Friday, February 8, 2013

மீன் குருமா - / Fish Kurma / Two In One



இந்த குருமாவிற்கு முள் அதிகமில்லாத மீன் துண்டுகள் சேர்த்து செய்தால் அருமையாக இருக்கும்.சீலா,வாவல்,பாறை,ஹமூர் மீன் பொருத்தமாக இருக்கும்.

 தேவையான பொருட்கள்;
மீன் துண்டுகள்- 300 கிராம்
உருளைக்கிழங்கு - சிறியது 2
பச்சை மிளகாய் -2
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி -2
மல்லி,புதினா,கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 +2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
பட்டை - மிகச் சிறிய துண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 +1/2  டீஸ்பூன்
மல்லித்தூள் - 2-3 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் 3 டேபிள்ஸ்பூன் + முந்திரிபருப்பு 4 -அரைக்கவும்.
உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 3-4 நபர்கள்

செய்முறை:

 மீன் துண்டுகளை சுத்தமாக கழுவி தண்ணீர் வடிகட்டவும்.

 மீனுடன் மஞ்சள் தூள் கால்டீஸ்பூன்,மிளகாய்த்தூள் அரைடீஸ்பூன்,தேவைக்கு உப்பு சேர்த்து விரவி அரை மணி நேரம் வைக்கவும்.

 ஒரு நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் விட்டு நன்கு காய்ந்து வரும் பொழுது மீன் போட்டு நன்கு வேகும் படி மீனை பொரித்து எடுக்கவும்.

 உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக்கி வைக்கவும்.
 கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விடவும், சோம்பு பட்டை போடவும்,வெடிக்கும் பொழுது கருவேப்பிலை பச்சை மிளகாய் போடவும்.

நறுக்கிய வெங்காயம்  போட்டு சிவற வதக்கவும், இஞ்சி பூண்டு சேர்க்கவும்.வதக்கவும்.

 நறுக்கிய தக்காளி சேர்க்கவும், சிறிது உப்பு சேர்க்கவும்.மூடி போட்டு சிறிது வதங்க விடவும்.


தக்காளி நன்கு  வதங்கிய பின்பு மிளகாய்த்தூள்,மல்லித்தூள் சேர்க்கவும்.

 நன்கு ஒரு சேர வதக்கவும்.

 ஒரு கப்  - ஒன்னரை கப் தண்ணீர் சேர்க்கவும். நன்கு கொதிக்க விடவும்.மசாலா வாடை அடங்கவும்.

 நறுக்கிய  வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்க்கவும்.ஒரு சேர கொதிக்கட்டும்.

 அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்.அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க வைக்கவும்.

 நறுக்கிய மல்லி,புதினா சேர்க்கவும்.உருளைக்கிழங்கு குருமா  ரெடி.

விரும்பினால் பிடிக்காதவர்களுக்கு உருளைக்கிழங்கு மட்டும் போட்டு ரெடியான பின்பு எடுத்து வைத்துக் கொள்ளலாம். எனக்கு தெரிந்த சில குடும்பங்களில் கணவர் அசைவம்,மனைவி சைவம் என்று இருக்காங்க, அவங்களுக்காக இந்த டிப்ஸ். அதனால் தான் இந்த குருமாவிற்கு டூ இன் ஒன் என்று சொல்லியிருக்கிறேன்.

 ரெடியான குருமாவில் பொரித்த மீனை போடவும்.உப்பு சரிபார்க்கவும்.

 சேர்ந்து கொதிக்கட்டும்.சிம்மில்  இரண்டு நிமிடம் மூடி வைக்கவும்.


 அடுப்பை அணைக்கவும். பரிமாறவும்.
சுவையான மீன் குருமா ரெடி.
 ப்லைன் ரைஸ், சப்பாத்தி,ஆப்பத்துடன் பரிமாறலாம்.

18 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

...ஸ்... யப்பா... (படங்களே...!)

Sangeetha Nambi said...

Wow! Never tried kurma using fish...
http://recipe-excavator.blogspot.com

அமைதிச்சாரல் said...

நல்லாருக்கு ஆசியா..

ஸாதிகா said...

டூ இன் ஒன்னா?அருமையாக உள்ளது.அதென்ன உருளைக்கிழங்கு போட்ட கிரேவி ஒரு கலராகவும் மீன் சேர்த்த பின் வேறு கலராகவும் உள்ளது?

Jaleela said...

ம்ம் நாவூறுது

Vimitha Anand said...

Kurma with fish. kandippa try panren

Meena Selvakumaran said...

I love to have with ,nice clicks

மாதேவி said...

எங்கள் வீட்டில் உருளைக் கிழங்குதான்.

Asiya Omar said...

நன்றி தனபாலன் சார்.

சங்கீதா மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

ஸாதிகா கருத்திற்கு மிக்க நன்றி.கலர் வித்தியாசமா? அதன் தொடர்ச்சி தானே,மீன் போட்ட பின்பு கொஞ்சம் திக் ஆன குருமாவை,சுற்றி வழித்து விட்டு சிறிது தண்ணீர் சேர்த்து சிம்மில் வைத்து சரி செய்தேன்,அவ்வளவே.

ஜலீலா கருத்திற்கு மிக்க நன்றி.

Asiya Omar said...

விமிதா மிக்க நன்றி.

மீனா மிக்க நன்றி.

அனைவரின் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி.

S.Menaga said...

அம்மா இதே போல நெத்திலி மீனில் குருமா செய்வாங்க,உருளை சேர்க்க மாட்டாங்க....ரொம்ப பிடிக்கும்.உங்க குருமாவை பார்க்கும் போது செய்து சாப்பிடனும் போல இருக்கு...

athira said...

சூப்பரா இருக்கு ஆசியா.. நாளைக்கு செய்ய யோசிக்கிறேன்ன்.. இதே முறைதான் நாங்களும் செய்வோம், தக்காழிக்குப் பதில் பழப்புளி விடுவோம், தேங்காய் சேர்க்க மாட்டோம்.. நாளை தேங்காய் அரைத்து சேர்த்து செய்துபார்க்கிறேன்.

Divya Pramil said...

Wow super kurma I make kurma with fish but its different yours looks so delicious akka :)

vanathy said...

Super. Very cute photos.

faiza kader said...

Yummy, Thanks for linking this recipe to my event and using the logo. Expecting more recipes from you

கோமதி அரசு said...

ஆசியா, நீங்கள் அழைத்த தொடர் அழைப்புக்கு எழுதி இருக்கிறேன்.
நேரம் இருக்கும் போது பாருங்கள்.
நன்றி தொடர் அழைப்புக்கு.

Asiya Omar said...

கருத்து தெரிவித்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

angelin said...

எங்க வீட்டில் இம்முறை கண்டிப்பா உபயோகப்படும் ஆசியா .பகிர்வுக்கு நன்றி