Tuesday, February 5, 2013

இடியாப்பம் முட்டை டோஸ்ட் / கொத்து இடியாப்பம் / Idiyappam Egg Toast / Kothu Idiyappam

 தேவையான பொருட்கள்;
இடியாப்பம் - 2
முட்டை - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய பச்சை மிளகாய் - 1 (விரும்பினால்)
நறுக்கிய மல்லி இலை - சிறிது
மிளகுத்தூள் - அரைடீஸ்பூன்
எண்ணெய் நெய் கலவை - 2-4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 1-2 நபர்.

செய்முறை:
ஒரு மீடியம் சைஸ் இடியாப்பத்தை மூன்றாக அல்லது நான்காக கட் செய்து கொள்ளவும்.



 முட்டை, நறுக்கிய வெங்காயம்,மல்லி இலை,மிளகுத்தூள் ,உப்பு சேர்த்து ஒரு பவுலில் கலந்து கொள்ளவும்.

இடியாப்ப துண்டுகளை முட்டை கலவையில் டிப் செய்யவும்.

 வாணலியில் எண்ணெய் நெய் கலவையை சூடு செய்யவும்.டிப் செய்த இடியாப்ப துண்டுகளை போடவும்.அடுப்பை மீடியமாக வைக்கவும்.
வெந்த இடியாப்பத்தை  திருப்பி போடவும்.அடுப்பை குறைத்து விடவும்.இடியாப்பத்தில் ஊறிய முட்டை நன்கு வேக வேண்டும்.லேசான பொன்னிறமானதும் எடுக்கவும்.


சுவையான இடியாப்பம் முட்டை டோஸ்ட் ரெடி. 
குழந்தைகளுக்கு இப்படி செய்து லன்ச் பாக்ஸில் கொடுத்து அனுப்பலாம்,நாமும் மாறுதலாக இப்படி செய்து கொடுத்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம்.

கொத்து பரோட்டா மாதிரி கொத்து இடியாப்பமும் செய்யலாம்.முட்டை கலவையில் இடியாப்பத்தை உதிர்த்து போட்டு தவா சூடேறியதும் எண்ணெய் நெய் கலவை விட்டு அதில் ரெடி செய்த இடியாப்ப கலவையை போட்டு தோசை கரண்டியால் கொத்தி விட்டு வெந்தவுடன் எடுத்து பரிமாறலாம்.



சூடாக சூப்பர் சுவையுள்ள கொத்து இடியாப்பம்  ரெடி.வேறு மசால் பிரியப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.


முட்டை இடியாப்பம் குறிப்பை பார்க்க இங்கே கிளிக்கவும்.



Sending this to

Traditional & Native Recipes @ Sara's Tasty Buds 
Valentine's Day Recipe Contest  @ Priya's Versatile Recipes.



11 comments:

faiza kader said...

ithu romba pudusa irukey.. idiyappathai biryani thaan seithu iruken.. nalla iruku..

Sharanya palanisshami (sara's TASTY BUDS) said...

it must be delicious , will try soon . Thanks for linking to my event akka........

Meena Selvakumaran said...

looks yummy , shld try once.

Vimitha Anand said...

combination vithyasama irukku. seekram try panren

திண்டுக்கல் தனபாலன் said...

புதிய ஐட்டம்... நன்றி...

Mahi said...

Nice one Asiya Akka! I would love to add some masalas with it! :)

Saraswathi Tharagaram said...

I heard about lot of sevvai recipes but muttai idiyappam is new and interesting Asiya..You always rock..

Saras
Dish In 30 Minutes - Soups & Salad

Jaleela said...

இடியாப்பம் டோஸ்ட் ரொம்ப நல்ல இருக்கு

மாதேவி said...

நன்றாக இருக்கிறது ஆசியா.

இடியாப்பக் கொத்து நம்நாட்டில் பிரபலம்.

Divya Pramil said...

Asathal recipe akka :) Kalakringa !!!

V Kamalathasan said...

திருமதி உமர் அவர்களே நான் எனது மகளுக்கு (14 வயது) இதை செய்து கொடுத்தேன். அன்று இரவு முழுவதும் ஒரே மகிழ்ச்சியாக இருந்தாள். ஒரு உணவு இப்படி மகிழ்ச்சி கொடுக்குமா என நான் ஆச்சரியம் அடைந்தேன். மகளுக்கு ஆரோக்கியமான வீடு சாப்பாடு உண்ட திருப்தி. என்னுடைய மனைவியும் பாராட்டினார். வீட்டில் உள்ளவற்றை வைத்து இப்படி செய்யலாம் என மகிழ்ச்சி.
வை. கமலதாசன்,
இலங்கை.