Wednesday, February 13, 2013

மூன்று வருட நிறைவு / My Third Blog Anniversary - Chocolate Pudding With Whipped Cream


 சமைத்து அசத்த ஆரம்பித்து விளையாட்டாய் மூன்று வருடம் பறந்தோடிவிட்டது,  புதுசு புதுசாக முயற்சி செய்வது எனக்குப் பிடிக்கும், தவிர வீட்டில் செய்யும் சமையல் எதுவாயினும்  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன், அவ்வளவே!

விருந்து,ரெஸ்ட்டாரண்ட் என்று எங்கே வெளியே சாப்பிட்டாலும் ஏதாவது வித்தியாசமாக தெரிந்தால் செய்து பார்த்து விடுவேன்.என் குடும்பத்தார், நட்பு வட்டத்தில் கேட்டு பகிர்வதை செய்து பார்த்து  குறிப்பு கொடுப்பது வழக்கம்.
ஆனால் பாருங்க, சமையல் ப்ளாக் வச்சிருக்காங்க, சூப்பராக சமைப்பாங்கன்னு எதிர்பார்த்தால் அதற்கு நான் பொறுப்பில்லைபா.ஒரு சமயம் நான் செய்த சமையலே எனக்கு மறந்து விடும், எங்க வீட்டில் ஏதாவது நான் செய்ததை நல்லாயிருந்தது என்று திரும்ப செய்ய சொன்னால் நானே என் ப்ளாக்கை பார்த்து தான் சமைப்பேன்..ஹைய்யோ ஹைய்யோன்னு நீங்க சொல்றது  கேட்குது,என்ன செய்வது..இது தான் உண்மை.

என்னைத் தவிர யார் சமைத்தாலும் அதனை நான் மிக ருசித்து சாப்பிடுவேன், முக்கியமாக வெஜ் சமைச்சு தந்தாங்கன்னா கொண்டாட்டம் தான். சமையலின் கஷ்ட நஷ்டம் தெரியும் ஆகையால் யார் சமையலையும் அதிகமாக விமர்சிக்க பிடிக்காது,பாராட்ட மட்டுமே பிடிக்கும்.
சமையல் செய்வது கஷ்டம்னு நினைத்தால் கஷ்டம், சுலபம்னு நினைத்தால்  மிகச் சுலபமே.பொருட்கள் தயாராய் இருந்து மனதும் இருந்தால் யார் வேண்டுமானாலும் அற்புதமாய் சமைக்கலாம்.இன்றைய காலகட்டத்தில் சமையல் குறிப்பிற்கு பஞ்சமில்லை, புத்தகங்கள், வானொலி,தொலைக்காட்சி, இணையம் என்று எதனை திறந்தாலும் சமையல்  பகிர்வு இல்லாமல் இல்லை.அதனால் என்னைப் பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் சமைத்து அசத்தலாம்.

இனி என் இன்றைய ஸ்பெஷல் குறிப்பிற்கு வருவோம்.நீண்ட நாட்களாக செய்து பார்க்க நினைத்து சென்ற வாரம் செய்ய முடிந்தது..

சாக்லேட் புட்டிங் வித் விப்ட் கிரீம் /  Chocolate Pudding with Whipped Cream

தேவையான பொருட்கள்;
கெட்டியாக காய்ச்சிய பால் - அரை லிட்டர்
கோகோ பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்
கார்ன் ஃப்லோர் - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 150 கிராம்
வெண்ணெய் - 50 கிராம்
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
உப்பு - பின்ச்.

விப்பிங் கிரீம் செய்ய :
இன்ஸ்டெண்ட் டெய்ரி விப் - 40 கிராம்
காய்ச்சிய பால் - 100 - 125  மில்லி
அலங்கரிக்க - செர்ரி பழங்கள்

பரிமாறும் அளவு - 6 நபர்கள்.

செய்முறை:
தேவையான பொருட்களை சரியான அளவில் ரெடி செய்து  தயாராக வைக்கவும்.


