Friday, February 1, 2013

சிக்கன் முருங்கைக்காய் சால்னா / Chicken Drumstick Salna


தேவையான பொருட்கள்:
சிக்கன் - 300 கிராம்
முருங்கைக்காய் - 2
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
கறிமசாலா - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் -1/2 - 1 டீஸ்பூன்
மல்லி கீரை - சிறிது
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
தேங்காய்த் துருவல் 3 டேபிள்ஸ்பூன் + முந்திரி 3  அரைக்கவும்.

செய்முறை: 
 சிக்கன் துண்டுகளை சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.முருங்கைக்காயை நறுக்கி மஞ்சள் தூள்(அல்லது கறிமசாலா சிறிது) உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.வெங்காயம் தக்காளி,மல்லி இலை நறுக்கி வைக்கவும்.



 குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்,இஞ்சி பூண்டு கரம் மசாலா தூள் சேர்க்கவும், வதக்கவும்,தக்காளி,பச்சை மிளகாய்,நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்த்து மசிய விடவும்.மிளகாய்த்தூள்,மசாலாத்தூள் சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்.

 சிக்கன் சேர்த்து நன்கு வதக்கவும்.

ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.உப்பு சரிபார்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வைத்து இறக்கவும்.

 சிக்கன் வெந்து இப்படி இருக்கும்.
 மீண்டும் அடுப்பில் குக்கரை வைத்து வேக வைத்த முருங்கைக்காயை சேர்க்கவும்.கலந்து விடவும்.

 அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.தேவைக்கு சிக்கன் முருங்கைக்காய் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்க்கவும்.உப்பு சரிபார்க்கவும்.
 நன்கு கொதிக்க விடவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.

 தேங்காய்வாடை மடங்கி சால்னா சூப்பரான மணத்துடன் கமகமவென்று வீடே மணக்கும்.


சுவையான சிக்கன் முருங்கைக்காய் சால்னா ரெடி.
மட்டனோடும் முருங்கைக்காய் சேர்த்து இப்படி செய்யலாம்.வெறும் சாதத்தோடு பரிமாறவும், அருமையாக இருக்கும்.கறிமசாலா இல்லையென்றால்  வெறும் மிளகாய்த்தூள்,மல்லித்தூள் (1:2 or3) உபயோகித்தும் செய்யலாம்.

 Traditional & Native Recipes @ Sara's Tasty Buds  இவெண்ட்டுக்கும் அனுப்புகிறேன்.


15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

புதுசு கண்ணா புதுசு... - சிக்கன் முருங்கைக்காய் சால்னா...

நன்றி...

Asiya Omar said...

உடன் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தனபாலன் சார்.

Nandini M said...

Super salna:)

faiza kader said...

namma oru side spl salna super..b

Vimitha Anand said...

Inda combo pudusavum vithyasamaavum irukku.

athira said...

சிக்கினோடு முருங்கைக்காயோ? புது முறையாக இருக்கு முயற்சி செய்கிறேன், கறியின் அழகு செய்யத் தூண்டுது, சூப்பர்.

Meena Selvakumaran said...

Lovely pics.so tempting.nice idea to introduce drumstick with chicken .

S.Menaga said...

சிக்கனோடு முருங்கைக்காய் சேர்த்திருப்பது வித்தியாசமா இருக்கு...

Priya said...

Inthe salna innum superaa irruku akka.

Bharathy said...

First time in your blog and this is a lovely space :)

Chicken murungai salna mikavum nandraka irukkirathu! step by step is well detailed!

Contribute a spicy dish to my giveaway event, My Spicy Recipe and win e-gift vouchers worth Rs 1500, 1000 and 500!

vanathy said...

Super recipe Akka.

Asiya Omar said...

நந்தினி மிக்க நன்றி.

ஃபாயிஸா மிக்க நன்றி.

விமிதா மிக்க நன்றி.

அதிரா மிக்க நன்றி.

மீனா மிக்க நன்றி.

மேனகா மிக்க நன்றி.

ப்ரியா மிக்க நன்றி..

Asiya Omar said...

வருகைக்கும் கருத்திற்கும் அழைப்பிற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.நிச்சயம் குறிப்பு அனுப்பி வைக்கிறேன்.

Asiya Omar said...

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வானதி.மகிழ்ச்சி.

ஸாதிகா said...

சிக்கன் குழம்பில் முருங்கைகாயை போட்டால் வேகும் மணம் இருக்கே சூப்பரோ சூப்பர்.