Sunday, February 17, 2013

முள்ளங்கி பருப்பு / Radish Dal

தேவையான பொருட்கள்;
முள்ளங்கி - 3
துவரம் பருப்பு - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள், மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன்
தக்காளி சிறியது - 1
பெரிய வெங்காயம்  -1 அல்லது சின்ன வெங்காயம் 10
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வற்றல் - 1
மல்லி கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு.

 பருப்பை ஊற வைக்கவும்,முள்ளங்கி தக்காளி,வெங்காயம் நறுக்கி கொள்ளவும்.
 ஒரு பாத்திரத்தில் பருப்பு,  வேக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்,விரைவில் வேகவும் பொங்கி வழியாமல் இருக்கவும் சிறிது எண்ணெய் சேர்க்கவும்.
 மூடி கால் மணி நேரம் வேகவைக்கவும், குக்கரில் என்றால் 2 விசில் வைத்தால் போதும்.
 பருப்பு வெந்து நன்கு மலர்ந்து வரும் .
 அத்துடன் நறுக்கிய முள்ளங்கி,வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
 தேவைக்கு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
 முள்ளங்கியும் பருப்பு நன்கு வெந்து வரும்,தேவைக்கு உப்பு சேர்க்கவும்.  நறுக்கிய மல்லி இலை,தேங்காய் துருவல் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.

 ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் காயவிடவும்,கடுகு உளுத்தம் பருப்பு வெடிக்கவும்,வற்றல்,கருவேப்பிலை சேர்க்கவும்,சிறிது நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்,லேசாக சிவறவும் வெந்த பருப்பு முள்ளங்கியில் கொட்டவும்.கலந்து பரிமாறவும்.இது கெட்டியாகவோ அல்லது கொஞ்சம் கூட்டு மாதிரியும் பரிமாறலாம்.


சுவையான முள்ளங்கி பருப்பு ரெடி,
ரசம்,ப்லைன் சாதத்துடன் பரிமாறவும்.

கீழ்கண்ட முள்ளங்கி சமையலை கிளிக் செய்து பார்க்கவும்.

Sending this to Priya's Cooking with Seeds -Dals.


முள்ளங்கி பூண்டு சாம்பார்.

முள்ளங்கி பொரியல் 

முள்ளங்கி கீரை பருப்பு

முள்ளங்கி சிக்கன் தால்ச்சா

17 comments:

Meena Selvakumaran said...

very different dish , love the serving dish.

faiza kader said...

romba arumaiyaga iruku..

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல டிஷ்... நன்றி...

Sangeetha Nambi said...

super'ah irukum pola... Will try this...
http://recipe-excavator.blogspot.com

ராதா ராணி said...

இஞ்சி,பூண்டு சேர்த்து செய்வது புதுசா இருக்கு ... பாசிபருப்பு சேர்த்து தான் இதுவரை செய்துள்ளேன். துவரம் பருப்பில் முதல் முறையாக செய்ய போகிறேன் ஆசியா.. அருமையாக உள்ளது.

இளமதி said...

அருமையான குறிப்பு ஆசியா! துவரம் பருப்பில் முள்ளங்கி சேர்த்து இதுவரை செய்யவில்லை. செய்து பார்க்கணும்.

மண்சட்டியிலா செய்து காட்டி படம் போட்டிருக்கின்றீர்கள்! சூப்பர்..:)

Aruna Manikandan said...

healthy and delicious dal :)

கோவை2தில்லி said...

வித்தியாசமா இருக்கு.

Vimitha Anand said...

Healthy side for chapathis or dosas

S.Menaga said...

இதுப்போல் செய்ததில்லை,நன்றாக இருக்கு...

Priya said...

Chappathikuda supera irrukume intha dal.

ஸாதிகா said...

முள்ளங்கியைப்பிடிக்காதவர்களுக்கு கூட இம்முறையில் செய்தால் பிடித்து விடும் போலும்.

Mahi said...

முள்ளங்கி கொத்து பருப்பு என்று முன்பு ஒரு ரெசிப்பி 'அங்க' குடுத்தீங்களே, அதுவா ஆசியாக்கா இது?

முள்ளங்கி இருக்கு, நாளை செய்து பார்க்கிறேன்.

Asiya Omar said...

கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.

வருகைக்கு நன்றி மகி. இது சிறிய மாறுதலுடன்,அங்கே முள்ளங்கி கீரையுடன், மசூர் தால்,மற்றும் பூண்டு,சீரகம்னு கொஞ்சம் வேற டேஸ்ட் வரும். இது சிம்பிள்..

அமைதிச்சாரல் said...

இன்று லஞ்சுக்கு செஞ்சேன் ஆசியா.. அருமையான ருசி.

Asiya Omar said...

நன்றி சாந்தி, செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மகிழ்ச்சி.முள்ளங்கி சாப்பிடவே மணமாக இருக்கும்..

krish said...

முள்ளங்கி பருப்பு மிகவும் சுவையாக இருந்தது நன்றி