Monday, February 11, 2013

காயல் ஸ்பெஷல் நட்ஸ் & மட்டன் பிரியாணி / Kayal Special Nuts & Mutton Briyani


 திருமதி ஃபாயிஜா காதர் இந்த பிரியாணி குறிப்பை என்னுடைய  Feast of Sacrifice Event - டிற்கு லின்க் கொடுத்து இருந்தாங்க.செய்து பார்க்க வேண்டும் என்ற லிஸ்ட்டில் இருந்தது.இந்த வாரம் முயற்சித்தேன்.மிக அருமையாக வந்தது. டேஸ்ட் ரொம்ப ரிச். பொதுவாக எங்க ஊர் பக்கம் பிரியாணியில் நட்ஸ் எல்லாம் சேர்ப்பதில்லை.சிம்பிளாக இருக்கும். இந்த பிரியாணியில் ரம்பை இலை சேர்ப்பது மிக முக்கியம் என்று சொன்னாங்க.
எப்படியிருக்கும்னு தெரியாதவங்களுக்கு இதோ அதன் படம்.


தேவையான பொருட்கள்:
பாஸ்மதிஅரிசி ‍ - 1/2கிலோ
பல்லாரி ‍வெங்காயம்-  1/4கிலோ
சிறிய தக்காளி ‍-  2
பச்சை மிளகாய் - 9- 12
மிள‌காய்த்தூள் ‍ - 1 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் தலா 3
ரம்ப இலை-  ‍ 2 துண்டு (நறுக்கியது கொஞ்சம்)
எலுமிச்சைப்ப‌ழ‌ம் ‍-  1
நெய் ‍ - 100 மில்லி
தேங்காயெண்ணெய் 50 மில்லி 
உப்பு ‍ - தேவைக்கு.

 தயிர் ‍ - 1/2 கப்
‍மட்டன் ‍-  1/2 கிலோ
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1/4கப்
கொத்தமல்லி, புதினா ‍ சிறிய கட்டு
அரைக்க:
தேங்காய்த் துருவல்  2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால் கால் முறி கூட சேர்க்கலாம்.)
க‌ச‌க‌சா ‍ 10கிராம்
முந்திரி 10கிராம்
பாத‌ம் 10கிராம்
பிஸ்தா 10கிராம்
 நட்ஸ் ஊறவைத்து தோல் நீக்கி எடுக்கவும்,அத்துடன் கசகசா, தேங்காய்த்துருவல் 2 டேபிள்ஸ்பூன் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். நட்ஸ் நம்ம டேஸ்டிற்கு தக்கபடி குறைத்து கூட போடலாம்.

சுத்தம் செய்த மட்டனுடன்  கால் கப் தயிர், ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு,தேவைக்கு உப்பு  சேர்த்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.ஊறிய  மட்டனை குக்கரில் 4 விசில் வைத்து வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொண்டேன்.

பிரியாணி செய்யும் பாத்திரத்தில் 50 மில்லி நெய், 50 மில்லி தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.காய்ந்து வரும் பொழுது பட்டை,கிராம்பு,ஏலக்காய்,ரம்பை இலை தலா 2  சேர்க்கவும்.நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்,நன்கு வதக்கவும்.
 நன்கு வதங்கியதும் ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு,மீதி கால் கப் தயிர் சேர்க்கவும்.

 நன்கு வதக்கவும்.

 தக்காளி,பச்சை மிளகாய்,நறுக்கிய மல்லி புதினா சேர்க்கவும்.சிறிது உப்பு போட்டு மசியவிடவும்.
 வேகவைத்த மட்டன்  அதனில் இருக்கும் தண்ணீருடன் சேர்க்கவும்.அல்லது நேராகவே ஊறிய மட்டனும் சேர்க்கலாம். வேக நேரம் ஆகும் என்பதால் ஊறிய மட்டனை தனியாக வெந்து சேர்த்து விட்டேன்.
 அரைத்த விழுது,மிளகாய்த்தூள் சேர்க்கவும்.கறியை பிரட்டி ஒரு சேர வேகவிடவும்.

 கறி நன்கு வெந்து எண்ணெய் மேலே வரும், அடுப்பை குறைத்து மூடி போடவும்.எலுமிச்சை பழம் பிழியவும்.அடியில் அரைத்து விட்ட நட்ஸ் தேங்காய் அடியில் பிடிக்கும் ,பார்த்து கிளறிவிடவும்.தேவைக்குஅரை -1 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.உப்பு சரி பார்த்து கொள்ளவும்.

சோறு தனியாக தாளிக்க:

 வேறு ஒரு பாத்திர‌த்தில் மீதி 50 மில்லி நெய் ஊற்றி காய்ந்த பின்பு கிராம்பு, பட்டை,
ஏலம் தலா 1 சேர்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வ‌த‌க்க‌வும். அரிசிக்கு ச‌ம‌மாக‌
த‌ண்ணீர், வைத்து கொதிக்க‌ வைக்க‌வும். இதில் ஊற‌ வைத்த‌ அரிசியினை
சேர்க்க‌வும். தேவையான‌ அள‌வு உப்பு சேர்த்து 3/4பாக‌ம் வேக‌ வைத்து
இற‌க்க‌வும்.மல்லி புதினாவும் சிறிது சேர்க்கலாம். பிரியாணிக்கு வேண்டிய சோறு தாளித்து ரெடியாகிவிட்டது.
ரெடியான கறியில்  தாளித்த சோறை தட்டவும்.
 ஒரு போல் பரத்தி விடவும்.

