Saturday, February 2, 2013

ஃப்ரைட் சிக்கன் டிக்கா / சிக்கன் டிக்கா ரோல் / Fried Chicken Tikka & Roll



 சிக்கன் டிக்காவை எப்பவும் கிரில் அல்லது பார்பிகியூ செய்து எடுப்பது தான் என்னுடைய வழக்கம் ஒரு சில சமயம் அவசரத்திற்கு இப்படி சாலோ ஃப்ரை செய்து எடுப்பேன்,சூப்பராக அதே மணம் ருசியுடன் இருக்கும்.நீங்களும் இப்படி ஈசியாக செய்து பரிமாறலாம்.சில்லி பவுடர் கரம் மசாலா பதில் ரெடிமேட் சிக்கன் டிக்கா மசாலா அல்லது சிக்கன் 65 மசாலாவும் உபயோகிக்கலாம்.ஆனால் கசூரி மேத்தி நிச்சயம் சேர்க்க வேண்டும் .அப்பொழுது தான் அந்த மணம் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்;
எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 300 கிராம் (சின்னதாக ஒன்பது சதுர துண்டுகள்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
லெமன் ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன்
ஃப்ரெஷ் கெட்டி தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
ப்லாக் சால்ட் அலது சாட் மசாலா- கால் டீஸ்பூன் ( கை வசம் இருந்தால்)
கசூரி மேத்தி பவுடர் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் .

சிக்கன் டிக்கா ரோலுக்கு - சப்பாத்தி 2, மையோனைஸ் - 1 -2 டீஸ்பூன்

பரிமாறும் அளவு - 2 நபர்

செய்முறை:
கட் செய்த சிக்கனை நன்கு அலசி தண்ணீர் வடிகட்டிக் கொள்ளவும்.அத்துடன் எண்ணெய் தவிர  மேற் சொன்ன பொருட்கள் அனைத்து சேர்த்து கலந்து குறைந்தது 1-2 மணி நேரம் ஊறவைக்கவும்.


 ஒரு ஃப்ரை பானில் எண்ணெய் நன்கு சூடேற்றவும். சிக்கனில் தண்ணீர் ஊறியிருந்தால் வடித்து விட்டு சேர்க்கவும்.ஒரு பக்கம் லேசாக வெந்து சிவற ஆரம்பிக்கவும் திருப்பி போட்டு மறுபுறம் வெந்த பின்பு எடுக்கவும்.

 சுவையான ஃப்ரைட் சிக்கன் டிக்கா ரெடி.

 இதனை கட் செய்த வெங்காயம்,வெள்ளரி,தக்காளி,கேரட்,லெட்டூஸ் எலுமிச்சையுடன் பரிமாறலாம்.
டிக்கா ரோல் செய்ய ரெடியான சிக்கனை  இப்படி சிறிய துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்.
 அப்படியே சப்பாத்தியில்,சிறிது மையோனைஸ் தடவி சிக்கன் டிக்காவை  சுற்றி பரிமாறினால் சிக்கன் டிக்கா ரோல் ரெடி.ரோலை கட் செய்தும் இப்படி பரிமாறலாம்.

 இந்த குறிப்பை Valentine's Day Recipe Contest  @ Priya's Versatile Recipes  அனுப்புகிறேன்.

6 comments:

Meena Selvakumaran said...

healthy and delicious.easy for doing a very small batch.love it

faiza kader said...

romba easy ya seithu kaathi irukega.. super..

திண்டுக்கல் தனபாலன் said...

Super...

ஸாதிகா said...

அருமையாக செய்து ஆட்டி இருக்கீங்க தோழி.சுலபமாகவும் இருக்கு.

Asiya Omar said...

மிக்க நன்றி மீனா.

மிக்க நன்றி ஃபாயிஸா.

மிக்க நன்றி தனபாலன் சார்.

மிக்க நன்றி தோழி ஸாதிகா.

Jaleela Kamal said...

நான் கிரில்லில் செய்வதை விட இப்படி தான் பொரித்து சாண்ட்விச் போல் ஆபிஸ் க்கு எடுத்து வருவது.
ஹனீபுக்கு ரொம்ப் பிடிக்கும்