 பாலைக் கெட்டியாக  காய்ச்சி எடுக்கவும்.
 ஒரு அடிகனமான பாத்திரத்தில் முதலில் ஒரு டீஸ்பூன்  வெண்ணெய் சேர்க்கவும்,உருக விடவும்,இது அடி பிடிப்பதை தவிர்க்கும்.அடுப்பை அணைக்கவும்.
அத்துடன் சர்க்கரை,கோகோ பவுடர்,கார்ன் ஃப்லோர்,கால் -அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும்.
அடுப்பில் மீடியம் லோ ப்லேமில் வைத்து சிறிது கெட்டியாகும் படி செய்யவும்.கெட்டியாகி வரும் வேலையில் காய்ச்சிய பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கைவிடாமல் கலந்து வரவும்.
நன்கு திக்காக வரும் பொழுது வெண்ணெய்,வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைக்கவும்.பக்குவமாக செய்ய வேண்டும்.கட்டி தட்டி உருண்டையாக இடை இடையே வரலாம்.அதனால் அதனை வடிகட்டி செட் செய்வது நல்லது.
ரெடியான புட்டிங்கை செட் செய்ய ஒரு பவுலில் வடிகட்டவும்,கட்டிகள் இருந்தால் கரைத்து விடவும்.என்னால் ஸ்டெப் ஸ்டெப் படங்கள் இங்கே பகிர முடியலை,  கைவிடாமல் பக்குவமாக செய்யவேண்டும் என்பதால் புட்டிங் ரெடியான படம் தான் பகிர முடிந்தது.


 ஃப்ரிட்ஜில் ரெடியான புட்டிங்கை 2 மணி நேரம் வைக்கவும்.

இனி விப்பிங் கிரீம் செய்ய வேண்டும்.

 ஒரு ஆழமான பவுலில் இன்ஸ்டெண்ட் டெய்ரி விப் சேர்த்து பாலையும் சேர்க்கவும்.
 நன்கு எலெக்ட்ரிக் பீட்டரால் அடிக்கவும்,குறைந்தது ஐந்து நிமிடம் அடித்த பின்பு தான் வெண்ணெய் போல் திக்காக திரண்டு வரும்.
இப்பொழுது விப்பிங் கிரீம் ரெடியாகிவிட்டது.

 இனி ரெடியான சாக்லேட் புட்டிங்கை ஒரு பவுலில் 3 ஸ்கூப் எடுத்து வைக்கவும்,மேலே ஒரு ஸ்கூப் விப்பிங் கிரீம் வைக்கவும், செரி அல்லது ஸ்ட்ராபெர்ரி வைத்து அலங்கரித்து பரிமாறவும்.
சுவையான சாக்லேட் புட்டிங் வித் விப்ட் கிரீம் ரெடி.





 சாக்லேட் புட்டிங் வித் விப்ட் கிரீம் ரெடி, புட்டிங் எடுங்க கொண்டாடுங்க.டேஸ்ட் சூப்பராக இருந்தது,வாயில் போட்டால் அப்படியே கரைந்து போகும்..
என் வலைப்பூ வந்து தவறாமல் ஊக்கம் தந்து கருத்து தெரிவித்த அனைத்து அனபான நட்புள்ளங்களுக்கும் இத்தருணத்தில் என் அன்பான நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். மிக்க நன்றி,மகிழ்ச்சி.


26 comments:

angelin said...

மூன்றாம் அகவைக்கு வாழ்த்துக்கள் ஆசியா ...புட்டிங் அருமை என் மகளுக்கு செய்யறேன் இதைபார்த்து
.பகிர்வுக்கு நன்றி

Meena Selvakumaran said...

congrats on 3rd blog anniversary,tnxs for sharing u r thoughts, yummy pudding too.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ருசியான பகிர்வு. பாராட்டுக்கள்.

மூன்றாம் ஆண்டுக்கு அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

சே. குமார் said...

அக்கா..

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு வாழ்த்துக்கள்....


இன்னும் நிறைய குறிப்புகள் தாங்கள் கொடுக்க வேண்டும்...

வாழ்த்துக்கள் அக்கா.

Mahi said...

வாழ்த்துக்கள்! புட்டிங் கண்ணைக் கவர்கிறது. ஹேப்பி ப்ளாகிங் ஆசியாக்கா!

Divya Pramil said...

