Saturday, March 9, 2013

ஆத்தூர் மிளகு கோழி / Aathur Pepper Chicken


ஆத்தூர் மிளகு கறி குறிப்பை சமையல் அட்டகாசங்கள் ஜலீலா மட்டனில் செய்து காட்டியிருந்தாங்க, நான் சிக்கனில் முயற்சி செய்தேன் மிக அருமையாக இருந்தது.நீங்களும் விரும்பினால் செய்து பாருங்க.

தேவையான பொருட்கள்;
ஊற வைக்க:
சிக்கன் -அரை-  முக்கால் கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 2
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
 சிக்கன் துண்டுகளை சுத்தமாக அலசி தண்ணீர் வடித்துக் கொள்ளவும்.

பின்பு அத்துடன் நறுக்கிய,வெங்காயம் தக்காளி ,மஞ்சள் தூள்,தேவைக்கு உப்பு சேர்த்து கலந்து ஊற விடவும்.
அரைக்க:
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
தனியா - 1 டீஸ்பூன்
பட்டை - ஒரு சிறிய துண்டு
கிராம்பு -3
ஏலக்காய் - 1
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பூண்டு - 5 பற்கள்
முந்திரி - 5
தேங்காய் - 2 -3  டேபிள்ஸ்பூன்

 மேலே குறிப்பிட்டவற்றை நைசாக அரைத்து எடுக்கவும்.
 அரைத்த விழுதை ஊறிக் கொண்டிருக்கும் சிக்கனுடன் சேர்க்கவும்.
நன்கு கலந்து மீண்டும் சிறிது ஊறட்டும்.

தாளிக்க :
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு
நறுக்கிய மல்லி இலை - சிறிது (அலங்கரிக்க)

 ஒரு கடாயில் அல்லது குக்கரில் எண்ணெய் விடவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.இஞ்சி பூண்டு சேர்க்கவும்,வதக்கவும், கருவேப்பிலை சேர்க்கவும்.
 மசாலாவில் ஊறிய சிக்கனை சேர்க்கவும்.
 நன்கு பிரட்டி விடவும்.உப்பு சரி பார்க்கவும்.
 குக்கர் என்றால் 2 விசில் வரவும் அடுப்பை அணைக்கவும்.கடாயில் என்றால் சிக்கன் வெந்து நன்கு எண்ணெய் மேலே வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.நறுக்கிய மல்லி இலை தூவவும். பிரட்டி விட்டு பரிமாறவும்.

 சுவையான ஆத்தூர் மிளகு கோழி ரெடி.வெறும் சாதம், கட்டி பருப்பு,ரசத்துடன் பரிமாறலாம்.சப்பாத்தி ஆப்பம்,தோசையுடனும் அருமையாக இருக்கும்.

பகிர்வுக்கு நன்றி ஜலீலா.



14 comments:

ராதா ராணி said...

நிறைய மிளகு சேர்த்த கறி ஒரு நல்ல ஆரோக்கியமாவும் சுவையும் தூக்கலாக நல்லா இருக்கும்.. இந்த கறிக்கு சாதம் கொஞ்சம் கூடுதலாக உள்ள போகும் ஆசியா..

Asiya Omar said...

நன்றி ராதா கருத்திற்கு மகிழ்ச்சி.எங்க எல்லோருக்கும் மிகவும் பிடித்திருந்ததது.செய்து பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்.

Priya Suresh said...

Mouthwatering here, super chicken curry akka.

Asiya Omar said...

ஆமாம் ப்ரியா டேஸ்ட் சூப்பர்.வருகைக்கு நன்றி.

ஸாதிகா said...

ஆத்தூர் மிளகுக்கோழி கண்டிப்பாக செய்து பார்த்திடணும்.

Asiya Omar said...

செய்து பாருங்க ஸாதிகா, வருகைக்கு நன்றி..

Meena Selvakumaran said...

superb yummy chicken.

Asiya Omar said...

மீனா கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

S.Menaga said...

நாவூறுது..சூப்பரா இருக்கு!!

Snow White said...

Super Akka ... Nanum intha Sunday try pana poren ...

Asiya Omar said...

கருத்திற்கு நன்றி மேனகா.

ஸ்னோ ஒயிட் செய்து பாருங்க பிடிக்கும்,நான் மட்டனில் ஒரு நாள் செய்து பார்க்க வேண்டும்..

Jaleela Banu said...

மிக அருமை யாக செய்து காட்டி இருக்கீங்க, ஆசியா.

இதைநான் மட்டனில் செய்வதை விட சிக்கனில் செய்வது தான் அதிகம்.

பகிர்வுக்கு மிக்க நன்றி

Barakath said...

Assalamu Alaikkum... Akka, Naan senju paarththen... Romba nalla irundhuchu. But kaaram kammiyaa irundhuchu... yenakku indha thekkarandi alavu theriyala....

Asiya Omar said...

பரக்கத் செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மகிழ்ச்சி.நன்றி. ஒரு டேபிள்ஸ்பூன் என்றால் 3 டீஸ்பூன் மிளகு சேர்க்க வேண்டும், காரம் சரியாக இருக்குமே,2 வற்றல் வேறு சேர்க்கிறோம்.அடுத்த முறை செய்யும் பொழுது உங்க டேஸ்ட்டிற்கு காரம் கூட்டிக் கொள்ளுங்கள்.