Wednesday, February 20, 2013

சிம்பிள் சில்லி கோபி ஃப்ரை / Chilli Gobi Fry..


தேவையான பொருட்கள்;
காளிஃப்ளவர் - அரை கிலோ
சில்லி பவுடர் அல்லது சிக்கன் 65 மசாலா - 2 டீஸ்பூன்
கார்ன்ஃப்லோர்,கடலை மாவு,அரிசி மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கருவேப்பிலை - 2 இணுக்கு.
கெட்டி தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு ,எண்ணெய் தேவைக்கு.
 காளிப்ளவரை சிறு பூக்களாக பிரித்தோ அல்லது நறுக்கியோ வைத்துக் கொள்ளவும்.
நன்கு கொதிக்கும் நீரில் போட்டு ஒரு 5 நிமிடம் மூடி வைக்கவும்.வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.காளிப்ளவர் பாதி வெந்து விடும்.

 காளிஃப்ளவருடன் மேற்சொன்ன மாவு வகைகள், சில்லி பவுடர் அல்லது சிக்கன் 65 மசாலா,ருசிக்கு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்,லேசாக தண்ணீர் தெளித்து விரவவும்.கெட்டியாக கோட் ஆகி இருக்க வேண்டும்.

 தேவைக்கு கொஞ்சமாக எண்ணெய் விட்டு முறுக பொரித்து எண்ணெய் வடித்து எடுக்கவும்.மாவு கலந்து விரவியிருப்பதால் எண்ணெய் குடிக்காது,

 இதனை அப்படியே சாப்பிட்டாலும் சூப்பராக இருக்கும்.
என் இனிய இல்லம் ஃபாயிஸா தயிர் பச்சை மிளகாய்,கருவேப்பிலை சேர்த்து பிரட்டி சிக்கனை செய்து காட்டியிருந்தாங்க.தீடீரென்று அந்த நினைவு வரவே நான் இந்த கோபி ஃப்ரையில் முயற்சி செய்தேன் .டேஸ்ட் சூப்பராக இருந்தது..

 வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விடவும்.சூடேற்றவும், கருவேப்பிலை,கீறிய பச்சை மிளகாய் போடவும்,வெடிக்கவும் தயிர் சேர்க்கவும்.
 அத்துடன் பொரித்த காளிப்ளவரை சேர்க்கவும்.நன்கு பிரட்டவும். தயிர் பொரித்த காளிப்ளவரில் ஒட்டி வர வேண்டும்.அடுப்பை அணைக்கவும்.


சுவையான சில்லி கோபி ஃப்ரை ரெடி..
செய்து பாருங்க சூப்பராக இருக்கும்,வெரைட்டி ரைஸ் உடன் பரிமாற சூப்பராக இருக்கும்,ஏன் சும்மாவே சாப்பிடலாம்.சாஃப்டாக டேஸ்டாக இருக்கும்.
சிக்கன் 65 மசாலா இல்லையென்றால் வெறும் மிளகாய்த்தூள் போட்டு விரவலாம்.நான்வெஜ் டேஸ்ட்டில் வேண்டுமென்றால் சிக்கன் 65 மசாலா(ஆச்சி) வாங்கி உபயோகிக்கலாம்.காரம் உங்கள் விருப்பம் போல் சேர்க்கவும்.

17 comments:

S.Menaga said...

மிக அருமையாக இருக்கு...

Meena Selvakumaran said...

i have tried with chicken , never with cauliflower ,tnx for sharing ,nice starter than usual ones.

faiza kader said...

mihavum arumai akka... thx

priyasaki said...

நல்ல ரெசிபி ஆசியா. வித்தியாசமா இருக்கு. கண்டிப்பா செய்துபார்க்கவேண்டும். மிக்க நன்றி.

Mahi said...

Nice twist to the gobi fry! Looks yum!

ராமலக்ஷ்மி said...

படங்களுடன் விளக்கமான குறிப்பு. அருமை ஆசியா. செய்து பார்க்கிறேன்.

Sharanya palanisshami (sara's TASTY BUDS) said...

adding curd was new to me akka , yummy...........

Sangeetha Nambi said...

Super tasty fry...
http://recipe-excavator.blogspot.com

ஸாதிகா said...

புதுவிதமாக இருக்கு.சிம்பிளா இருக்கு.கண்டிப்பா டிரை பண்ண வேண்டும் தோழி.

Vijayalakshmi Dharmaraj said...

Romba arumai...

கோவை2தில்லி said...

நல்லதொரு குறிப்பு.

Vimitha Anand said...

my favorite. looks so yum

மனோ சாமிநாதன் said...

ரொம்பவும் அருமையான குறிப்பு ஆசியா!புகைப்படம் மிகவும் அழகாய் இருக்கிறது!

அமைதிச்சாரல் said...

நல்ல குறிப்பு ஆசியா..

Priya said...

Naan appadiye snacks madhri saapiduvene, super fries akka.

கோவை2தில்லி said...

இன்று இதை செய்து பார்த்தேன். நன்றாக இருந்தது. பகிர்வுக்கு நன்றிங்க.

Asiya Omar said...

கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.வருகைக்கும் மகிழ்ச்சி.

கோவை2தில்லி செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.