்தேன் சூப்பராக இருந்தது.நீங்களும் செய்து பாருங்க..

இந்த குறிப்பை
 Passion on Plate  @ En - Iniyaillam 



 Valentine's Day Recipe Contest  @ Priya's Versatile Recipes - அனுப்புகிறேன்.



13 comments:

Mahi said...

Wow! Looks yummmm!

priyasaki said...

ஆசியா கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.பார்க்கவே நன்றாக இருக்கு.

Sangeetha Nambi said...

Tempting...
http://recipe-excavator.blogspot.com

இளமதி said...

அருமை... இவ்வளவு ஈஸியா இருக்கே...
செய்து பார்த்திடுவோமே...:)

Shama Nagarajan said...

mouthwatering dear ...lovely clicks

திண்டுக்கல் தனபாலன் said...

வாவ்... சூப்பர்...

Vimitha Anand said...

Nice idea. Looks soft and yum

Meena Selvakumaran said...

superb.it is crisp on outside and moist inside,yummy snack.

Priya said...

Akka super intha pancake, delicious.

ஸாதிகா said...

விருந்தினர்கள் வந்தால் சுலபமாக செய்து கொடுத்து விடலாம்.

கோவை2தில்லி said...

பான் கேக் பிரமாதமா இருக்கே....

athira said...

ஆஹா சூப்பர் இதுக்கு மைதாவும் சேர்க்கோணுமோ? புதுமுறையாயிருக்கு.. மைதா சேர்க்காமல் செய்வேன் நான். இனி மைதா சேர்க்கிறேன்ன்.

Jaleela Kamal said...

பார்க்கவே யம்மியாக இருக்கு