 மூடி போட்டு அடுப்பை மிக சிம்மில் வைத்து 20 நிமிடம் தம் போடவும்.
 திறந்து,ஒரு போல் பக்குவமாக  பிரட்டி விட்டு பரிமாறவும்.


கமகமக்கும் காயல்பட்டிணம் ரிச் நட்ஸ் மட்டன் பிரியாணி ரெடி.

சூப்பர் சுவை. பகிர்வுக்கு மிக்க நன்றி ஃபாயிஜா.


16 comments:

faiza kader said...

adukul biryani ready ya? super ra iruku..ahani biryani nu thaan ithanai solluvaga.. enga oru special intha biryani... amma thaan intha adikadi seivaga.. ippa neega seitha pinbu ennakum aasai vanthu vithathu.. nallai seiya poren..

thx akka seithu parthu post tha poothathuku..

vanathy said...

super biryani. I will call you biryani queen from now on.

Asiya Omar said...

நன்றி ஃபாயிஜா கருத்திற்கு மகிழ்ச்சி.

அய்யோ! வானதி யோசிக்காமல் சொல்லிவிட்டு பின் வருத்தப்படாதீங்க! ஹா ஹா.. குயினாவது கிங்காவது..இன்னும் நான் ஒரு கத்துக் குட்டி தான்..வீட்டில் செய்வதெல்லம் போஸ்ட் செய்வேன்..

ராதா ராணி said...

நட்ஸ் நிறைய சேர்க்கிரதுனால டேஸ்ட்டும் நல்லா இருக்கும்..செய்முறை ரொம்ப விளக்கமா படத்தோட நல்லா சொல்லியிருக்கீங்க ஆசியா.. கண்டிப்பா இதை நான் செய்வேன்..படத்தில் பிரியாணி சாப்பிட அழைப்பு விடுது...:)

ஸாதிகா said...

கிட்டதட்ட நான் செய்வதைபோல்தான் செய்து இருக்கீங்க ஆசியா.முன்னர் பிரியாணிக்கு பாதாம் முந்திரி அரைத்து சேர்த்தேன்.சுவை அதிகரித்தாலும் ஒரு வித பிசு பிசுப்பு தனமை இருப்பதால் இப்போதெல்லாம் சேர்ப்பதில்லை.

Asiya Omar said...

மிக்க நன்றி ராதா.உங டேஸ்டிற்கு தக்கபடி செய்து பாருஙக.ரொம்ப ரிச்சாக இருக்கும்.

கருத்திற்கு நன்றி ஸாதிகா.ஆமாம் தோழி,பிசி பிசுவென்று மசுமையாகத்தான் இருந்தது.எப்பவாவது செய்து சாப்பிடலாம்.மற்ற பிரியாணி போல் அதிகம் சாப்பிட முடியாது.

Vimitha Anand said...

Aha arumaiyaana biryani... so tempting

Asiya Omar said...

விமிதா மிக்க நன்றி.செய்து பாருங்க இந்த பிரியாணியின் மணம் ஆஹான்னு சொல்ல வைக்கும்.கை,வாய் எல்லாம் மணக்கும்.மீதியை மறுநாள் ஓவனில் வைத்து சூடு செய்து சாப்பிடும் பொழுது அடிபிடின்னு போயிடுச்சு.

Vijayalakshmi Dharmaraj said...

Nice...

JC STAR said...

Asiyakka chancey illa appadiae vanthuduchu enga ooru briyani umma ooruku poirkumbothu briyani saapda aasai but enga tedium kidaikala receipe.apram na oorla pooi taan saapten en thozhi kalyanathil.
nalla velaiyaga poateenga inniku varaikum adthu terinjavanga marg eppavarum nu think pannitu irunthen.evlo taan receipe senjaalum native receipe na special taan.
sukran akka.
seekramae senju result solren in sha allah.

regards,
mymoon raheema seyed

Asiya Omar said...

விஜி மிக்க நன்றி.

மைமூன் ரஹீமா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.செய்து பாருங்க..

Savitha Ganesan said...

Paarkkave romba nalla irukku akka.
Try panren.

Savitha Ganesan said...

Akka,indha sunday,biriyani try pannen.Romba nalla vanduchi.Soon en blog la post panni link anupparen paarunga.Thanks for sharing.

Savitha Ganesan said...

Hers the link for the biriyani,I prepared from your space.
http://savithakitchen.blogspot.com/2013/02/kayalpatnam-special-mutton-biriyani.html

Asiya Omar said...

மிக்க நன்றி சவீதா,செய்து பகிர்ந்து பின்னூட்டத்தில் கருத்து தெரிவித்தமைக்கு மகிழ்ச்சி.

Anonymous said...

Salaam...seymurai romba azhaka koduthirikireenge....Romba thankx