Sunday, February 3, 2013

ஸ்பைசி பெப்பர் ப்ரான் / Spicy Pepper Prawn

ஆங்கில வலைப்பூ  தோழி  பாரதி மை ஸ்பைசி ரெசிப்பி இவெண்ட் நடத்த, அதற்கான  பரிசுத்தொகையை Myntra   
என்ற இந்திய ஆன்லைன் மார்க்கெட் நிறுவனம் ஸ்பான்சர் செய்வதால் ஆன் லைன் ஷாப்பிங்  பற்றி பகிரும் படி கேட்டுக் கொண்டதால் இந்த பகிர்வு.

நான் முன்பு ஆன்லைனில் எதுவும் வாங்கியதில்லை,இப்ப இந்த கணினி உலகில் பார்த்தால் எல்லாம் எளிதாகிவிட்டது, இருந்த இடத்தில் இருந்தே ஒரு போன் அல்லது ஒரு கிளிக் செய்தால் வீடு தேடி நமக்கு தேவையான பொருட்கள் நியாயமான விலையில் கிடைத்து விடுகிறது,அது தெரியாமல் நாம் அலைந்து திரிந்து நேரத்தையும்,உடல் நலனையும், பணத்தையும் வீண்விரயம் செய்கிறோம். மேலை நாடுகளில் இந்த ஆன் லைன் ஷாப்பிங் பிரபலமாகிவிட்டது. இந்தியாவில் இப்பொழுது தான் வளர்ந்து வருகிறது, புதிதாக நாம் எதுவும் முயற்சிக்க முதலில் தயங்குவோம், பின்பு ஒரு முறை வாங்கிப் பார்த்து விட்டால் அதன் எளிமை புரிந்து நாமும் ஆன் லைன் ஷாப்பிங் செய்ய ஆரம்பித்து விடுவோம். என்னுடைய தோழிகள் ஆன்லைனில்  துணிமணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க  ஆரம்பித்து விட்டார்கள். என்னுடைய தயக்கமும் அவர்களைப் பார்த்து இப்பொழுது மாறி வருகிறது.அதற்கான சேவையை நமக்கு அறிமுகப் படுத்தத்தான்  Myntra என்ற நிறுவனம் இந்த ஸ்பான்சரை  மை ஸ்பைஸி ரெசிப்பி  இவெண்ட்டிற்கு வழங்கியுள்ளது.


இனி போட்டிக்கான என் ஸ்பைசி ரெசிப்பி
ஸ்பைசி பெப்பர் ப்ரான்:


தேவையான பொருட்கள்;
இறால் - 1 கிலோ
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - இரண்டு இணுக்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1 (100 கிராம்)
நறுக்கிய பெரிய தக்காளி - 1 ( 100 கிராம்)
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
காஷ்மீரி மிளகாய்த்தூள்- 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
சீரக,பெருஞ்சீரகத்தூள் - தலா அரைடீஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை -சிறிதளவு
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
முதலில் இறாலை 3 தண்ணீர் விட்டு அலசவும்.பின்பு  இறால் ஓட்டை நீக்கி,தலைப்பகுதியை நீக்கி பின்பக்கம் இருக்கும் கருப்பு நரம்பு போன்ற பகுதியை கத்தியால் கீறி விட்டு கையால் எடுக்கவும்.இப்படி சுத்தம் செய்த பின்பு இறாலை பளிச்சென்று மீண்டும் மூன்று தண்ணீர் வைத்து அலசி சுத்தமாக தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.ஒரு கிலோ இறாலை உரித்தால் அரைக் கிலோ தான் இருக்கும்.பின்பு மஞ்சள் தூள்,சிறிது உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்.