Congrats akka :) 3 years is just an awesome period :) Pudding looks super scrumptious... All the best akka.. Nenga samayala kiladidhan but romba humble a ila nu potrukinga, but u r an all rounder :) Keep rocking akka :)

இளமதி said...

மூன்று வருடங்களை நிறைவு செய்திட்டீர்களா...அசத்தல் அசுர வேகம்தான்...

வாழ்த்துக்கள் ஆசியா! இன்னும் பல பதிவுகளையும் பல ஆண்டுகளையும் தந்திட மனதார வாழ்த்துகிறேன்.

புடிங் வித்த்யாசமாக இருக்கிறது. செய்து பார்க்க வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி!

athira said...

சூப்பரா வந்திருக்கு..

மூன்றாண்டுகளுக்கு வாழ்த்துக்கள் ஆசியா.. இன்னும் பல ஆண்டுகள் பல சுவையான குறிப்புக்கள் தரவேண்டி வாழ்த்துகிறேன்ன்.

faiza kader said...

வாழ்த்துக்கள்.... innum innum sirapai thodarthu padivuhal pooda வாழ்த்துக்கள்....

கோமதி அரசு said...

மூன்றாம் வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள். நான்காம் வருட ஆரம்பமும் அசத்தல்.

தொடர்ந்து அசத்த வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்...

கோவை2தில்லி said...

மூன்றாம் வருட நிறைவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஒவ்வொரு வரியையும் ரசித்தேன். அவை அனைத்துமே உண்மை தான்...

சுவையான புட்டிங் சூப்பர்...

Princy Vinoth said...

congrats on the 3rd anniversary.lovely pudding.

Jaleela said...

மூன்று வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள்.

புட்டிங் ரொம்ப நல்லஇருக்கு.

S.Menaga said...

வாழ்த்துக்கள் அக்கா!! புட்டிங் ரொம்ப நல்லாருக்கு..

Asiya Omar said...

ஏஞ்சலின் முதல் வாழ்த்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

மீனா மிக்க நன்றி.மகிழ்ச்சி.

வை.கோசார் பாராட்டிற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

குமார் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி.

Asiya Omar said...

மகி மிக்க நன்றி.மகிழ்ச்சி.

திவ்யா மிக்க நன்றி மகிழ்ச்சி.

இளமதி மிக்க நன்றி,மகிழ்ச்சி.செய்து பாருங்க.

அதிரா வாழ்த்திற்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி.

ஃபாயிஜா மிக்க நன்றி மகிழ்ச்சி.

Asiya Omar said...

கோமதியக்கா அசத்தலான வாழ்த்திற்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி.

வாழ்த்திற்கு மிக்க நன்றி த்னபாலன் சார்.வருகைக்கு மகிழ்ச்சி.

கோவை2தில்லி வாசித்து ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி,நன்றி.

ப்ரின்ஸி விநோத் மிக்க நன்றி,மகிழ்ச்சி.

ஜலீலா வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

மேனகா கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி.

Priya said...

Happy blog annversary Akka, super droolworthy dessert...Thanks a lot for yur beautiful entries akka,thanks a ton again for ur continous support Akka.

ஸாதிகா said...

வாழ்த்துக்கள் தோழி.வலையுலகில் மேலும் சிறப்படையப் வாழ்த்துக்கள்.

புட்டிங் அருமையாக வந்துள்ளது.பார்க்கவே அழகாக உள்ளது.விருந்தோம்பலுக்கு எற்றது.

Asiya Omar said...

மிக்க நன்றி ப்ரியா.வாழ்த்திற்கு மகிழ்ச்சி.

மிக்க நன்றி ஸாதிகா,வாழ்த்திற்கு மகிழ்ச்சி.

faiza kader said...

Thx for linking.

Savitha Ganesan said...

Romba nalla irukku akka pudding.# rd blog anniversary ku vaazhthukkal.

Asiya Omar said...

மிக்க நன்றி ஃபாயிஜா.

மிக்க நன்றி சவீதா.

Amy said...

Happy blog annivasary!Keep it up!
this pudding looks delicious!
thanks a lot for sharing with my event...

Asiya Omar said...

Thanks Amy For your wishes and lovely comment.