இது ஸ்பைசி குறிப்பு என்பதால் நான் அதிகமாக காரம் சேர்த்து செய்து காட்டியிருக்கிறேன்,நீங்கள் உங்கள் ருசிக்கு தக்கபடி காரம் சேர்த்துக் கொள்ளலாம்.முதலில் அடிகனமான கடாயில் எண்ணெய் காயவிடவும்.கடுகு போடவும்,வெடிக்கவும் கருவேப்பிலை சேர்க்கவும், வெடித்து வரும் பொழுது அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வதக்கவும்.பின்பு இறாலை சேர்க்கவும்.


அடுப்பை கூட்டி வைக்கவும்.நன்கு வதக்கி விடவும்.தண்ணீர் விடும்.இப்படி முதலிலிலேயே இறாலை எண்ணெயில் சேர்ப்பதால் தண்ணீர் ஊறி விரைவில் வற்றி விடும்.

 பின்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்.
இறால் ஒரளவு வெந்து தண்ணீர் வற்றி வரும் பொழுது பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி ,பச்சை மிளகாய் சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும். பிரட்டி விடவும்,மூடி போட்டு வெங்காயம்,தக்காளியை வதங்க விடவும்.

நன்கு வதங்கி வரும் பொழுது அந்த சமயம் கரகரவென பொடித்த மிளகுத்தூள் சேர்க்கவும்,அத்துடன் சீரக பெருஞ்சீரகத்தூள் சேர்க்கவும். பிரட்டி விட்டு இறால் கூட்டு நன்கு சுண்டிவரும் வரை அடுப்பில் மிதமான நெருப்பில் வைக்கவும்.
 நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து பிரட்டி விட்டு பரிமாறவும்.
சுவையான ஸ்பைசி பெப்பர் ப்ரான் ரெடி.
இதனை பக்க உணவாக ப்லைன் ரைஸ்,புலாவ், வெஜ்,மட்டன்,சிக்கன்,ஃபிஷ் பிரியாணி,வெரைட்டி ரைஸ்,ஃப்ரைட் ரைஸ் தோசை,ஆப்பம்,சப்பாத்தி,பரோட்டா போன்ற அனைத்து வகைகளுடனும் பரிமாறலாம்.
Sending this to 
My Spice Recipe  
Valentine's Day Recipe Contest  @ Priya's Versatile Recipes 
Traditional & Native Recipes @ Sara's Tasty Buds .
11 comments:

Priya said...

Mouthwatering here,superaa irruku intha pepper prawns Akka..

Naan kuda onlinela konjam porul vanga arambichi irruken.

Premalatha Aravindhan said...

wow delicious recipe,super tempting too...

திண்டுக்கல் தனபாலன் said...

சே... முடியலே... ஸ்ஸ்ஸ்...

ஸாதிகா said...

வாவ்..இன்னிக்கே செய்து பார்க்கப்போகிறேன்.

Sangeetha Nambi said...

OMG ! What a spicy dish... I can feel it from ur click...
http://recipe-excavator.blogspot.com

S.Menaga said...

இதுவரை நான் இறால் சாப்பிட்டதில்லை..உங்க ரெசிபி எப்பவும் சூப்பரா இருக்கும் அக்கா,பொன்னுக்கும்,வீட்டுக்காரர்க்கும் இதுபோல செய்து கொடுக்கிறேன்...

Asiya Omar said...

ப்ரியா மிக்க நன்றி.

ப்ரேமலதா முதல் வருகைக்கு மிக்க நன்றி.

தனபாலன் சார் மிக்க நன்றி.

ஸாதிகா மிக்க நன்றி.

சங்கீதா மிக்க நன்றி.

மேனகா மிக்க நன்றி.

athira said...

ஆவ்வ்வ் புரோன் கறி சூப்பர்.

Asiya Omar said...

மிக்க நன்றி அதிரா,அவசரத்திலும் அழகான கருத்து,மகிழ்ச்சி.

RV @ Food for 7 Stages said...

Vazhthukkal Asiya. You have a wonderful collection of recipes and as Bharathi mentioned you are awesome.

Anamika said...

i tried this yesterday for first time . it came out really well.. Thanks Asiya akka